தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதல் நாளே விறுவிறுப்பாக நடந்த வேட்புமனுத் தாக்கல்

30 Mar 2026, 3:40 pm
முதல் நாளே விறுவிறுப்பாக நடந்த வேட்புமனுத் தாக்கல்
<p><strong>முதல் நாளே விறுவிறுப்பாக நடந்த வேட்புமனுத் தாக்கல்</strong></p> <p>சென்னை, மார்ச் 30- தமிழ்நாட்டில் 17 ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெறும் பொது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்களன்று (மார்ச் 30) காலை 11 மணிக்கு தொடங்கியது. &nbsp;தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் புதிய புதிய அறிவிப்புகளால் பரபரப்பாக காணப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் தினசரி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 தேதி. &nbsp;4 நாட்கள் மட்டுமே... மார்ச் 31-மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 1-வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு, ஏப்ரல் 3-புனித வெள்ளி, ஏப்ரல் 5-ஞாயிற்றுக்கிழமை. 8 நாட்களில், 4 நாட்கள் பொது விடுமுறை வருவதால், 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 2, 4, 6 என 3 நாட்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையம் கொடுத்த 8 நாள் அவகாசத்தில் வேட்பாளர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே உள்ளன. &nbsp;முதல் நாளிலேயே தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் மனுத் தாக்கலைதொடங்கினர். &nbsp;திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தனது சொந்தத் தொகுதியான காட்பாடியில் 13 ஆவது முறையாக மனுத் தாக்கல் செய்தார். அதேபோல், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு திருச்சி மேற்கு தொகுதியிலும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை தொகுதியிலும் வேட்பு மனுத் தாக்கதல் செய்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காரைக்குடி தொகுதியிலும், தேர்தல் களத்திற்கு முதல்முறையாக வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதியிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. டெபாசிட் தொகை &nbsp;பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயும், தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 5 ஆயிரம் ரூபாயும் வைப்புத்தொகை (டெபாசிட்) செலுத்த வேண்டும். முதல் நாளிலேயே தமிழ்நாடு முழுவதும் சுமார் 450-க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.