தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு

6 Apr 2026, 4:15 pm
தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு
<p><strong>தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு</strong></p> <p>சென்னை, ஏப். 6 - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 6 &nbsp;ஆம் தேதி மாலை 3 மணியுடன் நிறைவுபெற்றது. &nbsp;இணையதளம் &nbsp;மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய வேட்பு &nbsp;மனுத் தாக்கல் காலை 11 மணி முதல் மாலை &nbsp;3 மணி வரை நடைபெற்றது. தேர்தல் ஆணை யத்தின் Suvidha 2.0 இணையதளம் அல்லது &nbsp;செயலி மூலம் மனு தாக்கல் செய்யும் வசதி யும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், ஆன்லைனில் தாக்கல் செய்த படிவத்தின் &nbsp;அச்சுப் பிரதியை நேரில் கொண்டுவந்து &nbsp;சமர்ப்பிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகள் &nbsp;வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வேட்பாள ருடன் மூன்று நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். அதிகபட்சம் மூன்று வாகனங் களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. &nbsp;வேட்பு மனுவுடன் வேட்பாளரின் புகைப் படம், சொத்து மற்றும் குற்றப் பின்னணி &nbsp;குறித்த பிரமாணப் பத்திரம் ஆகியவற்றை யும் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 4 நாட்கள் மட்டுமே அவகாசம் &nbsp;மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை 8 நாட்கள் அவ காசம் வழங்கப்பட்டிருந்தாலும், மார்ச் 31, &nbsp;ஏப்ரல் 1, 3, 5 ஆகிய நான்கு நாட்கள் விடு முறை என்பதால் மொத்தமே நான்கு நாட்கள் &nbsp;மட்டுமே வேட்பு மனுத் தாக்கலுக்கு கிடைத்தன. டோக்கன் &nbsp;கடைசி நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி ஆளுங் கட்சி கூட்டணி மற்றும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவில் மனுத் &nbsp;தாக்கல் செய்தனர். இதனால் மாநிலம் முழு வதும் 234 சட்டமன்றத் தொகுதி அலுவல கங்களிலும் மாலை 3 மணிக்குப் பிறகும் வரிசையில் காத்திருந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் அலுவல கங்கள் மூடப்பட்டன. இந்த ஏற்பாடுகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா &nbsp;பட்நாயக் உத்தரவுப்படி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்திருந்தனர். தலைவர்கள் &nbsp;மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உட்பட பல அமைச்சர்களும் மனு &nbsp;தாக்கல் செய்தனர். காங்கிரஸ் மாநிலத் &nbsp;தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புத் தூர் தொகுதியிலும், தேமுதிக பொதுச் செய லாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் &nbsp;தொகுதியிலும் மனுத் தாக்கல் செய்தனர். &nbsp;முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல் வம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சௌமியா அன்புமணி, ஒன்றிய &nbsp;இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். 6,100 மனுக்கள் இரவு 8 மணி நிலவரப்படி சுமார் 6,100 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் &nbsp;ஆணையம் தெரிவித்தது. அவற்றில் ஆண்கள் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர், பெண்கள் சுமார் ஆயிரம் பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என அதிகாரிகள் தெரி வித்தனர். &nbsp;தமிழ்நாட்டில் ஒரே ஒரு திருநர் மூன்றாம் பாலினத்தவராக வேட்பு மனுத் &nbsp;தாக்கல் செய்தவர் சென்னை வில்லி வாக்கம் தொகுதியைச் சேர்ந்தவர். அந்தத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கார்த்திக் &nbsp;மோகனும், தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனாவும் போட்டியிடுகின்றனர். இன்று பரிசீலனை &nbsp;ஏப்ரல் 7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை &nbsp;வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படு கின்றன. எத்தனை மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன, எத்தனை தள்ளுபடி செய்யப் பட்டன என்ற விவரங்கள் வெளியிடப்படும். மனுத் தாக்கல் செய்தவர்கள் வரும் ஏப்ரல் 9 &nbsp;ஆம் தேதி வரை தங்கள் மனுக்களை திரும்பப் &nbsp;பெற்றுக் கொள்ளலாம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.