முந்தய பக்கம்

அரசாங்கத்தின் 5 ஆவது கிளை உரிமை அமைப்புகள்!

11 Apr 2026, 5:30 am
அரசாங்கத்தின் 5 ஆவது கிளை உரிமை அமைப்புகள்!

அரசாங்கத்தின் 5 ஆவது கிளை உரிமை அமைப்புகள்!

டாக்டர் வி.ராமராஜ் பேச்சு நாமக்கல், ஏப்.10- உரிமை சார்ந்த அமைப்புகளும் மற்றும் வைய நிதி அமைப்புகளும் அரசாங்கத்தின் ஐந்தாவது கிளையாக உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வி.ராமராஜ் தெரிவித்தார்.

நாமக்கல் அரசு சட்ட கல்லூரியில் ‘உரிமைகள் சார்ந்த சட்டவியலின் பரிமாணம் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றுகையில், ஜனநாயகத்தில் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று கிளைகளுக்கு இணையாக, தேர்தல் நடத்தும் அமைப்புகள் நான்காவது கிளையாக கருதப்படுகிறது.

ஆனால், அரசியல் அமைப்பு உருவான பிறகு தோன்றிய மனித உரிமை ஆணையங்கள், தகவல் உரிமை ஆணையங்கள், லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளுக்கு அரசியலமைப்பு சட்ட ரீதியான உரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram