கால்பந்து உலகக் கோப்பை : ரசிகர்களை இணைக்கும் பொதுத் திரையிடல்!
14 Jul 2026, 9:40 pm

கால்பந்து உலகக் கோப்பை : ரசிகர்களை இணைக்கும் பொதுத் திரையிடல்!

உலகின் மிகப்பெரிய விளை யாட்டுத் திருவிழாவாகக் கருதப்படும் பிபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் தற்போது கோலா கலமாக நடைபெற்று வருகின்றன. உல கம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டிகளை ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர். இந்தியா விலும் கால்பந்து ரசிகர்களின் எண்ணி க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வேளையில், அனைத்துப் போட்டிகளும் அதிகக் கட்டண அடிப்படையிலான ஓடிடி (OTT) தளங்களில் மட்டுமே நேரடியாக ஒளிபரப்பப்படுவதால், சாதாரண ரசிகர்களால் அவற்றைப் பார்ப்பது சாத்தியமில்லாமல் போயுள்ளது. இத்தகைய சூழலில், கோவை நவஇந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர். அரங்கில் பெரிய திரையில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்கள் இலவசமாக உலகக் கோப்பை போட்டி களைப் பார்ப்பதற்காகப் புரொஜெக்டர் மூலம் நேரடித் திரையிடலுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து ஒளிபரப்பப் பட்டு வரும் இந்த முயற்சி, விளையாட்டு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்களின் அனல் பறக்கும் ஆர்வம்

போட்டி தொடங்கும் நேரத்திற்கு முன்பே ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், குடும்பத்தினர் எனப் பல்வேறு தரப்பின ரும் திரண்டு வந்து அமர்ந்து போட்டி களைக் கண்டு ரசிக்கின்றனர். ஒவ்வொரு கோல் அடிக்கப்படும் தருணத்திலும் எழும் ஆரவாரம், கைதட்டல், உற்சாகக் குரல்கள் அந்த இடத்தை ஒரு சிறிய கால்பந்து மைதானமாகவே மாற்றுகின்றன.

குறிப்பாக, கடந்த வாரம் நடை பெற்ற அர்ஜெண்டினா அணியின் விறு விறுப்பான கால் இறுதியாட்டத்தின்போது அரங்கம் முழுக்கப் பதற்றம் தொற்றிக் கொண்டது. நீலமும் வெள்ளையும் கலந்த அர்ஜெண்டினாவின் ரசிகர்கள் திரைக்கு முன்னால் பரபரப்பாக நகம் கடித்தபடி அமர்ந்திருந்தனர். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில், மெஸ்ஸி அனுப்பிய அந்த அசாத்திய பாஸைப் பெற்றுக்கொண்டு, சக வீரர் எதிரணியின் தடுப்பு அரண்களை மின்னல் வேகத்தில் தகர்த்து கோல் கம்பத்திற்குள் திணித்த அந்த நொடியில்... எஸ்.என்.ஆர். அரங்கமே அதிர்ந்தது! இருக்கை நுனிக்கே வந்த ரசிகர்கள், தங்களது விருப்பமான அர்ஜெண்டினா அணி கோல் அடித்ததும் துள்ளிக் குதித்து, கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். “மெஸ்ஸி... மெஸ்ஸி...” என்கிற முழக்கமும், விசில் சத்தமும் விண்ணைத் தொட்டன. ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட் வரை நகர்ந்த போது, ரசிகர்களின் இதயத் துடிப்பு எகிறியது. அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் காற்றில் பாய்ந்து பந்தைத் தடுத்த ஒவ்வொரு முறையும் எழுந்த கைதட்டல் களும், தவறவிடப்பட்ட வாய்ப்புகளின் போது எழுந்த பெருமூச்சுகளும் மைதானத்தின் நேரடிப் புல்லரிப்பை அச்சு அசலாக அங்கே கொண்டுவந்து சேர்த்தன. பிரம்மாண்ட திரையின் முன் குழுமியிருந்த கோவை ரசிகர்கள் காட்டிய இந்த அனல் பறக்கும் உற்சாகம், அவர்களை அர்ஜெண்டினா ரசிகர்கள் அலைகடலெனத் திரளும் லுசைல் மைதானத்திலேயே நேரடியாக அமர வைத்தது போன்றதொரு மாயா ஜால அனுபவத்தை ஏற்படுத்தியது.

எல்லையற்ற விளையாட்டு; எல்லை கடந்த ஒற்றுமை!

அர்ஜெண்டினா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல், இங்கிலாந்து என உலகப் புகழ்பெற்ற வெவ்வேறு அணி களுக்கு ஆதரவாகப் பிரிந்து கிடக்கும் ரசிகர்கள் கூட இங்கே ஒரே கூரையின் கீழ் அமர்ந்து, ஆரோக்கியமான விளையாட்டு உணர்வுடன் போட்டிகளை ரசிப்பதுதான் வியப்பின் உச்சம். களத்தில் அணிகள் மோதிக்கொண்டாலும், திரைக்கு முன்னால் ரசிகர்கள் காட்டும் பரஸ்பர மரியாதை அலாதியானது. போட்டி முடிந்த அடுத்த நொடிக் கார சாரமான விவாதங்களை விடுத்து, ஒருவர் மற்றவரை வாழ்த்தி, கைகுலுக்கி, தோள் தட்டிப் பிரியும் அந்த நல்வாய்ப்பு கள் — விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது மக்களை இதயப்பூர்வமாக இணைக்கும் ஆகச் சிறந்த சக்தி என்பதை உரக்கச் சொல் கிறது.

கார்ப்பரேட் சுமையை உடைத்த எளியோருக்கான ஏற்பாடு

இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில் உலகத் தரம் வாய்ந்த போட்டிகள் யாவும் சாமானியர்களின் எட்டாக்கனியாக, அதிகக் கட்டண அடிப்படையிலான ஓடிடி தளங்களுக்குள் முடங்கிப் போயுள்ளன. இத்தகைய சூழலில், மாதச் சந்தா செலுத்த முடியாத ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கக் கால்பந்து ரசிகர்களுக்கு இந்த இலவசப் பொதுத் திரையிடல் ஒரு வரப்பிர சாதமாக அமைந்துள்ளது.

வயது, தொழில், மதம், மொழி, வர்க்கம் எனச் சமூகம் கட்டமைத்துள்ள எந்தவொரு செயற்கை வேறுபாடுகளும் இன்றி, எளிய மக்களும் மேல்தட்டு மக்க ளும் தோளோடு தோள் உரசி ஒன்றாக அமர்ந்து போட்டிகளைக் கொண்டாடு கிறார்கள். இது சமூக ஒற்றுமைக்கும், முற்போக்கான நல்லிணக்கத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும். கார்ப்பரேட் வணிகச் சுமையை உடைத்து, விளையாட்டை மக்களுக்கே திருப்பித் தந்துள்ள இந்த மக்கள் நல முயற்சியை நகரின் பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்கின்றனர்.

கோவையில் தொடங்கப்பட்ட இந்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற பொதுத் திரையிடல்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கால்பந்து ரசிகர்களிடையே எழுந்துள்ளது. விளையாட்டு என்பது வெற்றி, தோல்வியைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் பொதுமொழி. கோவை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் இந்த பொதுத் திரையிடல், கால்பந்து ரசிகர்களுக்குப் போட்டிகளை ரசிக்கும் வாய்ப்பை வழங்கு வதோடு, ஒற்றுமை, நட்பு, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தையும் வலுப் படுத்தும் சிறந்த முயற்சியாகத் திகழ்கிறது. - ஆசாத்