விளையாட்டு
21 May 2026, 11:00 pm

“எங்கள் பொறுப்பு அல்ல” இந்தியாவில் கால்பந்து உலகக்கோப்பை ஒளிபரப்பு குறித்து பிரசார் பாரதி மழுப்பல்

23ஆவது சீசன் உலகக்கோ ப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் 11ஆம் தேதி தொடங்குகிறது. போட்டியை நடத்தும் நாடுகளின் நேரப்படி இந்தி யாவில் நள்ளிரவில் தான் உல கக்கோப்பையை பார்க்க முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால் இந்தி யாவின் உலகக்கோப்பை ஒளிபரப்பு உரிமையை இதுவரை எந்த நிறுவ னமும் வாங்கவில்லை. தில்லி உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குத் தொடரப் பட்டுள்ள நிலையில், தூர்தர்சன் மூலம் ஒளிபரப்ப திட்டம் எதுவும் உள்ளதா? என ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் தொடர்பாக தில்லி உயர்நீதி மன்றத்தில் பிரசார் பாரதி (தூர்தர் சன்) விளக்கம் அளித்துள்ளது. அதில் “இந்தியாவில் உலகக்கோப்பையின் ஒளிபரப்பு உரிமைகளைப் பெறுவது தங்களது பொறுப்பு அல்ல. திடீரென ஏன் எங்களது பொறுப்பு பற்றி பேசப் படுகிறது?” என பிரசார் பாரதி தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதி உல கக்கோப்பை கால்பந்து ஒளிபரப்புப் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பது, இந்தியக் கால்பந்து ரசிகர்களிடையே கவலையை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ஜூன் 12 அன்று தொடங்கவுள்ள இந்த பிரம்மா ண்ட உலகக்கோப்பை தொடரை எந்த சேனலில் பார்ப்பது என்று தெரியாமல் பாரம்பரிய கால்பந்து ரசிகர்களும், இன்றைய இளைய தலைமுறை யினரும் குழப்பத்தில் உள்ளனர்.

மும்பை கேப்டனுக்கு அபராதம்

புதனன்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின் 10ஆவது ஓவரில் (கொல்கத்தா பேட்டிங்) மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பந்துவீச்சுக்கான ‘ரன்-அப்’ பகுதிக்குத் திரும்பிச் செல்லும் போது, திடீரென ஸ்டெம்பின் மீது இருந்த பெயில்ஸ்களை பலமாகத் தட்டி கீழே தள்ளினார். இது ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ மீறும் செயலாகும். இந்த விதியானது “போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள் அல்லது மைதானப் பொருட்கள் மற்றும் விக்கெட்டுகளைச் சேதப்படுத்துதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல்” ஆகியவற்றைத் தடை செய்கிறது. தவறை ஹர்திக் பாண்டியா ஒப்புக்கொண்ட தால், ஐபிஎல்-இன் நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதற்காக போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமும், ஒரு குறைபாடு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு டிக்கெட் விலை ரூ.40 லட்சம் முதல் ரூ.70 லட்சம்

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான ‘பிரீமியர் லீக்’ தொடரின் இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் அர்சனல் - கிறிஸ்டல் பேலஸ் அணிகள் மோதுகின்றன. 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பிரீமியர் லீக் கோப்பையைக் கைப்பற்ற அர்சனல் களமிறங்கியுள்ளதால், இறுதி ஆட்டம் நடைபெறும் செல்ஹர்ஸ்ட் பார்க் மைதானத்தில் (லண்டன் - இங்கிலாந்து) இருக்கை டிக்கெட் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அர்சனல் ரசிகர்கள் அமரும் ‘அவே எண்ட்’ பகுதிக்கான டிக்கெட்டுகள், ‘சீட்பிக்’ என்ற மறுவிற்பனை இணையதளத்தில் அதிகபட்சமாக 45,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.48 லட்சம்) பட்டியலிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், விஐபி, விருந்தினர்களுக்கான சில சிறப்பு இருக்கைகள் 65,000 பவுண்டுகள் (ரூ.70 லட்சம்) வரை தொட்டுள்ளது.