உலகக்கோப்பை கால்பந்தின் புதிய சரித்திரம் பல்வேறு சாதனைகளைத் தகர்த்தெறிந்த 23ஆவது சீசன் குரூப் சுற்று
29 Jun 2026, 9:42 pm
<p><strong>உலகக்கோப்பை கால்பந்தின் புதிய சரித்திரம் பல்வேறு சாதனைகளைத் தகர்த்தெறிந்த 23ஆவது சீசன் குரூப் சுற்று</strong></p><p>23ஆவது சீசன் கால்பந்து தொடரின் லீக் சுற்றில், அதாவது முதல் 17 நாட்களிலேயே கால்பந்து உலகம் கண்டிராத பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கா குரூப் சுற்றுகளின் முடிவில் 32 அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன (ஐரோப்பா - 13, ஆப்பிரிக்கா - 9, தென் அமெ ரிக்கா - 5, வட அமெரிக்கா - 3, ஆசியா - 2). இதில் உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 9 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளன. 215 கோல்கள், மெஸ்ஸி குரூப் சுற்றில் மட்டும் மொத்தம் 215 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன (சராசரியாக ஒரு போட்டிக்கு 3 கோல்கள்). பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 10 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளன. அதே போல உலகக்கோப்பையில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை மெஸ்ஸி (அர்ஜெண்டினா கேப்டன்) படைத்துள்ளார். மேலும், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 19 கோல்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். அதோடு, உலகக்கோப்பையில் ஹாட்ரிக் கோல் அடித்த மிக வயதான வீரர் (38 வயது 357 நாட்கள்) என்ற பெருமையும் மெஸ்ஸியிடம் தான் உள்ளது. 46 லட்சம் ரசிகர்கள் குரூப் சுற்றின் 72 போட்டிகளை மைதா னத்தில் நேரில் காண 46,44,549 (4.6 மில்லியன்) ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர். இது 1994 அமெரிக்க உலகக்கோப்பையின் மொத்த சாதனையான 35 லட்சத்தை குரூப் சுற்றி லேயே முறியடித்துள்ளது. மைதானங்களின் இருக்கைகள் 99.7% நிரம்பின. குறிப்பாக, ஜூன் 25 அன்று ஒரே நாளில் மட்டும் 4,26,834 ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து புதிய சாதனை படைத்தனர். அதே போல உலகெங்கிலும் உள்ள ‘FIFA Fan Festivals’ எனப்படும் பொதுக் கொண்டாட்ட மையங்களில் 55 லட்சம் (5.5 மில்லியன்) ரசிகர்கள் கூடிப் போட்டிகளைக் கொண்டாடியுள்ளனர். (நாளை - தொடரும்)</p>
