விளையாடு
17 Jul 2026, 8:51 pm

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

ரூ. 280 கோடி பரிசுத்தொகை யாருக்கு? 3ஆவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரான்ஸ் - இங்கிலாந்து பலப்பரீட்சை

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதியில் தோல்வி யடைந்த அணிகளுக்கு நடத்தப்படும் 3ஆவது இடத்திற்கான ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை நடைபெறுகிறது. பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இந்த ஆட்டம் அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு வெண்கலப்பதக்கம் மற்றும் ரூ. 280 கோடி பரிசுத்தொகை தரப்பட உள்ளது. அதே போல 4ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.260 கோடி வழங்கப்படும். இதனால் வெண்க லப்பதக்க அந்தஸ்துடன் தாய்நாடு திரும்ப பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் தீவிர பயிற்சியுடன் களமிறங்கு வதால், உலகக்கோப்பை தொடரின் 3ஆவது இடத்திற்கான ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் - இங்கிலாந்து

இடம் : மியாமி, அமெரிக்கா நேரம் : ஞாயிறன்று அதிகாலை 2:30 மணி சேனல் : ஜீ 5 (ZEE 5), யுனைட்8 (தொலைக்காட்சி)

வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு தங்க மோதிரம்

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக, நடப்பாண்டு சீசனில் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு, கோப்பை மற்றும் தங்கப் பதக்கங்களுடன் கூடுதலாக, பிரத்யேக மான ‘சாம்பியன்ஷிப் மோதிரங்கள்’ (தங்க மோதி ரம்) வழங்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிபா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க விளையாட்டு மரபு களில் ஒன்றான இந்தச் சாம்பி யன்ஷிப் மோதிர முறை, தற்போது கால்பந்து உலகக்கோப்பையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோதிரத்தின் ஒரு பக்கம் பிபா உலகக்கோப்பையின் சின்னமும், மறுபக்கம் வெற்றி பெறும் அணியின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகை யிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மோதிரமும் தனித்தனி எண்களைக் கொண்டிருக்கும். குறிப்பாக அணி வீரர்களுக்கு ஏற்றவாறு அளவுகள் மாற்றப்பட்டு, சான்றிதழுடன் வழங்கப்படும். ஜெர்சி மைதானத்தில் (நியூயார்க், அமெரிக்கா) நடைபெறும் இறுதிப்போட்டி முடிந்த உடனேயே, வெற்றி பெற்ற அணியின் கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளருக்கு அடையாளமாகத் தற்காலிக மோதிரங்கள் வழங்கப்படும். பின்னர், வீரர்கள் மற்றும் பணி யாளர்களுக்கான 30 மோதிரங்களும் முழுமையாகத் தனிப்பயனாக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும். இந்த மோதிரங்கள் மொத்தம் 2,026 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன (இது உலகக்கோப்பை நடைபெறும் ஆண்டைக் குறிக்கிறது). இதில் 30 மோதிரங்கள் வெற்றி பெறும் அணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,996 மோதிரங்கள் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்காக ‘அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற தயாரிப்புகளாக’ (Official Licensed Products) விற்பனைக்கு வெளியிடப்படும்.

உலக சாம்பியன் யார்? ஞாயிறன்று நள்ளிரவு இறுதிப் போட்டி

அர்ஜெண்டினா-ஸ்பெயின் இடம் : நியூயார்க், அமெரிக்கா நேரம் : நள்ளிரவு 12:30 மணி சேனல் : ஜீ 5 (ZEE 5), யுனைட்8 (தொலைக்காட்சி)

இறுதிப்போட்டியின் நடுவராக ஸ்லாவ்கோ வின்சிக்

23ஆவது சீசன் உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஞாயிறன்று நள்ளிரவு நடை பெறுகிறது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா - முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த இறுதி ஆட்டத்திற்கு நடுவராக ஸ்லாவ்கோ வின்சிக்கை சர்வதேச கால்பந்து சம் மேளனம் (பிபா) அறிவித்துள்ளது. ஸ்லாவ்கோ வின்சிக் ஸ்லோவேனி யாவைச் சேர்ந்த சர்வதேச கால்பந்து நடுவர் ஆவார். 47 வயது. 2010ஆம் ஆண்டு முதல் பிபா நடுவராகச் செயல்பட்டு வருகிறார். உலகின் மிகச்சிறந்த மற்றும் நேர்மையான நடுவர்களில் ஒருவராக அறியப்படு கிறார். மிகவும் கண்டிப்பான குணம் உள்ளவர். கலக்கத்தில் அர்ஜெண்டினா ரசிகர்கள் இறுதிப்போட்டியில் ஸ்லாவ்கோ வின்சிக் நடுவராக செயல்படுவார் என்ற அறிவிப்பு அர்ஜெண்டினா ரசிகர் களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஏனெனில் அர்ஜெண்டினா உலகக்கோப்பையில் சந்தித்த அதிர்ச்சிகரமான தோல்விகளில் ஒன்றின்போது வின்சிக் நடுவராக இருந்தார். வின்சிக் அர்ஜெண்டினா போட்டிகளில் அதிகமுறை நடுவ ராகப் பணியாற்றியதில்லை. ஆனால் 2022 கத்தார் உலகக்கோப்பையில் சவூதி அரேபியாவுக்கு எதிராக அர் ஜெண்டினா விளையாடிய தொடக்கப் போட்டியில் மட்டுமே நடுவராக இருந்தார். அந்தப் போட்டியில் வின்சிக் அர்ஜெண்டினாவுக்கு 8ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை வழங்கினார். அதை மெஸ்ஸி கோலாக மாற்றினார். சவூதி அரே பிய வீரர்களுக்கு மொத்தம் 6 மஞ்சள் அட்டைகளை வின்சிக் வழங்கினார். இருப்பினும், அந்தப் போட்டியில் அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்தது. வின்சிக்கின் கண்டிப்பான அணுகுமுறையால் தான் அர்ஜெண்டினா தோல்வியடைந்தது என விமர்சனங்கள் கிளம்பின. இத னால்தான் அர்ஜெண்டினா ரசி கர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஸ்பெயின் வின்சிக் ஸ்பெயின் அணியின் முக்கியமான போட்டிகளில் அடிக்கடி நடுவராக இருந்துள்ளார். 2017இல் கொலம்பியாவுக்கு எதிரான நட்புப் போட்டி மற்றும் யூரோ 2020இல் ஸ்வீட னுக்கு எதிரான போட்டி ஆகிய வற்றில் வின்சிக் பணியாற்றியுள் ளார். 2023இல் இத்தாலிக்கு எதி ரான யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் அரை இறுதியிலும் அவரே நடுவர். யமால் அணியில் முக்கிய வீரராக வந்த பிறகு, யூரோ 2024இல் இத்தாலி மற்றும் பிரான்சுக்கு எதிரான போட்டி களில் வின்சிக் நடுவராக இருந்த போது ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.