விளையாட்டு
13 Jun 2026, 10:26 pm

விளையாட்டு

வியாழனன்று தொடங்கிய 23 ஆவது சீசன் உலகக்கோப் பை கால்பந்து தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய நேரத்தின்படி வெள்ளியன்று நள்ளிரவு கனடாவின் டொராண்டோ மைதானத்தில் 3ஆவது லீக் ஆட்டம் நடைபெற்றது. கனடா - போஸ்னியா அணிகள் மோதின. கனடா போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்று என்பதால், கோலாகல நிகழ்ச்சிகளுடன் போட்டியை துவக்கி வைத்தது. இந்த ஆட்டத்தின் 21ஆவது நிமி டத்தில் போஸ்னியா அணி (சீட் கோலாசி னாக்) கோலடித்தது. ஆட்டத்தின் 70 ஆவது நிமிடம் வரை எந்த அணியும் கோல டிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் போஸ்னியா வெற்றி பெறும் என எதிர் பார்க்கப்பட்டது. எனினும் 76ஆவது நிமி டத்தில் கனடா அணியில் மாற்று வீரராக களம் புகுந்த சைல் லாரின், களத்திற்கு வந்த இரண்டே நிமிடங்களில் (78ஆவது நிமிடம்) கோலடித்தார். அதன்பின்னர் இரு அணிகளும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் பலன் தராததால், ஆட்டம் டிராவில் (1-1 என்ற கோல் கணக்கில்) முடிவடைந்தது. உல கக்கோப்பை கால்பந்து வரலாற்றில் கனடா அணி பெறும் முதல் புள்ளி (டிரா மூலம் கிடைத்த புள்ளி) இதுவாகும். இதற்கு முன் விளையாடிய 6 உலகக் கோப்பை போட்டிகளிலும் அந்த அணி தோல்வியைத் தழுவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா 4-1

4ஆவது லீக் ஆட்டம் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெ ரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத் தில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளுடன் நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா - பராகுவே அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7ஆவது நிமி டத்திலேயே பராகுவே வீரர் டேமியன் பொபாடிலா செய்த தவறால் அமெரிக்க அணிக்கு ‘ஓன் கோல் (சேம் சைடு)’ கிடைத்தது. தொடர்ந்து அமெரிக்காவின் போலாரின் பாலுகன் ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்திலும், பின்னர் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+5’ நிமிடம்) அடுத்தடுத்து கோலடித்தார். இதனால் முதல் பாதியிலேயே அமெ ரிக்கா 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியின் 72 ஆவது நிமிடத்தில் பராகுவே அணியின் மாற்று வீரர் மொரிசியோ கோலடித்தார். எனினும் அந்த அணியால் தொடர்ந்து கோலடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் இறுதிப் பகுதி வரை கட்டுக்கோப்பாக விளையாடிய அமெரிக்க அணி, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+8’ நிமிடம் - ஜியா) மேலும் ஒரு கோலடித்தது. இறுதியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இன்று நள்ளிரவு நடைபெறும் ஆட்டங்கள்

நெதர்லாந்து - ஜப்பான் (குரூப் எப்) நேரம் : நள்ளிரவு 1:30 மணி (ஜூன் 15) இடம் : டல்லாஸ், அமெரிக்கா

ஐவரி கோஸ்ட் - ஈக்வடார் (குரூப் இ) நேரம் : அதிகாலை 4:30 மணி (ஜூன் 15) இடம் : பிலடெல்பியா, அமெரிக்கா

சேனல் : ஜீ 5 (ஓடிடி - இலவசம் இல்லை), யுனைட்8 (தொலைக்காட்சி)

மகளிர் டி-20 உலகக்கோப்பை இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

10ஆவது சீசன் மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன. பர்மிங்ஹாம் நகரில் நடைபெற உள்ள இந்த ஆட்டம் ஞாயிறன்று இரவு 7 மணிக்கு தொடங்கு கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இதே பர்மிங்ஹாம் மைதா னத்தில் மாலை 3:00 மணிக்கு நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடம் : பர்மிங்ஹாம், இங்கிலாந்து

நேரம் : இரவு 7 மணி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)