விளையாடு
20 Jun 2026, 11:33 pm

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

ஹாட்ரிக் கோலடித்து பிரேசில் அபார வெற்றி

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலை யில், இந்திய நேரப்படி சனியன்று நடைபெற்ற குரூப் சி பிரிவுக்கான ஆட்டம் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் - ஹைத்தி அணிகள் மோதின. தொடக்கம் முதலே முன்களத்தில் பிரேசில் ஆதிக்கம் செலுத்தியது. இதன் பலனாக ஆட்டத்தின் 23ஆவது நிமி டத்தில் பிரேசில் (குன்ஹா) கோலடித்தது. தொடர்ந்து 36ஆவது நிமிடத்தில் குன்ஹா மேலும் அடித்தார். முதல் பாதியின் உதிரி நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் (45+3’) கோலடித்தார். இதன்மூலம் பிரேசில் முதல் பாதியிலேயே 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2ஆம் பாதியில் கிடைத்த வாய்ப்புகளை மட்டும் கோலடிக்க பிரேசில் முயற்சி செய்தது. ஆனால் கோலடிக்கவில்லை. ஹைத்தி வீரர்களும் பிரேசில் அணி யிடம் பந்தை பறித்து கோலடிக்க தீவிர மாக முயற்சி செய்தனர். ஆனால் முடிய வில்லை. இறுதியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வெள்ளியன்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - ஆஸ்திரேலியா (குரூப் டி) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பார்ஜஸ் செய்த தவறால் அமெரிக்காவிற்கு சேம் சைடு கோல் கிடைத்தது. தொடர்ந்து அமெரிக்கா வீரர் பிரீமேன் 43ஆவது நிமிடத்தில் கோலடிக்க அமெரிக்கா முதல் பாதியில் 2-0 என கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் எந்த கோலும் விழவில்லை. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

மொரோக்கோ அசத்தல்

குரூப் சி பிரிவின் லீக் ஆட்டத்தில் மொரோக்கோ - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்றது. ஆட்டத்தின் 2ஆவது நிமிடத்தில் மொரோக்கோ அணி கோலடித்தது. தந்திரமாக செயல்பட்டு அந்த அணியின் இஸ்மாயில் சைபரி 70ஆவது நொடிக்கு பின்னர் கோலடித்தார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் மொரோக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. மொரோக்கோ அணி கோலடித்துவிட்டால் அந்த அணியிடம் பந்தை பறிப்பது மிக கடினம் என்பதை ஸ்காட்லாந்து அணி உணராததே தோல்வி க்கு காரணம் ஆகும்.

நடப்பு உலகக்கோப்பை சீசனின் அதிவேக கோல்

64ஆவது நொடியிலேயே கோலடித்த பராகுவே வீரர்

குரூப் டி பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் பராகுவே - துருக்கி அணிகள் மோதின. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 64 நொடியிலேயே பராகுவே வீரர் கலார்சா கோலடித்தார். இதன் மூலம், இந்த நடப்பு உலகக்கோப்பைத் தொடரின் “அதிவேக கோல்” (Fastest Goal) என்ற சாதனையை பராகுவே அணி தனது வசமாக்கியுள்ளது. உலக சாதனை அல்ல ஆனால் இந்த கோல் உலக சாதனை அல்ல. உலகக்கோப்பை வரலாற்றின் அதிவேக கோல் துருக்கி வீரரால் அடிக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தென் கொரியா அணிக்கெதிரான ஆட்டத்தில் துருக்கி வீரர் ஹக்கான் சாகூர் 11ஆவது நொடியில் கோலடித்தார். இதுதான் கால்பந்து உலகக்கோப்பையின் அதிவேக கோலாகும். ஆட்டநேர முடிவில் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சாதனை கோலுடன் வெற்றி பெற்றாலும் பராகுவே அணி (அல்மிரான் 45+3’) சிவப்பு அட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ஷாட்கள் அதிகம்

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடப்பு சீசன் கால்பந்து தொட ரில் அதிரடி ஷாட்கள் அதிகமாக விளாசப்பட்டு வருகின்றன. அதாவது விங்கர் வேகத்தில் செல்லும் பந்துகள் கார்னர் கிக் பகுதியை நெருங்கும் போதே ஷாட்கள் மூலம் கோல் கம்பம் நோக்கி பாய்கிறது. இதுவரை 45% ஷாட்கள் கோலாகியுள்ளன. இளம் வீரர்க ளின் தைரியங்களால் தான் அதிரடி ஷாட்கள் அதிகம் விழு கின்றன. அதுவும் 150 கிமீ வேகத்திற்கும் அதிகமாக சீறி பாய்கிறது. இதனால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கோல் கீப்பர்கள் கடுமையாக திணறி வருகின்றனர். காயங்க ளும் அதிகம் ஏற்படுகின்றன.