தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

11 Jun 2026, 8:50 pm
விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து 2026 தண்ணீருக்கு இவ்வளவு பிரச்சனையா?

ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கியுள்ளது.

இந்த தொடரில் மைதானத்திற்குள் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வர சர்வதேச கால்பந்து (பிபா) சம்மேளனம் தடை விதித்துள் ளது.

மைதானத்தில் இருந்து பாட்டில்களைத் தூக்கி எறியும்போது வீரர்களுக்கோ அல்லது பார்வையாளர் களுக்கோ காயம் ஏற்படும் அபாயம் உள்ளதால், அனைத்து வகையான பாட்டில்களுக்கும் இந்தத் தடை விதிக்கப்படுவ தாக பிபா தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் பிபா வெளியிட்ட அதிகாரப்பூர்வ மைதான நடத்தை விதிகளில்,”சந்தேகத்திற்கு இடமின்றி, ரசிகர்கள் 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட, காலியான, வெளிப் படையான, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில் களை மைதானத்திற்குள் கொண்டு வரலாம்” என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், ஜூன் 2 அன்று புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, “மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்குள் கொண்டு வர அனுமதி இல்லை” என பிபா திடீரென மாற்றியுள்ளது.

வெப்பத்தைச் சமாளிப்பது எப்படி? ஜூன், ஜூலை மாதங்களில் வட அமெரிக்காவில் வெயில் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீர் கட்டுப்பாடு தடையால் தங்களுக்குக் குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்றும், வெயிலை எப்படிச் சமாளிப்பது என்றும் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதிலளித்துள்ள பிபா, “ரசிகர்கள் வெயிலைச் சமாளிக்க அந்தந்த நாட்டு மைதானக் குழுக்களுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். மைதானத்தைச் சுற்றி நீர் தெளிப்பான்கள், பேன்கள், குடிநீர் நிலையங்கள் மற்றும் குளிர்விப்பு கூடாரங்கள் அமைக்கப்படும்.

மேலும், மைதானத்திற்குள் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலையானது, வழக்கமாக அந்த மைதானங்களில் நடக்கும் பிற போட்டிகளின் விலையிலேயே (விலை ஏற்றம் இல்லாமல்) விற்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளது.

கனடா - போஸ்னியா

(குரூப் பி)

நேரம் : நள்ளிரவு 12:30 மணி

இடம் : டொரோண்டோ மைதானம், கனடா

அமெரிக்கா - பராகுவே

(குரூப் டி)

நேரம் : காலை 6:30 மணி (ஜூன் 13)

இடம் : லாஸ் ஏஞ்செல்ஸ் (அமெரிக்கா)

அங்கீகரிக்கப்படாத கொடிகள், முழக்கங்கள் எழுப்பப்பட்டால் உலகக்கோப்பை போட்டிகளை நிறுத்த நேரிடும் அமெரிக்காவிற்கு ஈரான் அரசு கடும் எச்சரிக்கை

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘குரூப் ஜி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான் ஜூன் 15 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நியூசிலாந்தையும், ஜூன் 21 அன்று அதே மைதானத்தில் பெல்ஜியத்தையும், ஜூன் 26 அன்று சியாட்டிலில் எகிப்தையும் எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 3 போட்டிகளும் அமெரிக்காவில் தான் நடக்கிறது. இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் டோன்யாமலி, “உலகக்கோப்பை போட்டிகளின் போது மைதானத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கொடிகள் காட்டப்பட்டாலோ அல்லது தங்களது தேசிய அணிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டாலோ, ஈரான் அணி தனது போட்டிகளை நிறுத்தக்கூடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “போட்டியை நிறுத்துவதற்கு அணியின் மேலாளரே முழுப் பொறுப்பேற்பார் என்று நாங்கள் பிபாவிடம் தெரிவித்துள்ளோம். எகிப்துக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் எந்தவொரு இடையூறும் ஏற்படாது என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற ஆட்டங்களில் இது பற்றி எதுவும் உறுதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.