தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

3 Jun 2026, 9:42 pm
விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து 2026 இன்னும் 8 நாட்கள்

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சீசனில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. அதே போல 16 உலகத்தரம் வாய்ந்த மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.

16 மைதானங்களின் முழு விவரங்கள்

அமெரிக்கா - 11 மைதானங்கள் அமெரிக்காவில் தான் அதிக பட்சமாக 11 மைதானங் களில் உலகக்கோப்பை போட்டிகள் நடக்கின்றன. இறுதிப்போட்டி நியூயார்க் நியூஜெர்சி மைதானத்தில் (மெட்லைப்) நடைபெற உள்ளது. மெட்லைப் - நியூயார்க், ஏடி&டி - டல் லாஸ், மெர்சிடிஸ் பென்ஸ் - அட்லாண்டா, ஹார்ட் ராக் - மியாமி, சோபி - லாஸ் ஏஞ்சல்ஸ், லூமன் பீல்ட் - சியாட்டில், என்ஆர்ஜி - ஹூஸ்டன், லிங்கன் பைனான்சியல் பீல்ட் - பில டெல்பியா, ஆரோஹெட் - கான்சாஸ் சிட்டி, கிலெட் - பாஸ்டன், லெவிஸ் - சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட 16 மைதானங்கள் உலகக்கோப்பை போட்டிக்கு தயாராக உள்ளன. மெக்சிகோ - 3 மைதானங்கள் மெக்சிகோவில் உள்ள புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெகா மைதா னத்தில் தான் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டம் நடைபெறுகிறது. எஸ்டாடியோ அஸ்டெகா - மெக்சிகோ சிட்டி, எஸ்டாடியோ குவாட லஜாரா - குவாடலஜாரா, எஸ்டாடியோ மான்டேரி - மான்டேரி - என 3 மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. கனடா - 2 மைதானங்கள் கனடா நாடு தனது வரலாற்றில் முதல் முறையாக ஆடவர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துகிறது. பிசி பிளேஸ் - வான்கூவர் பிஎம்ஓ பீல்ட் - டொராண்டோ - என 2 பழங்கால சிறப்பு வாய்ந்த மைதானம் வீரர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

விளம்பரம் செய்ய சாய் சுதர்சன் விவகாரம் தான் கிடைத்ததா? பெவிக்கால் நிறுவனத்திற்கு ரசிகர்கள் கடும் கண்டனம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக் கெட் வீரரான சாய் சுதர்சன் இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிறைவு பெற்ற ஐபிஎல் தொடரின் லீக் மற்றும் பிளே சுற்று ஆட்டங்களில் சாய் சுதர்சன் ஒரே முறையில் ஹிட் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அதாவது சிக்ஸர், பவுண்டரி விளாச முற்பட்டு பேட்டையை (கிரிக்கெட் மட்டை) சுழற்றினார். அதாவது கிரிக்கெட் பேச்சு வழக்கில் பேட்டோடு அவரும் சுற்றி னார். ஆனால் எதிர்பாராவிதமாக பேட் ஸ்டெம்பில் விழுந்தது. 2 முறையும் ஒரே மாதிரியாக சாய் சுதர்சன் ஹிட் விக்கெட் மூலம் ஆட்டமிழந்தார். இதற்கு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் பல ஆலோச னை வழங்கினார்கள். ரசிகர்கள் சில நக்கல் மீம்ஸ்களை வெளிப்படுத்தி னார்கள். தொடர்ந்து சிறப்பு பவுடரை யும் குஜராத் அணி நிர்வாகம் சாய் சுதர்சனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது. இறுதிப் போட்டியில் கூட சிறப்பு பவுடர் பூசப்பட்ட கையுறை யுடன் தான் விளையாடினார். தவறு சாய் சுதர்சனின் ஹிட் விக்கெட் விளையாட்டு சார்ந்த ஒரு சாதாரண நிகழ்வு தான். ஆனால் நாட்டின் முன்னணி பசை நிறுவனமான பெவிக் கால் (fevicol - Fevicol is owned by Pidilite Industries) நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் கிரிக்கெட் பேட்டிங் கிளவுஸ் (கையுறை) படத்தை போட்டு,”பேட்டும் கை நழு வாது, ஹிட்-விக்கெட்டும் ஆகாது” என இந்தியில் பதிவிட்டு விளம்பரம் செய்துள்ளது. கிரிக்கெட்டுக்கும், பெவிக்கால் நிறுவன விளம்பரத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. 1990களில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே பெவிக்காலின் முட்டை விளம்பரம் இன்று வரை மறக்க முடியாததாக உள்ளது. பெவிக்கா லுக்கும் விளம்பரத்திற்கும் இவ்வளவு பெரிய தொடர்பு உள்ளது. ஆனால் சாதாரண ஹிட் விக்கெட் பிரச்சனை யை தனது விளம்பர ஆதாயத்திற்காக பயன்படுத்தி, ஒரு வளரும் இளம் வீரரை கொச்சைப்படுத்தும் பெவிக் கால் நிறுவனத்தின் செயலுக்கு ரசி கர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.