தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

yesterday
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து 2026

உருகுவே அணிக்கும் அதிர்ச்சி அளித்த கேபோ வெர்டே

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘குரூப் எச்’ பிரிவுக்கான லீக் ஆட்டம் அமெரிக்காவின் மியாமி நகரில் இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான உருகுவே, கேபோ வெர்டே அணிகள் மோதின. ஜூன் 16 அன்று நடைபெற்ற தனது முதல் லீக் ஆட்டத்தில் சவூதி அரேபியா அணியுடன் டிரா செய்ததால், கட்டாய வெற்றியுடன் களமிறங்கும் உருகுவே அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்திலேயே கேபோ வெர்டே வீரர் கெவின் கோலடித்து உருகுவே மற்றும் கால்பந்து உலகிற்கு கடும் அதிர்ச்சி அளித்தார். இது 30 யார்டு தூரத்தில் இருந்து அடிக்கப்பட்ட பிரம்மாண்ட கோலாகும். இதனால் பதற்றமடைந்த உருகுவே வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தத் துவங்கினர். இதன்பலனாக அடுத்த 13 நிமிட இடைவெளியில் உருகுவே அடுத்தடுத்து 2 கோல்கள் (44’ - அரவுஜோ, அகஸ்டீன் (45+6’)) கோலடித்தது. இதனால் இந்த ஆட்டத்தில் உருகுவே எளிதாக வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 61ஆவது நிமிடத்தில் கேபோ வெர்டே வீரர் ஹெல்லா, உருகுவே கீப்பரை ஏமாற்றி அடித்த தந்திரமாக கோலடித்தார். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்காததால், இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. சாதனை 2002ஆம் ஆண்டில் செனகல் அணிக்கு பிறகு, உலகக்கோப்பையில் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடையாமல் சாதனை படைத்த முதல் அறிமுக அணி என்ற பெருமையை அட்லாண்டிக் பெருங்கடலில் வெறும் 5.25 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறிய தீவுக் கூட்டமான கேபோ வெர்டே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உருகுவேக்கு சிக்கல் ; வலுவான நிலையில் கேபோ வெர்டே

குரூப் எச் பிரிவில் ஸ்பெயின், உருகுவே போன்ற இரு வலிமையான அணிகளுக்கு எதிராகப் போட்டியைச் சமன் செய்து 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது கேபோ வெர்டே. வெள்ளிக்கிழமை ஹூஸ்டனில் (அமெரிக்கா) சவூதி அரேபியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியில் வென்றாலோ அல்லது சமன் செய்தாலோ, கேபோ வெர்டே முதன்முறையாக நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்கும். ஸ்பெயின் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் கம்பீரமாக உள்ளது. ஆனால் உருகுவே தான் ஆடிய இரண்டு போட்டிகளும் சமனில் முடிந்ததால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மங்கி, இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. குவாடலஹாராவில் (மெக்சிகோ) நடக்கவிருக்கும் அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை வீழ்த்தினால் மட்டுமே உருகுவே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். தோல்வியோ அல்லது சமனோ அவர்களைத் தொடரிலிருந்து வெளியேற்றிவிடும். சவூதி அரேபியாவுக்கும் நாக் அவுட் சுற்று வாய்ப்பு குறைவு தான்.

உலகக்கோப்பை கால்பந்து : இன்றைய ஆட்டங்கள்

ஜோர்டான் - அல்ஜீரியா (குரூப் ஜே) நேரம் : காலை 8.30 மணி இடம் : சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

போர்ச்சுக்கல்-உஸ்பெகிஸ்தான் (குரூப் கே) நேரம் : இரவு 10:30 மணி இடம் : ஹூஸ்டன், அமெரிக்கா

இங்கிலாந்து - கானா (குரூப் எல்) நேரம் : அதிகாலை 1:30 மணி இடம் : பாஸ்டன், அமெரிக்கா

பனாமா - குரேசியா(குரூப் எல்) நேரம் : அதிகாலை 4.30 மணி இடம் : டொரோண்டோ, கனடா

சேனல் : ஜீ 5 (ஓடிடி), யூனைட்8 (தொலைக்காட்சி)

90 ஆண்டுகள் போராட்டம் ; உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த எகிப்து

‘குரூப் ஜி’ பிரிவுக்கான லீக் ஆட்டம் கனடாவின் வான்கூவரில் திங்களன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் எகிப்து - நியூசிலாந்து அணிகள் மோதின. கிரிக்கெட், ரக்பி விளையாட்டுக்கு புகழ்பெற்ற அணியான நியூசிலாந்து, ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் (பின் சுர்மான்) கோலடித்து, முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியின் 58ஆவது நிமிடத்தில் எகிப்து வீரர் முஸ்தபா கோலடித்தார். அடுத்த 9ஆவது நிமிடத்தில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களின் ஒருவரான முக மது சாலா கோலடித்தார். இது நியூசிலாந்து அணியின் தடுப்பு அரணை உடைத்து அடித்த கோலாகும். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் எகிப்து (82’ - ட்ரீசே) மேலும் ஒரு கோலடித்தது. இந்த ஹாட்ரி கோல் மூலம் எகிப்து 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

எகிப்து - வரலாறு

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் எகிப்து 1934, 1990, 2018 ஆகிய ஆண்டுகளில் பங்கேற்றுள்ளது. ஆனால் இந்த 3 உலகக்கோப்பை தொடர்களிலும் ஒரு வெற்றியை கூட எகிப்து பதிவு செய்யவில்லை. அதாவது 90 ஆண்டுகளின் ஒரு சில தொடர்களில் உலகக்கோப்பை யில் பங்கேற்றும் வெற்றியை பதிவு செய்யாத எகிப்து, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோலுடன் உலகக்கோப்பையில் முதல்முறையாக வெற்றி பெற்றுள் ளது. இது அந்நாட்டுக்குத் தனிப்பட்ட வரலாறாக அமையும்.

பெல்ஜியத்தை கலங்கடித்த ஈரான்

குரூப் ஜி பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திங்களன்று நடை பெற்றது. இரு அணிகளும் கோல டிக்கவும், தடுபாட்டத்திலும் சரிசம அள வில் சுழன்றன. குறிப்பாக பெல்ஜியம் அணி அதிரடி ஷாட்களில் மிரட்டியது. அதே போல ஈரான் தடுப்பாட்டம், தந்திர மான பந்து நகர்த்தலில் மிரட்டியது.

முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இரண்டாம் பாதியின் 66ஆவது நிமிடத்தில், பெல்ஜி யத்தின் தற்காப்பு வீரர் நாதன் கோய் சிவப்பு அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் பெல்ஜியம் அணி 10 வீரர்களுடன் விளையாடும் சூழல் ஏற்பட்டது. எனி னும் 67ஆவது நிமிடம் முதல் இரு அணிகளின் அதிரடி ஆட்டத்தால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானம் அதிர்ந்தது.

ஆனாலும் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் டிராவில் 0-0 என்ற கணக்கில் நிறைவடைந்தது.பெல்ஜி யம் கால்பந்து உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாகும். ஆனாலும் அதனை சமாளித்து ஈரான் அணி போட்டியை டிரா செய்து இருப்பது கால்பந்து உலகில் பலத்த பாராட்டுகளை பெற்றுள்ளது.

சிறப்பு

இப்போட்டியில் பெல்ஜியம் அணி 23 முறை கோல் அடிக்க முயற்சி த்தது. 1994இல் சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, பெல்ஜி யம் அணி கோல் அடிக்காமல் அதிக ஷாட்களைப் பதிவு செய்தது இப்போட்டியில் தான். அதே போல ஈரான் கோல் கீப்பர் (அலி ரெசா) 7 முக்கிய கோல்களை தடுத்து தோல்வி யை தவிர்க்க முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் தங்களது இறுதி லீக் ஆட்டத்தில் எகிப்தை ஈரான் எதிர்கொள்கிறது, பெல்ஜியம் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக உலகக் கோப்பையின் அடுத்த சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ (நாக்) பகுதிக்குத் தகுதி பெறும் என்பதால் அடுத்த ஆட்டங் கள் வாழ்வா-சாவா (போட்டிக்காக மட்டும்) போட்டியாக மாறியுள்ளன. காரணம் ஈரான், பெல்ஜியம் அணிகள் 2 போட்டிகளில் தோல்வியை சந்திக்கா மல் டிரா செய்து, 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.