விளையாடு
2 hours before

உலகக்கோப்பை கால்பந்து 2026

அமெரிக்காவை சொந்த மண்ணிலேயே புரட்டியெடுத்த துருக்கி

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் ஆட்ட ங்கள் நடைபெற்று வரும் நிலையில், குரூப் ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் அமெரிக்கா - துருக்கி அணிகள் மோதின. இந்த ஆட்டம் வெள்ளியன்று அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 3ஆவது நிமிட த்திலேயே அமெரிக்காவின் ஆஸ்டன் டிரஸ்டி கோலடித்து அணியை முன்னி லைப்படுத்தினார். ஆனால் அடுத்த 7 நிமிட இடைவெளியில் (10’) துருக்கி வீரர் அர்டா குலர் கோலடித்தார். மேலும் 31ஆவது நிமிடத்தில் துருக்கி வீரர் பாரிஸ் கோலடிக்க, முதல் பாதியில் 2-1 என்ற கணக்கில் துருக்கி முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்திய அமெரிக்கா 49ஆவது நிமி டத்தில் கோலடித்தது. செபாஸ்டியன் பெர்ஹால்ட்டர் அடித்த இந்த கண்கவர் கோல் ஆட்டத்தை 2-2 என சமநிலைக்கு கொண்டு சென்றது. ஆட்டத்தின் 90 ஆவது நிமிடம் வரை இரு அணி களும் மேற்கொண்டு கோலடிக்க வில்லை. இதனால் இந்த ஆட்டம் டிரா வில் முடிவடையும் என எதிர்பார்க்கப் பட்டது. துருக்கியின் கடைசி நிமிட மேஜிக் ஆனால் ஆட்டநேர முடிவின் உதிரி நேரத்தில் (90+8’) துருக்கியின் அர்டா குலர் கொடுத்த அருமையான பாஸை, துருக்கி வீரர் கான் அய்ஹான் கோலாக மாற்றினார். இந்த கோல் மூலம் துருக்கி அணி 3-2 என்ற கணக் கில் திரீல் வெற்றியை ருசித்தது. குறிப் பாக தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேறிய துருக்கி அணிக்கு இந்த வெற்றி ஒரு ஆறுதல் பரிசாக அமைந்தது. மறுபக்கம் அமெரிக்கா ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால், சொந்த மண்ணில் ஏற்பட்ட இந்த தோல்வி அந்த அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

வெள்ளியன்று நடைபெற்ற மற்ற போட்டிகளின் முடிவுகள்

குரூப் எப் பிரிவிற்கான லீக் ஆட்டம் அமெரிக்காவின் டல்லா ஸில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஜப்பான் - சுவீடன் அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

குரூப் டி பிரிவிற்கான ஆட்டத்தில் பராகுவே - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.

உலகக்கோப்பை கால்பந்து : இன்றைய ஆட்டங்கள்

எகிப்து - ஈரான் (குரூப் ஜி) நேரம் : காலை 8.30 மணி இடம்: சியாட்டில், அமெரிக்கா

நியூசிலாந்து - பெல்ஜியம் (குரூப் ஜி) நேரம் : காலை 8.30 மணி இடம் : வான்கூவர், கனடா

பனாமா - இங்கிலாந்து (குரூப் எல்) நேரம் : அதிகாலை 2.30 மணி இடம் : நியூஜெர்சி, அமெரிக்கா

குரோசியா - கானா (குரூப் எல்) நேரம் : அதிகாலை 2.30 மணி இடம் : பிலடெல்பியா, அமெரிக்கா

கொலம்பியா - போர்ச்சுக்கல் (குரூப் கே) நேரம் : காலை 5.00 மணி இடம் : மியாமி, அமெரிக்கா

காங்கோ - உஸ்பெகிஸ்தான் (குரூப் கே) நேரம் : காலை 5.00 மணி இடம் : அட்லாண்டா, அமெரிக்கா

வரலாறு படைத்த ஐவரி கோஸ்ட் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி!

குரூப் ‘இ’ பிரிவுக்கான லீக் ஆட்டம் அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் வெள்ளி யன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் - குராசோ அணிகள் மோதின. ஐவரி கோஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பெப்பே ஆட்டத்தின் 7ஆவது மற்றும் 64ஆவது நிமிடங்களில் இரண்டு அபாரமான கோல்களை அடித்தார். பதிலுக்கு குராசோ கோலடிக்கவில்லை. இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற ஐவரி கோஸ்ட் அணி, உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை டல்லாஸில் நடை பெறவுள்ள நாக்-அவுட் சுற்றில் பிரான்ஸ் அல்லது நார்வே அணியுடன் ஐவரி கோஸ்ட் மோதவுள்ளது. அதே சமயம் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையுடன் களம் கண்ட குராசோ அணி, இந்தத் தோல்வியின் மூலம் தொடரிலிருந்து வெளியேறியது. 2ஆவது வீரர் இந்த போட்டியில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்த ஐவரி கோஸ்ட் வீரர் பெப்பே உலகக்கோப்பையில் இரட்டை கோலடித்த, இரண்டாவது வயதான ஆப்பிரிக்க வீரர் (31 வயது) என்ற சாதனையை படைத்துள்ளார். உலகக்கோப்பை கால்பந்து வர லாற்றில் இரட்டை கோலடித்த மிக வய தான ஆப்பிரிக்க வீரர் என்ற பெரு மைக்குரிய முதலாவது வீரர் கேமரூன் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் ரோஜர் மில்லா ஆவார்.

ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்த ஈகுவடார்

குரூப் ‘இ’ பிரிவின் லீக் ஆட்டம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் வெள்ளியன்று நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி - ஈகுவடார் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 1 நிமிடம் 49 வினாடிகளிலேயே ஜெர்மனியின் நட்சத்திர வீரர் லெராய் சானே அதிவேகமாக முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். ஆனால் ஜெர்மனி யின் கொண்டாட்டம் 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. ஆட்ட த்தின் 8 நிமிடம் 26 வினாடிகளில் ஈகுவடார் அணியின் நில்சன் அங்குலோ அதிரடி கோல் விளாசினார். இது கார்னர் கிக் பக்கம் நுழையாமல் அடிக்கப்பட்ட கோலாகும். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கக் கடுமையாகப் போராடின. குறிப்பாக ஜெர்மனி பல வாய்ப்புகளை வீணடித்தது. ஆனால் 77ஆவது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி, ஈகுவடார் வீரர் கோன்சலோ பிளாட்டா தந்திரமாக கோல டித்தார். கார்னர் கிக் பகுதியில் கடுமையான நெரிசல் இருந்ததால், ஜெர்மனி கோல் கீப்பர் இம்மானுவல் நூயர் இந்த கோலை கோட்டைவிட்டார். பதிலுக்கு கோலடிக்க ஜெர்மனி வீரர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் அந்த அணியால் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் ஈகுவடார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஈகு வடார் அணி ‘இ’ பிரிவில் 4 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தைப் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. தோல்வியடைந்த போதிலும் ஜெர்மனி அணி முத லிடத்தைப் பிடித்து நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாக் அவுட்டில் நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன்

குரூப் ‘எப்’ பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - துனிசியா அணி கள் மோதின. இந்த ஆட்டம் அமெரிக்கா வின் கேன்சஸ் நகரில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 3ஆவது நிமிடத்திலேயே துனிசியாவின் தடுப்பாட்ட வீரர் எலியாஸ் சகிரி பந்தைத் தடுக்க முயன்று, எதிர்பாராதவிதமாகத் தனது சொந்த கோல் போஸ்ட்டிற்குள்ளேயே சேம் சைடு அடித்து நெதர்லாந்துக்கு எளிதான முன்னிலையைத் தந்தார். இந்த அதிர்ஷ்ட கோலுக்குப் பிறகு நெதர்லாந்து அணி தாக்குதலில் இறங்கியது. ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் இளம் நட்சத்திரம் பிரையன் பிராப்பி கோலடித்து அணியின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் துனிசியா அணி மீண்டெழ தாக்குதலில் இறங்கியது. இதன் பலனாக 54ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஹாசெம் மஸ்தூரி கோலடித்தார். ஆனால் துனிசியாவின் கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 62ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஜான் பால் வான் ஹெகே மற்றொரு கோலடித்தார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்தது.ஆட்டநேர முடிவில் துனிசியா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி, நெதர்லாந்து அணி முதலிடத்துடன் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இதே குரூப் ‘எப்’ பிரவில் நெதர்லாந்து அணியுடன் ஜப்பான், சுவீடன் அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து மொராக்கோ அணியையும், ஜப்பான் பிரேசில் அணியையும், சுவீடன் பிரான்ஸ் அணியையும் எதிர்கொள்ள உள்ளன.