தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

24 Jun 2026, 10:02 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து 2026

போர்ச்சுக்கல் கோல் மழை ; 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை புரட்டியெடுத்தது

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், செவ்வா யன்று நள்ளிரவில் நடைபெற்ற குரூப் கே பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்றது.

காங்கோ அணியுடனான தனது முதல் லீக் போட்டி டிரா ஆனதால், கட்டாய வெற்றியுடன் அதிரடி ஆட்டத்தில் இறங்கியது போர்ச்சுக்கல். இதன் பலனாக 6ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி கோலடித்தது. இந்த கோலை கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார். நடப்பு சீசன் உலகக்கோப்பையில் ரொனால்டோவிற்கு இது முதல் உலகக்கோப்பையாகும். அடுத்த 11 நிமிட இடைவெளியில் போர்ச்சுக்கல் வீரர் மெண்டிஸ் கோலடித்தார். தொடர்ந்து 39ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் கேப்டனான ரொனால்டோ மேலும் ஒரு கோலடிக்க முதல் பாதியிலேயே, போர்ச்சுக்கல் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் உஸ்பெகிஸ்தான் தடுப்பாட்டத்தில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் இந்த ஆட்டம் 12 நிமிடம் கூட நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் நேமாடோவ் சேம் சைடு கோலடிக்க, அந்த அணி வீரர்கள் முற்றிலும் சோர்வடைந்தனர். அதன்பிறகு தடுப்பாட்டத்தில் ‘வந்தோம் போனோம்’ என்று விளையாட ஆரம்பித்தனர். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி (லிவோ 87’) மேலும் ஒரு கோலடித்தது. இறுதியில் ஆட்டநேர முடிவில் போர்ச்சுக்கல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

நாக் அவுட் சுற்றில் கொலம்பியா

குரூப் கே பிரிவு மற்றொரு லீக் ஆட்டத்தில் காங்கோ - கொலம்பியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் மெக்சிகோவின் குவாட லஹாரா மைதானத்தில் புதனன்று நடை பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதி மந்தமாக நகர்ந்தது.; கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாம் பாதியின் கடைசி நேரத்தில் இரு அணிகளின் அதிரடி ஆட்டத்தால், போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. 75ஆவது நிமிடத்தில் காங்கோ அணி யின் விசா அடித்த ஆபத்தான ஷாட்டை கொலம்பியா வீரர்கள் தடுத்து நிறுத்தி னர். அடுத்த ஒரே நிமிடத்தில் கொலம்பி யா வீரர் முனோஸ் (76’) கோலடித்தார். 81ஆவது நிமிடத்தில் கொலம்பியா அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் டயஸ் அடுத்தடுத்து இரண்டு முறை பந்தை வலைக்குள் தள்ளினார். ஆனால், ஒன்று பவுல் காரணத்திற்காகவும், மற்றொன்று ஆப்சைடு என்பதற்காகவும் நடுவரால் மறுக்கப்பட்டது. ஆட்டநேர உதிரி நிமிடத்தில் காங்கோ வீரர் முபுகு 30 யார்டுக்கும் அதிகமான தூரத்திலிருந்து அடித்த அதிவேக பந்தை, கொலம்பியா கோல்கீப்பர் காமிலோ வர்காஸ் ஒற்றைக் கையால் தடுத்து அசத்தினார். வர்காஸ் துடிப்பாக செயல்படவில்லை என்றால், இது கோலாக மாறியிருக்கும். இறுதியில் கொலம்பியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து : இன்றைய ஆட்டங்கள்

ஐவரி கோஸ்ட்- குராசோ (குரூப் இ) நேரம் : நள்ளிரவு 12.30 மணி இடம் : பிலடெல்பியா, அமெரிக்கா

துனிசியா - நெதர்லாந்து (குரூப் எப்) நேரம் : அதிகாலை 4.30 மணி இடம் : கேன்சாஸ், அமெரிக்கா

ஜெர்மனி - ஈக்வடார் (குரூப் இ) நேரம் : நள்ளிரவு 12.30 மணி இடம் : நியூ ஜெர்சி, மெக்சிகோ

ஜப்பான் - சுவீடன் (குரூப் எப்) நேரம் : அதிகாலை 4.30 மணி இடம் : டல்லாஸ், அமெரிக்கா

சேனல் ஜீ 5 (ஓடிடி), யூனைட்8 (தொலைக்காட்சி)

கானாவின் இரும்புத் திரையை உடைக்க முடியாமல் இங்கிலாந்து திணறல்

இங்கிலாந்து - கானா அணிகள் மோதிய ‘குரூப் எல்’ பிரிவு லீக் ஆட்டம் அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் புதனன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், பந்து 78% நேரம் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 19 ஷாட்கள், 9 கார்னர் என கோலடிக்க இங்கிலாந்து அணி கடும் தாக்குதல் நடத்தியது. ஆனால் ஆப்பிரிக்க அணியான கானா எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தாக்குதல் நடத்தினால் எங்களுக்கு தடுக்க தெரியும் என கிக் கார்னர் பகுதியில் பிரம்மாண்ட தடுப்பு பெருஞ்சுவரை எழுப்பியது. கானாவின் பலமான தற்காப்பு ஆட்டத்தை முறியடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் கடுமையாகத் திணறினர். குறிப்பாக கானாவின் கோல்கீப்பர் பெஞ்சமின் அசாரே இங்கிலாந்தின் ஆபத்தான ஷாட்களை மிகச் சிறப்பாகத் தடுத்து இந்த ஆட்டத்தின் சூப்பர் மேனாக ஜொலித்தார்.இறுதியில் இந்த ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இங்கிலாந்து அணி ‘குரூப் எல்’ பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தாலும், அடுத்த சுற்றுக்கான (நாக்) தகுதியை உறுதி செய்ய தனது கடைசி லீக் போட்டி வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கானா அணிக்கும் இதே நிலை உள்ளது தான்.

கானாவின் வெற்றி வாய்ப்பை தடுத்த நடுவர்

ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் எஸ்ரி கோன்சா கார்னர் பாக்ஸிற்குள், கானா முன்கள வீரர் பிரின்ஸ் குவாபெனாவை பந்தைத் தொடாமல் கீழே தள்ளிவிட்டார். கானா அணிக்குக் கண்டிப்பாகப் பெனால்டி வழங்கப்பட்டிருக்க வேண்டிய இந்த நிகழ்வில், நடுவர் பெனால்டி வழங்க மறுத்தது இங்கிலாந்து அணிக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. எனினும் உலகத் தரவரிசையில் 64ஆவது இடத்தில் இருக்கும் கானா, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்திற்குப் பலத்த சவாலாக விளங்கியது கால்பந்து உலகில் வைரல் நிகழ்வாக மாறியுள்ளது.

குரோசியா அபாரம்; பனாமா அவுட்

கனடாவின் டொரோண்டோ நகரில் புதனன்று அதி காலை நடைபெற்ற குரூப் எல் பிரி வுக்கான லீக் ஆட்டத்தில் குரோசியா - பனாமா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும் முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இரண்டாம் பாதியின் 54ஆவது நிமிடத்தில் குரோசியா வீரர் புதிமீர் கோலடித்தார். இதன்பிறகு குரோசியா தடுப்பாட்டத்தில் தனது கவனத்தை மேம்படுத்தியது. கிடைக்கும் நேரத்தில் கோலடிக்கவும் குரோசியா தாக்குதல் நடத்தியது. இதனால் பனாமாவால் பதிலுக்கு கோலடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் குரோசியா 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச், தனது நாட்டின் சார்பாக விளையாடும் 200ஆவது சர்வதேசப் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். பனாமா 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட பனாமா அணி உலகக்கோப்பை தொட ரை விட்டு வெளியேறியது. வரும் சனிக்கிழமை நடக்கும் போட்டியில் கானாவை வீழ்த்தினால், குரோசியா அணி ‘குரூப் எல்’ பிரிவில் நாக் சுற்றுக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்யும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.