தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

18 Jun 2026, 11:16 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து 2026

இங்கிலாந்து, கொலம்பியா அசத்தல்; போர்ச்சுக்கல் திணறல்

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. போராட்டம் - போர்ச்சுக்கல் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய நேரப்படி புதனன்று நள்ளிரவில் நடைபெற்ற (ஹூஸ்டன் - அமெரிக்கா) குரூப் கே பிரிவின் லீக் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - காங்கோ (டிஆர்) அணிகள் மோதின. ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்திலேயே போர்ச்சுக்கல் நெவீஸ் கோலடித்தார். இத னால் கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி இந்த ஆட்டத்தில் கோல்மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லாம் தலைகீழாக மாறியது. முதல் பாதியின் உதிரி நிமிடத்தில் (45+5’) காங்கோ வீரர் விஸ்ஸா கோலடிக்க ஆட்டம் பரபரப்பானது. 2ஆவது பாதியில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட கோல் வாய்ப்புகளை போர்ச்சுக்கல் அணி கோட்டை விட்டது. இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ரொனால்டோ களமிறங்கியும் காங்கோ அணியிடம் போர்ச்சுக்கல் போராடி டிரா செய்தது கால்பந்து உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கலக்கல்

வியாழனன்று அதிகாலை நடைபெற்ற (டல்லாஸ் - அமெரிக்கா) குரூப் எல் பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின. இரண்டும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால், இந்த போட்டியை கால்பந்து உலகம் அதிகம் எதிர்பார்த்து இருந்தது. இந்நிலையில், ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி 12ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோலடித்தார். தொடர்ந்து 36ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் மார்ட்டின் கோலடிக்க, அடுத்த 6 நிமிட இடைவெளியில் இங்கிலாந்து வீரர் ஹாரி (42’) மீண்டும் கோலடித்தார். முதல் பாதியின் உதிரி நிமிடத்தில் (45+5’) குரோஷியா வீரர் பீட்டர் கோலடித்தார். இதனால் முதல் பாதியில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சரிசம அளவில் இருந்தன. ஆனால் இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்களத்தில் தாக்குதல் பாணி ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. 47ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜுடே பெல்லிங்ஹாம் கோலடித்தார். ஆட்டநேர இறுதியில் (85’) இங்கிலாந்து வீரர் ராஷ்போர்டு கோலடிக்க, இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

கடைசி நேர கோல்

வியாழனன்று காலை கானா - பனாமா அணிகள் மோதிய குரூப் எல் பிரிவின் லீக் ஆட்டம் கனடாவின் டொரொண்டோவில் நடைபெற்றது. இரு அணிகளும் ஆட்டத்தின் 90ஆவது நிமிடம் வரை கோலடிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டம் டிராவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் உதிரி நிமிடத்தில் கானா வீரர் காலேப் (90+5’) அசத்தலாக கோலடித்தார். இதன்மூலம் கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றியை ருசித்தது. கடைசியாக குரூப் கே பிரிவின் லீக் ஆட்டத்தில் கொலம்பியா - உஸ்பெஸ்கிஸ் தான் அணிகள் மோதின. மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி ஷாட்களால் அமர்க்களப்படுத்திய கொலம்பியா அணி ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் (டேனியல்) முதல் கோலடித்தது. உஸ்பெஸ்கிஸ்தான் அணி 60ஆவது நிமிடத்தில் கோலடிக்க (அப்பாஸ்பெக்), 65ஆவது நிமிடத்தில் கொலம்பியா (தியாஸ்) மீண்டும் கோலடித்து முன்னிலை பெற்றது. ஆட்டநேர உதிரி நிமிடத்தில் கொலம்பியா வீரர் ஜேமின்டன் (90+9’) கோலடித்தார். இறுதியில் கொலம்பியா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

52 ஆண்டு காலத்திற்குப் பிறகு முதல் கோல் அடித்து காங்கோ அணி வரலாற்று சாதனை

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொட ரின் தனது முதல் லீக் ஆட்டத்தில் டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆப் காங்கோ (காங்கோ டிஆர்) அணி போர்ச்சுக்க லுக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் உலகக்கோப்பை கோலை பதிவு செய்து புதிய வரலாறுபடைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1974ஆம் ஆண்டு ‘ஜெய்ர்’ (Zaire) என்ற பெயரில் காங்கோ அணி முதல் முறையாக உலகக்கோப்பையில் பங்கேற்றது. ஆனால், அந்தத் தொட ரில் விளையாடிய போட்டிகளில் ஒரு கோல் கூட அந்த அணியால் அடிக்க முடியவில்லை. தற்போது 52 ஆண்டுகளுக்குப் பிறகு பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஒரு கோலடித்தது. இப்போட்டியில் போர்ச்சுக்கல் அணி யை 1-1 என்ற கணக்கில் டிரா செய்ததன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றி லேயே தனது முதல் புள்ளியையும் (First-ever World Cup Point) பெற்று காங்கோ சாதனை படைத்துள்ளது. ‘ஜெய்ர்’ என்பது ஆப்பிரிக்க நாடான மத்திய காங்கோ குடியரசின் பழைய பெயராகும்.

அமெரிக்க எம்.பி., உதவியால் தாயுடன் இணையும் கேப் வேர்டே கோல் கீப்பர் வோசின்ஹா

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், உலகின் பலம் வாய்ந்த அணியும் முன்னாள் சாம்பியனுமான ஸ்பெயின் அணியின் அனைத்து தாக்குதலையும் முறை யடித்து ஒரு கோல் கூட அடிக்க விடாமல் உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் குட்டி நாடான கேப் வேர்டே கோல் கீப்பர் வோசின்ஹா. இவர் விசா கட்டணம் மற்றும் சுமார் ரூ.12.5 லட்சம் ($15,000) வைப்புத்தொகையை செலுத்த வசதி இல்லாததால், தனது தாயார் ஆனா கேன்டிடாவை அமெரிக்காவிற்கு அழைத்து வர முடியவில்லையே என்று போட்டி முடிந்த பின்பு வோசின்ஹா வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்தத் தகவலை அறிந்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சியின் குழுத் தலைவர் ஹக்கீம் ஜெப்ரிஸ் உடனடியாக கேப் வேர்டே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரி டம் பேசி நடவடிக்கை எடுத்துள் ளார். அதன்படி, வோசின்ஹாவின் தாயாருக்கான விசா மற்றும் வைப்புத்தொகை கட்டணங்கள் முற்றி லும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் எவ்வித தடங்கலும் இன்றி அமெரிக்கா பயணிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட்டுள்ளதாக ஹக்கீம் ஜெப்ரிஸ் தெரிவித்துள்ளார். கால்பந்து மைதானத்தில் சாதித்த வீரரின் குடும்ப சூழ்நிலையை அறிந்து, அமெரிக்க எம்.பி., காட்டியுள்ள இந்த மனிதாபிமான நடவடிக்கை விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பை இன்றைய ஆட்டம்

நியூசிலாந்து - அயர்லாந்து இடம் : வெஸ்ட் எண்ட், இங்கிலாந்து நேரம் : இரவு 11:00 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

இந்தியாவில் முதல்முறையாக ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இதற்காக ஜியோஸ்டார் - முன்னணி திரையரங்கு நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இந்திய அணி விளையாடும் அனைத்து குரூப்-சுற்றுப் போட்டிகள், இரண்டு அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி ஆகியவை திரையரங்குகளில் பெரிய திரையில் நேரலையாகக் காண்பிக்கப்படும். டிக்கெட் விலைகள் ரூ.99 முதல் ரூ.150 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை கால்பந்து இன்றைய ஆட்டங்கள்

மெக்சிகோ - தென் கொரியா (குரூப் ஏ) நேரம் : காலை 6.30 மணி இடம் : ஸபோபன், மெக்சிகோ அமெரிக்கா - ஆஸ்திரேலியா (குரூப் டி) நேரம் : நள்ளிரவு 12:30 மணி இடம் : சியாட்டில், அமெரிக்கா ஸ்காட்லாந்து - மொரோக்கோ (குரூப் சி) நேரம் : அதிகாலை 3:30 மணி இடம் : பாஸ்டன், அமெரிக்கா சேனல் : ஜீ 5 (ஓடிடி), யூனைட்8 (தொலைக்காட்சி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.