விளையாட்டு
12 Jun 2026, 9:31 pm

உலகக்கோப்பை கால்பந்து 2026

முதல் கோல் வெற்றி மெக்சிகோ

23ஆவது சீசன் உலகக் கோப்பை தொடர் மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டி யில் உள்ள எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் இந்திய நேரப்படி வியாழனன்று நள்ளிரவு சிறப்பு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் மெக்சிகோ - தென் ஆப்பி ரிக்க அணிகள் மோதின. உள்ளூர் ரசி கர்களின் ஆதரவுடன் ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்திலேயே மெக்சிகோ வீரர் ஜூலியன் கோலடித்தார். இதன் மூலம் முதல் பாதியில் மெக்சிகோ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றது.

இரண்டாம் பாதியிலும் மெக்சிகோ அணியே ஆதிக்கம் செலுத்தியது. இதன் பலனாக ஆட்டத்தின் 67ஆவது நிமி டத்தில் மெக்சிகோ வீரர் ஜிமினேஜ் கோலடித்தார். இதுவே ஆட்டத்தின் வெற்றிக் கோலாக அமைந்தது. ஆட்ட நேர இறுதியில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, 23ஆவது சீசன் உல கக்கோப்பை தொடரின் முதல் கோல் மற்றும் முதல் வெற்றியை ருசித்த அணி என்ற பெருமையை பெற்றது.

3 ரெட் கார்டு

மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு கடந்த கால வரலாறு டன் மோதல் போக்கு எதுவும் கிடை யாது. ஆனால் இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதல் போக்குடன் மோதிக் கொண்ட னர். இதனால் இந்த ஆட்டத்தில் 3 ரெட் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 50ஆவது நிமிடத்திற்கு மேல் தென் ஆப்பிரிக்கா அணி (சித்தோலே 50’, டெம்பா 84’) 9 வீரர்களுடனும், மெக்சி கோ (சீசர் 92’) 10 வீரர்களுடன் விளை யாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாக்கோலம் பூண்ட மெக்சிகோ சிட்டி

தொடக்கப் போட்டிக்கு முன்னதாக, மெக்சிகோ சிட்டியில் உள்ள எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன், கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கொலம்பிய பாப் நட்சத்திரம் ஷகிரா, நைஜீரிய பாடகர் பர்னா பாய் உடன் இணைந்து பாடிய “டாய் டாய்” பாடலுக்கு ஒரு உற்சாகமான நிகழ்ச்சியை வழங்கி, அரங்கையே அதிர வைத்தனர். இதனால் மெக்சிகோ சிட்டி விழாக்கோலம் பூண்டது. உலகம் முழுவதிலும் இருந்து உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவை டிவி, இணையதளம் வாயிலாக கோடிக் கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். இந்தியாவில் நள்ளிர வில் உலகக்கோப்பை போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்து கண்டுகளித்தனர்.

உலகக்கோப்பை - இன்றையஆட்டங்கள்

கத்தார் - சுவிட்சர்லாந்து (குரூப் பி) நேரம் : நள்ளிரவு 12:30 மணி இடம் : சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

ஹைத்தி - ஸ்காட்லாந்து (குரூப் சி) நேரம் : காலை 6:30 மணி (ஜூன் 14) இடம் : பாஸ்டன், அமெரிக்கா

பிரேசில் - மொரோக்கோ (குரூப் சி) நேரம் : அதிகாலை 3:30 மணி (ஜூன் 14) இடம் : நியூயார்க், அமெரிக்கா

ஜெர்மனி - குரக்கோ (குரூப் இ) நேரம்:காலை 10:30 மணி (ஜூன் 14) இடம் : ஹவுஸ்டன், அமெரிக்கா

ஆஸ்திரேலியா - துருக்கி (குரூப் டி) நேரம்:காலை 9:30 மணி (ஜூன் 14) இடம் : வான்கூவர், கனடா

தென் கொரியா அபார வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 2ஆவது லீக் ஆட்டத்தில் தென் கொரியா - செக் குடியரசு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இரண்டாம் பாதியின் 59ஆவது நிமிடத்தில் செக்குடியரசு வீரர் கெஜிக்சி கோலடித்தார். அடுத்த 8 நிமிடங்களில் தென் கொரிய வீரர் ஹிவாங் (67’) கோலடித்தார். ஆட்டம் பரபரப்பானது. ஆட்டம் டிராவை நோக்கி சென்ற நிலையில், 80ஆவது நிமிடத்தில் தென் கொரிய வீரர் ஹியோன் கோலடித்தார். இதுவே வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அபார வெற்றி பெற்றது.

மகளிர் டி-20 உலகக்கோப்பை : இன்றைய ஆட்டங்கள்

10ஆவது சீசன் மகளிர் டி-20 உலகக்கோப்பை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் கூட்டாக நடைபெறுகிறது. இந்த தொடர் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை 7 முன்னணி மைதானங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.

அயர்லாந்து - ஸ்காட்லாந்து நேரம்:பிற்பகல் 3:00 மணி இடம் : மான்செஸ்டர், இங்கிலாந்து

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா நேரம் : இரவு 7:00 மணி இடம் : மான்செஸ்டர், இங்கிலாந்து

நியூசிலாந்து-மேற்கு இந்தியத் தீவுகள் நேரம் : இரவு 11:00 மணி இடம் : சவுத்தாம்ப்டன், இங்கிலாந்து