தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

1 Jul 2026, 9:53 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

மாப்பே இரட்டை கோல்; பிரான்ஸ் அபார வெற்றி

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரு கிறது. இந்த தொடரில் தற்போது நாக் அவுட்-32 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்திய நேரப்படி புதனன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நடைபெற்ற 6ஆவது நாக் அவுட்-32 ஆட்டத்தில் பிரான்ஸ் - சுவீடன் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் தொடக்க நிமிடம் முதலே பிரான்ஸ் அணி கோலடிக்க கடுமையாக தாக்குதல் நடத்தியது. சுவீடன் தடுபாட்ட வீரர்கள் சொதப்பி னாலும், அந்நாட்டின் கோல் கீபார் ஜட்டர்ஸ்டார்ம் அசத்தலாக செயல் பட்டு பிரான்ஸ் அணியின் தாக்குதலை கடுமையான போராட்டத்துடன் முறியடித்தார்.

தல் பாதியில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட முக்கிய கோல் வாய்ப்பு களை அபாரமாக தடுத்தார். எனினும் முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர வீரர் மாப்பே கோலடித்தார். இரண்டாம் பாதியின் 53ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிராட்லி பார்கோலாவும் கோல் அடித்தார். இது அதிரடி கோலாகும். அடுத்த சில நிமிடங்களில் மாப்பே (74’) மேலும் ஒரு கோலடித்தார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்தது.

இறுதியில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, நாக் அவுட் - 16 பிரிவுக்கு தகுதி பெற்றது.

அடுத்து பராகுவே

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜெர்மனியை புரட்டி யெடுத்த பராகுவே அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி வருகிற சனிக்கிழமை பிலடெல்பியா வில் (அமெரிக்கா) நடைபெறவுள்ளது.

மாப்பே புதிய உலக சாதனை

இந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடித்த மாப்பே புதிய உலக சாதனையை படைத்துள்ளார். உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் (10 கோல்கள்) அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை மாப்பே படைத்துள்ளார். அதே போல உலகக்கோப்பையில் ஒட்டுமொத்தமாக 18 கோல்களுடன் மெஸ்ஸியின் (அர்ஜெண்டினா) சாதனையை (19 கோல்கள்) முறியடிப்பதற்கு இன்னும் ஒரு கோல் மட்டுமே அவருக்கு தேவையாக உள்ளது. அதே போல தற்போதைய 2026 உலகக்கோப்பையின் ‘கோல்டன் பூட்’ (தங்க காலணி) பந்தயத்திலும் மெஸ்ஸி மற்றும் மாப்பே இருவருமே தலா 6 கோல்களுடன் சமநிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நேர கோலால் நார்வே வரலாற்று வெற்றி

அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி செவ்வாயன்று நள்ளிரவில் நடைபெற்ற 5 ஆவது நாக் அவுட்-32 ஆட்டத்தில் நார்வே - ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் நார்வே அணியின் 21 வயது இளம் வீரர் அன்டோனியோ நுசா அற்புதாமான ஷாட் மூலம் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை பெற்று தந்தார். இதன்மூலம் நார்வே நாட்டின் மிக இளம் வயதில் உலகக்கோப்பை கோல் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் பாதியின் 74ஆவது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணியின் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த அமத் தியல்லோ தனிநபராக போராடி கண்க வர் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

ஹாலந்து மிரட்டல்

ஆட்டம் சமநிலையை நோக்கி நகர்ந்து, கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தில் நார்வே நட்சத்திர வீரர் ஹாலந்து வெற்றி கோலை அடித்தார். இந்தத் தொடரில் இது அவரது 5ஆவது கோலாகும். இறுதியில் நார்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, நாக் அவுட் -16 பிரிவுக்கு முதன்முறை யாக முன்னேறியது.

பிரேசில்

ந்த வரலாற்று வெற்றியின் மூலம் அடுத்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஜூலை 5 அன்று அமெரிக்கா வில் நடைபெறுகிறது.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் - வியாழன், வெள்ளி

ஸ்பெயின் - ஆஸ்திரியா நேரம் : நள்ளிரவு 12.30 மணி இடம் : லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

போர்ச்சுக்கல் - குரோசியா நேரம் : அதிகாலை 4.30 மணி இடம் : டொரோண்டோ, கனடா

சேனல்: ஜீ 5 (ஓடிடி), யுனைட்8 (தொலைக்காட்சி)

இடி, மின்னலுக்கு இடையே மெக்சிகோ மிரட்டல்

மெக்சிகோவின் ‘எஸ்டா டியோ அஸ்டெகா’ மைதானத்தில் நடைபெற்ற 7ஆவது நாக் அவுட் -32 ஆட்டத்தில், போட்டி யை நடத்தும் மெக்சிகோ - ஈகு வடார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் புதனன்று நடைபெற்றது. கடுமை யான இடிமின்னல் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கிய நிலை யில், ஆட்டம் தொடங்கியதில் இருந்தே மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்தியது.

இதன்பலனாக ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் மெக்சிகோவின் நட்சத்திர வீரர் ஜூலியன் குய்னோ னஸ் அதிரடி கோலடித்தார். அடுத்த 9 நிமிட இடைவெளியில் மெக்சிகோ அணியின் மூத்த வீரர் ரவுல் ஜிமினெஸ் (31’) தந்திரமான கோலை அடித்தார்.

இரண்டாம் பாதி, சிவப்பு அட்டை சர்ச்சை

இரண்டாம் பாதியில் ஈகுவடார் அணி கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தும், மெக்சிகோவின் பல மான தடுப்பாட்டத்தை மீறி கோல டிக்க முடியவில்லை. இறுதியில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, நாக் அவுட் -16 பிரிவுக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் உதிரி நிமிடத்தில் (90+5’) ஈகுவடார் வீரர் பியரோ ஹின்காபி, மெக்சிகோ வீரர் சாண்டி யாகோ கிமினெஸிடம் பேசும்போது தனது வாயை கைகளால் மூடிக்கொண்டு பேசியதற்காக, வார் பரிசீலனைக்குப் பிறகு நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப் பட்டார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் தென் அமெரிக்க நாட்டை நாக்-அவுட் சுற்றில் வீழ்த்தி வெளியேற்றிய முதல் வடஅமெரிக்க நாடு என்ற வரலாற்று சாதனையை மெக்சிகோ படைத்துள்ளது.

பதற்றம், பரபரப்பு, பயம், ரத்தக் கொதிப்பு கால்பந்தில் ஆபத்தானது பெனால்டி-ஷூட் அவுட்

விளையாட்டு உலகில் குத்துச்சண்டை, ரக்பி போட்டிகளுக்கு அடுத்து மிக ஆபத்தான விளையாட்டாக இருப்பது கால்பந்து தான். பந்தை உதைப்பது முதல் வீரர்களின் மோதல் வரை கால்பந்து விளையாட்டின் ஒவ்வொரு நிமிடமும் அவ்வளவு சாதாரண மாக நகருவதில்லை. குறிப்பாக கால்பந்து விளையாட்டின் வெற்றி, தோல்விகளில் பெனால்டி-ஷூட் அவுட் மிகவும் ஆபத்தானது ஆகும். அதாவது உயிருக்கு ஆபத்தானது என்று கூறவில்லை. பலம் வாய்ந்த நாடு, பலம் குறைந்த நாடு, சாம்பியன் நாடு, ஆதிக்கம் செலுத்தும் நாடு என எதுவாக இருந்தாலும், பெனால்டி-ஷூட் அவுட்டில் ஒரு அணிக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். புதிதாக களமிறங்கிய குட்டி அணியாக இருந்தாலும் சரி, சாம்பியன் அணியாக இருந்தாலும் சரி பெனால்டி-ஷூட்டில் யார் வேண்டுமானாலும் வெற்றி, தோல்வியை பெறலாம் என்ற தனி விளையாட்டு சூத்திரத்தைக் கொண்டது பெனால்டி-ஷூட் அவுட்.

ரத்தக்கொதிப்பு

கால்பந்து விளையாட்டில் அனுபவம், தைரியம், திடமான உடல் அமைப்பு என பல்வேறு குணாதிசயம் கொண்ட எந்த வீரராக இருந்தாலும், அதிரடி பரபரப்புடன் நடைபெறும் பெனால்டி-ஷூட் அவுட்டை கண்டு அஞ்சி நடுங்கி தான் ஆக வேண்டும். குறிப்பாக பெனால்டி-ஷூட் அவுட்டில் களமிறங்கும் வீரர்கள் யாராக இருந்தாலும், ரத்தக்கொதிப்புடன் தான் களத்தில் இருப்பார்கள். அதுவும் சாதாரணமாக அல்ல ; கிட்டத்தட்ட 150 ஹார்ட் பீட்சை தாண்டி ரத்தம் பலமாக கொதிக்கும். குறிப்பாக பெனால்டி-ஷூட் அவுட்டில் கோல் கீப்பரை விட கோல் உதைக்கும் வீரர் தான் அதிக பதற்றத்துடன் இருப்பார்கள். வீரர்கள், அணிக்குழுவினர் மட்டுமல்ல; ரசிகர்களும் தான்.

இவ்வளவு பதற்றம், பரபரப்பு, பயத்தை ஏற்படுத்தும் பெனால்டி-ஷூட் அவுட்டில் தான் கால்பந்து உலகின் வலுவான அணிகளான ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் நாக் அவுட் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறின.

- எம்.சதீஸ் குமார்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.