தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உலகக்கோப்பை கால்பந்து 2026

17 Jun 2026, 1:05 am
உலகக்கோப்பை கால்பந்து 2026

உலகக்கோப்பை கால்பந்து 2026

ஒரே நாளில் 3 போட்டிகளும் டிரா

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய நேரப்படி செவ்வா யன்று நடைபெற்ற 3 ஆட்டங்களும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் நிறைவடைந்தது. 1-1 பெல்ஜியம் - எகிப்து அணிகள் (குரூப் ஜி) மோதிய ஆட்டம் அமெரிக்காவின் சியாட்டில் மைதா னத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் எகிப்து வீரர் அஷோர் கோலடித்தார். முதல் பாதி யில் பெல்ஜியம் பதிலுக்கு கோலடிக்க வில்லை. 2ஆம் பாதியில் எகிப்து வீரர்கள் செய்த தவறால், பெல்ஜியம் அணிக்கு 66ஆவது நிமிடத்தில் கோல் கிடைத்தது. இந்த அதிர்ஷ்ட கோலால் தான் பெல்ஜியம் அணி தோல்வியில் இருந்து தப்பியது. ஆட்டநேர முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

1-1

குரூப் எச் பிரிவுக்கான சவூதி அரேபியா - உருகுவே அணிகள் மோதிய ஆட்டம் அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் சவூதி அரேபியா வீரர் அம்ரி கோல டித்தார். 79ஆவது நிமிடம் வரை உரு குவே அணி கோலடிக்கவில்லை. இத னால் இந்த ஆட்டத்தில் சவூதி அரேபியா அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 80ஆவது நிமிடத்தில் உருகுவே வீரர் அஜூரோ கோலடிக்க ஆட்டம்

1-1

என்ற கணக்கில் டிராவில் நிறைவடைந்தது. 2-2 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற குரூப் ஜி பிரிவுக் கான ஆட்டத்தில் ஈரான் - நியூசிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்திலேயே நியூசிலாந்து அணி கோல் கணக்கை (ஜஸ்ட்) துவங்கியது. இது அதிரடி ஷாட் கோலாகும். தொடர்ந்து 32ஆவது நிமிடத்தில் ஈரான் வீரர் ரேஜாயின் கோலடித்து பதிலடி கொடுக்க ஆட்டம் பரப்பானது. இரண்டாம் பாதியின் 55ஆவது நிமிடத்தில் ஜஸ்ட் மீண்டும் கோலடிக்க நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 9 நிமிடங்களில் ஈரான் வீரர் மோஹேபி (64’) கோல டிக்க இரு நாட்டு ரசிகர்களும் அடுத்து எந்த அணி கோலடிக்க போகிறது என்ற ஆர்வத்தில் இருக்கையில் அமராமல் எழுந்து நின்று கொண்டு இருந்தனர். எனினும் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல டிக்காததால்

2-2

என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் நிறைவடைந்தது. அதிர்ச்சி செவ்வாயன்று நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி மிக்கது தான். பெல்ஜியம், உருகுவே, ஈரான் அணிகள் ஓரளவு பலமுள்ள அணிகள் தான். இதில் உருகுவே 2 முறை சாம்பியன் அணியாகும். ஆனால் தன்னை விட பலம் குறைந்த அணிகளிடம், 3 அணிகளும் போராடி டிரா செய்தது கால்பந்து உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

அர்ஜெண்டினா - அல்ஜீரியா (குரூப் ஜே) நேரம் : காலை 6.30 மணி இடம் : கேன்சஸ், அமெரிக்கா ஆஸ்திரியா - ஜோர்டான் (குரூப் ஜே) நேரம் : காலை 9.30 மணி இடம் : சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா போர்ச்சுக்கல் - காங்கோ (குரூப் கே) நேரம் : இரவு 10.30 மணி இடம் : ஹூஸ்டன், அமெரிக்கா இங்கிலாந்து - குரோசியா (குரூப் எல்) நேரம் : நள்ளிரவு 1.30 மணி இடம் : டல்லாஸ், அமெரிக்கா கானா - பனாமா (குரூப் எல்) நேரம் : அதிகாலை 4:30 மணி இடம் : டொராண்டோ, கனடா

கால்பந்து உலகக்கோப்பையில் நெகிழ்ச்சி முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை அலறவிட்ட குட்டி நாட்டின் 40 வயது கோல்கீப்பர்

உலகக்கோப்பை கால் பந்து தொடரில் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு சுவாரஸ்ய மான வரலாற்றுச் சாதனை நிகழ்ந்துள் ளது. உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள பலம் வாய்ந்த ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியை, வெறும் 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட ‘கேப் வெர்டே’ (Cape Verde) என்ற குட்டி தீவு நாடு 0-0 என்ற கண க்கில் சமன் செய்து அசத்தியுள்ளது.

போட்டி முழுவதும் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெ யின் அணி தொடர்ந்து கோல் வாய்ப்பு களை உருவாக்கியது. முதல் பாதியி லேயே பெட்ரி உள்ளிட்ட வீரர்கள் அடித்த 4 ஷாட்டுகளை கேப் வெர்டே கோல் கீப்பர் வோசின்கா அபாரமாக தடுத்தார். தொடர்ந்து ஸ்பெயின் வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி னார்கள். ஆனால் கேப் வெர்டேவின் தடு ப்பு அரணை உடைக்க முடியவில்லை.

லாமின் யமாலும் பலனளிக்கவில்லை

71ஆவது நிமிடத்தில் போட்டியின் போக்கை மாற்றும் நோக்கில் ஸ்பெ யின் பயிற்சியாளர் இளம் நட்சத்திர மான லமின் யமாலை களமிறக்கி னார். இருப்பினும் அவராலும் கேப் வெர்டேவின் தடுப்பு அரணை உடை த்து கோல் அடிக்க முடியவில்லை.

இந்த போட்டி முழுவதும் ஸ்பெயின் அணி தொடுத்த கடுமை யான தாக்குதல்களை முறியடித்து, 7 முறை கோல் விழாமல் தடுத்து வோசின்கா ‘ஆட்டநாயகன்’ விருது பெற்றார். 40 ஆண்டுகள் 12 நாட்கள் வயதான வோசின்ஹா, உலகக் கோப்பையில் தனது நாட்டின் அறி முகப் போட்டியில் விளையாடிய ‘மிக வயதான வீரர்’ என்ற புதிய உலக சாத னையைப் படைத்துள்ளார். இவரது அசாத்திய ஆட்டத்தைக் கண்டு வியந்த பிரேசில் யூடியூப் சேனல் ஒன்று இவரைப் பின்தொடரச் சொன்னதால், இன்ஸ்டாகிராமில் 50 ஆயிரமாக இருந்த இவரது பாலோயர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 15 லட்சமாக எகிறியது.

ஆட்டம் முடிந்ததும் உணர்ச்சி வசப்பட்டுக் கண்ணீர் வடித்த வோசின்ஹா,”நிதி நெருக்கடி, விசா கிடைக்காத காரணத்தால் என் அம்மா வால் இந்த வரலாற்றுத் தருணத்தைக் காண இங்கு வர முடியவில்லை. என்னை வளர்த்த தாத்தா-பாட்டி யும் இப்போது உயிரோடு இல்லை. எங்களின் ஒற்றுமைதான் இந்த வெற்றி க்குக் காரணம். நாங்கள் இங்கு பொழுதுபோக்க வரவில்லை, நாட்டுக் காகப் போராட வந்திருக்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

வெறும் 25 வயதில் மிகத் தாம தமாகத் தனது கால்பந்து பயணத்தை தொடங்கி, உயரம் குறைவு என்ற விமர்சனங்களையும் தாண்டி வோசின் ஹா சாதித்துள்ளது ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மகளிர் டி-20 உலகக்கோப்பை

இந்தியா - நெதர்லாந்து நேரம் : இரவு 7:00 மணி இடம் : லீட்ஸ், இங்கிலாந்து

ஆஸ்திரேலியா - வங்கதேசம் நேரம் : மதியம் 3:00 மணி இடம் : லீட்ஸ், இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் நேரம் : இரவு 11:00 மணி இடம் : பர்மிங்ஹாம், இங்கிலாந்து

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.