விளையாட்டு
5 Jun 2026, 8:24 pm

உலகக்கோப்பை கால்பந்து 2026 ரசிகர்கள் வருகை குறையும் அபாயம்

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளது. அடுத்த வாரம் இந்த தொடர் தொடங்க உள்ள நிலையில், உலக கால்பந்து ரசிகர்கள் சொந்த மற்றும் தங்களுக்குப் பிடித்தமான அணிகளை ஆதரிக்கவும், போட்டியை நேரில் கண்டுகளிக்கவும் விரைவில் வட அமெரிக்க கண்டத்திற்கு பயணிக்க உள்ளனர். இதனால் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகள் விழாக்கோலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு உலகக்கோப்பை கால்பந்து சீசனிலும், போட்டியை நடத்தும் நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் வருகையால் அந்நாட்டின் உணவகம், மதுபான பார்கள், சுற்றுலா தளம் உள்ளிட்ட பிரிவுகள் கணிசமான வருவாயை பெறும். ஆனால் இம்முறை ரசிகர்கள் வருகை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 3 நாடுகளில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுவதால் பயண திட்டம், விண்ணைத்தாண்டும் டிக்கெட் விலை என செலவு அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண்பது குறித்து அதிகம் யோசிக்கின்ற னர். குறிப்பாக அமெரிக்காவிற்குள் நுழைவதில் உள்ள கவலைகளால் சில நாட்டு ரசிகர்கள் வீட்டிலேயே உலகக்கோப்பை காண சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஓய்வு அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எஸ்.பரத்

இந்திய அணி விக்கெட் கீப்ப ரும், அதிரடி பேட்டருமான கே.எஸ்.பரத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித் துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவுக்காக விளையாடியது தனது வாழ்வின் மிகப்பெரிய கௌரவம் ஆகும். தனது குடும்பத்தினரின் தொட ர்ச்சியான ஆதரவிற்கும், அன்பு, கடின உழைப்பின் மூலம் தனது வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கிற்கும் நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். பெருமிதத்துட னும், நன்றியுணர்வுடனும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். டெஸ்ட் போட்டி களில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் கௌரவம் ஒவ்வொரு கணத்தி ற்கும் மதிப்பு வாய்ந்தது. எனக்கு சாதக மான சூழலையும் ஆதரவையும் உரு வாக்கித் தந்த என் சகோதரி, அம்மா மற்றும் அப்பாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று கே.எஸ்.பரத் குறிப்பிட்டு இருந்தார். ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கே.எஸ்.பரத், தனது ஏழு டெஸ்ட் போட்டிகளுடன் சர்வதேச பயணத்தை நிறைவு செய்கிறார். இந்தப் போட்டி களில் அவர் 20.09 சராசரியில் 221 ரன்கள் எடுத்தார். இதில் அவரது அதி கபட்ச ரன் குவிப்பு 44 ஆகும். அந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில், விக்கெட் கீப்பராக பரத் 21 கேட்சுகளைப் பிடித்த துடன், ஒரு ஸ்டம்பிங்கையும் செய்தார். கே.எஸ்.பரத் ஐபிஎல் போட்டிகளிலும் (பெங்களூரு, தில்லி) நன்றாக விளை யாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1,657 கோடிக்கு கால்பந்து வீரரை விலைக்கு வாங்கும் ரியல் மாட்ரிட்ரூ.1,657 கோடிக்கு கால்பந்து வீரரை விலைக்கு வாங்கும் ரியல் மாட்ரிட்

ஸ்பெயின் கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட்டின் தலைவர் தேர்தல் ஜூன் 7 அன்று நடைபெறவுள்ளது. தற்போதைய தலைவர் புளோரெண்டினோ பெரெஸ் மீண்டும் தலைவராகும் முனைப்பில் வாக்காளர்களைக் கவர அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஸ்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெரெஸ் பேசுகையில், “நான் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கிளப் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகையைச் செலவழிக்கத் தயாராக உள்ளேன். வரும் செவ்வாயன்று சாம்பியன்ஸ் லீக் தொ டரில் விளையாடும் ஒரு முன்னணி கிளப்பின் நட்சத்திர வீரருக்காகக் குறைந்த பட்சம் 150 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,657 கோடி) மதிப்பிலான மாபெரும் ஆப்பரை ரியல் மாட்ரிட் சமர்ப்பிக்கும். இது நடந்தால், ரியல் மாட்ரிட் வரலாற்றில் ஒரு வீரருக்காக வழங் கப்படும் மிக அதிகபட்ச தொகையாக இருக்கும்” என அவர் கூறினார். யார் அந்த வீரர் என்பது தொடர்பாக இதுவரை எந்த தக வலும் வெளியாகவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.