தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

18 May 2026, 11:00 pm
விளையாட்டு

ரூ.962 கோடி கேட்ட பிபா; ரூ.192 கோடி நிர்ணயம் செய்த ஜியோ

அம்பானி நிறுவனத்திற்கும் பிபாவுக்கும் மோதல்?

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் 11ஆம் தேதி தொடங்குகிறது. போட்டியை நடத்தும் நாடுகளின் நேரப்படி இந்தியா வில் நள்ளிரவில் தான் உலகக்கோப்பையை பார்க்க முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால் இந்தியா வின் உலகக்கோப்பை ஒளிபரப்பு உரிமையை இதுவரை எந்த நிறுவனமும் வாங்கவில்லை. தில்லி உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், தூர்தர்சன் மூலம் ஒளிபரப்ப திட்டம் எதுவும் உள்ளதா? என ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், ஒன்றிய அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து ஒளிபரப்பு தொடர்பாக அம்பானியின் ஜியோ ஸ்டார் நிறுவனத்திற்கும், சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கும் (பிபா) இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜியோ ஸ்டார் இந்திய ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் 20 மில்லியன் டாலர்களை (ரூ.192 கோடி) மட்டுமே வழங்க முன்வந்தது. ஆனால் பிபா எதிர்பார்த்த தொகையை (100 பில்லியன் டாலர் - ரூ. 962 கோடி) விட மிகக் குறைவாகும். இதனால் ஏலத்தின் போதும், பேச்சுவார்த்தையின் போதும் அம்பானி - பிபா அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

என்ன தான் பிரச்சனை?

வட அமெரிக்க கண்ட நேரத்தின்படி, உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நள்ளிரவு 12:30 மணிக்கு தான் தொடங்கும். அதாவது 12:30, 3:30, 6:30, 7:30 என நள்ளி ரவு, அதிகாலை, காலை நேரங்களில் மட்டும் தான் இந்தியாவில் உலகக்கோப்பை பார்க்க முடியும் சூழல் உள்ளது. எந்த விளையாட்டுப் போட்டிகளாக இருந்தாலும், இந்திய ரசிகர்கள் பெரும்பா லும் இரவு 9 மணி முதல் 11:30 வரை தான் பார்ப்பார் கள். அதற்கு மேல் ஒரு சிலர் மட்டுமே பார்ப்பார்கள். இது தான் இந்திய விளையாட்டுத் துறையின் அடிப்படை. இதனால் தான் பார்வை யாளர் பார்க்கும் விகிதம் மற்றும் விளம்பரம் லாபம் தொடர்பான வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த ஒளி பரப்பு நிறுவனங்கள் உலகக் கோப்பை உரிமத்தை வாங்க யோசிக்கின்றன. கடந்த உலகக் கோப்பை தொடர் கத்தார் (2022) நாட்டில் நடைபெற்றது. நள்ளிரவில் போட்டிகள் முடிவடைந்தன. அம்பானியின் ஜியோ சினிமா நிறுவனம் இலவசமாக ஒளிபரப்பியது. 11 கோடிக்கும் (110 million) அதிகமான மக்கள் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை இணையத்தில் நேரலையாகப் பார்த்தனர். அர்ஜெண்டினா, பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியை மட்டும் 3.2 கோடி (32 million) பார்வை யாளர்கள் ஜியோ சினிமா (JioCinema) செயலியில் பார்த்தனர். இப்போட்டிகளின் மொத்த ஒளிபரப்பு நேரம் 4,000 கோடி (40 billion) நிமிடங்களைக் கடந்தது என்று இப்போட்டியின் டிஜிட்டல் உரிமையை 14 மாதங்களுக்கு முன்பே 60 மில்லியன் டால ருக்கு வாங்கியிருந்த வியாகாம் 18 (அம்பானி) நிறு வனம் தெரிவித்திருந்தது. விளம்பர வருவாய் பிரம்மாண் டம் என செய்திகள் வெளியா கின. ஆனால் மேற்கு ஆசிய நெருக்கடி உள்ளிட்ட பிரச்ச னைகள், வருவாய் உள்ளிட்ட வைகளை சிந்தித்து, அம்பானி ஒளிபரப்பு உரிமத்தை வாங்க கடுமையாக யோசித்து வருகிறது. சோனி ஏலத்தில் பங்கேற்க கூட இல்லை. இதுதான் பிரச்சனைக்கு காரணம் ஆகும்.

ஐபிஎல் : இன்றைய ஆட்டம்

ராஜஸ்தான் - லக்னோ இடம் : ஜெய்ப்பூர், ராஜஸ்தான் / நேரம் : இரவு 7:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.