தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

2 Jun 2026, 9:54 pm
விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து 2026 இன்னும் 9 நாட்கள்

விளையாட்டு உலகில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான கால்பந்து உலகக்கோப்பை தொடரின் 23ஆவது சீசன் ஜூன் 11 முதல் ஜூலை 19 அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சீசனில் தான் 48 நாடுகள் பங்கேற்கின்றன. அவை தலா 4 அணிகள் வீதம் 12 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப்கள் - நாடுகளின் விவரங்கள்

குரூப் ஏ மெக்சிகோ தென் ஆப்பிரிக்கா தென்கொரியா செக் குடியரசு குரூப் பி கனடா போஸ்னியா-ஹெர்சகோவினா கத்தார் சுவிட்சர்லாந்து குரூப் சி பிரேசில் மொராக்கோ ஹைத்தி ஸ்காட்லாந்து குரூப் டி அமெரிக்கா பராகுவே ஆஸ்திரேலியா துருக்கி குரூப் இ ஜெர்மனி குராசோ (தென் அமெரிக்கா) ஐவரி கோஸ்ட் ஈக்வடார் குரூப் எப் நெதர்லாந்து ஜப்பான் ஸ்வீடன் துனிசியா குரூப் ஜி பெல்ஜியம் எகிப்து ஈரான் நியூசிலாந்து குரூப் எச் ஸ்பெயின் கேப் வெர்டே (ஆப்பிரிக்க தீவு நாடு) சவூதி அரேபியா உருகுவே குரூப் ஐ பிரான்ஸ் செனகல் இராக் நார்வே குரூப் ஜே அர்ஜெண்டினா அல்ஜீரியா ஆஸ்திரியா ஜோர்டான் குரூப் கே போர்ச்சுக்கல் காங்கோ டிஆர் உஸ்பெகிஸ்தான் கொலம்பியா குரூப் எல் இங்கிலாந்து குரோஷியா பனாமா கானா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : ஆன்டிரீவா அபாரம்

களிமண் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 96ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வா யன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மிர்ரா ஆன்டிரீவா, தரவரிசையில் 18ஆவது இடத்தில் உள்ள ருமேனியா நாட்டின் கிறிஸ்டியாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய மிர்ரா ஆன்டிரீவா 6-0, 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவின் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் பெலாரசின் சபலென்கா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 16ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் ஒசாகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.