விளையாடு
15 Jun 2026, 10:04 pm

உலகக்கோப்பை கால்பந்து 2026

ஜெர்மனி, சுவீடன் கோல் மழை

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

7-1

இந்திய நேரப்படி ஞாயிறன்று நள்ளிரவில் நடைபெற்ற ஜெர்மனி - குராக்கோ (குரூப் இ) ஆட்டம் அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதா னத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்திலேயே ஜெர்மனி வீரர் பெலிக்ஸ் கோலடித்தார். 21ஆவது நிமிடத்தில் குராக்கோ வீரர் லிவனோ கோலடித்து பதிலடி கொடுக்க, ஆட்டம் பரபரப்பானது. குறிப்பாக 30ஆவது நிமிடம் முதல் ஜெர்மனி அணி வீரர்கள் தாக்குதல் பாணி ஆட்டத்தை கையிலெடுத்தனர். இதன்பலனாக 38ஆவது நிமிடம் முதல் சீரான இடைவெளி முதல் ஜெர்மனி வீரர்கள் தொடர்ச்சியாக 6 கோல்கள் (நிக்கோ 38’ - ஹாவர்ட்ஸ் 45’, 88’ - ஜமால் 47’ - பிரவுன் 68’, டேனிஸ் 78’) அடித்தனர். ஆட்டநேர இறுதியில் ஜெர்மனி அணி 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது

சுவீடன் மிரட்டல்

அதே போல குரூப் எப் பிரிவின் சுவீடன் - துனிசியா அணிகள் மோதிய ஆட்டம் மெக்சிகோவின் குவாடலூப் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத் தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுவீடன் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சுவீ டன் அணியின் கோல்கள் அனைத்தும் வலுவான ஷாட்கள் என்பது குறிப்பி டத்தக்கது. திங்களன்று நடைபெற்ற மற்ற ஆட்டத்தின் முடிவுகள் :

1. ‘குரூப் எப்’ பிரிவில் இங்கிலாந்து - ஜப்பான் அணிகளின் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

2. ஐவரி கோஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது (குரூப் இ)

ஈரான் - நியூஸிலாந்து

(குரூப் ஜி) நேரம் : காலை 6:30 மணி இடம் : லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

பிரான்ஸ் - செனகல்

(குரூப் ஐ) நேரம் : நள்ளிரவு 12:30 மணி இடம் : நியூ ஜெர்சி, அமெரிக்கா

இராக் - நார்வே

(குரூப் ஐ) நேரம் : அதிகாலை 3:30 மணி இடம் : பாஸ்டன், அமெரிக்கா

சேனல் : ஜீ 5 (ஓடிடி - இலவசம் இல்லை), யுனைட்8 (தொலைக்காட்சி - சந்தா இருந்தால் மட்டும் பார்க்கலாம்) நேரம் : இந்திய நேரப்படி மட்டும்

மகளிர் டி-20 உலகக்கோப்பை தீவிர வருவாய் இழப்பு

ஒலிம்பிக் விளையாட்டுக்கு அடுத்தப் படியாக மிகப்பெரிய விளையாடடுத் திருவிழாவாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து. 23ஆவது சீசன் உலகக்கோப்பை நடைபெறும் இதே நேரத்தில் தான் 10ஆவது சீசன் மகளிர் டி-20 உலகக்கோப்பையும் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

ஆடவர் கிரிக்கெட் போட்டிகளை விட மகளிர் உலகக்கோப்பைகளுக்கு மவுசு குறைவு தான். தற்போது உலகக்கோப்பை கால்பந்து வேறு நடைபெற்று வருவதால், தீவிர வருவாய் இழப்பை நோக்கி மகளிர் டி-20 உலகக்கோப்பை நகர்ந்து வருகிறது.

நியூசிலாந்து - இலங்கை

நேரம் : இரவு 7:00 மணி இடம் : சவுத்தாம்ப்டன், இங்கிலாந்து

இங்கிலாந்து - அயர்லாந்து

நேரம் : இரவு 11:00 மணி இடம் : சவுத்தாம்ப்டன், இங்கிலாந்து

நெதர்லாந்து 2.0 குராக்கோவின் போலி பெருமை

மிகவும் அழகான ஒரு சிறிய கரீபியன் தீவு நாடான குராக்கோ டச்சுக்காரர்களின் பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தாலும் தங்களது சொந்த பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் ஒரு நாடு ஆகும். இது வெனிசுலாவின் கடற்கரைக்கு வடக்கே சுமார் 37 மைல் (60 கிமீ) தொலைவில் அமை ந்துள்ளது. இதுவரை அநேகமாக குராக்கோ பெயரைக் கொண்ட மதுபானத்திற்காகத்தான் அது மிகவும் பிரபலமாக இருந்திருக்கலாம்.

ஆனால், தற்போது உல கக்கோப்பையில் பங்கேற்கும் பரப்பள விலும் மக்கள் தொகையிலும் மிகச்சிறிய நாடு என்ற வரலாற்றைப் படைத்துள்ளது. குராக்கோ உல கக்கோப்பைக்குத் தகுதி பெற்ற போது, அந்த காலகட்டத்தில் (2 மாத ங்களுக்கு முன்பு) அந்நாட்டை ஒட்டு மொத்த உலகமே கொண்டாடியது.

ஆனால் உண்மையில் குராக்கோ வின் பெருமை போலியானது தான். குராக்கோ 1,58,000 மக்கள் தொகை யைக் கொண்ட சிறிய நாடு தான். பிரிட்டனின் 40 நகரங்களை விட சிறியது தான். ஆனால் குராக்கோ முழு மையான இறையாண்மை கொண்ட நாடு கூட அல்ல, நெதர்லாந்து ராஜ்ய த்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. அவர்களது உலகக்கோப்பை அணியில் இருக்கும் வீரர்களில் டஹித் சோங் மட்டும்தான் குராக்கோ தீவில் பிறந்தவர். மற்ற 25 வீரர்களும் நெதர்லாந்தில் இருந்து வந்தவர்கள்.

அதாவது கால்பந்து உலகில் வலுவான அணிகளில் ஒன்றான நெதர் லாந்து தங்கள் வீரர்களை இறக்குமதி செய்து தான், குராக்கோ தீவை கால்பந்து உலகின் ஒரு பெருமை பொருளாக மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை கால்பந்து மைதானத்தில் மீண்டும் குப்பைகளை அகற்றிய ஜப்பான் ரசிகர்கள்

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மைதானங்கள் அதிரும். ஆனால், போட்டி முடிந்த பிறகு, பெரும்பா லான மைதானங்கள் எப்படி இருக்கும்? பாதி சாப்பிட்ட உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் பாட்டில் கள் என குப்பைக் காடாகக் காட்சி யளிக்கும். விளையாட்டு ரசிகர்கள் இத னைத் தாண்டித்தான் வீட்டிற்கு நடப்பா ர்கள். ஆனால், இதற்கு முற்றிலும் விதிவிலக்காகத் திகழ்கிறார்கள் ஜப்பான் நாட்டு ரசிகர்கள்.

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி யை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் அமெரிக்காவின் டல்லாஸில் நடை பெற்றது. தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் டிராவில் நிறைவடைந்தது. போட்டி முடிந்த பின்பு ஒரு துளி குப்பை கூட இல்லாமல் சுத்தமாக அள்ளி மைதானத்தை சுத்தம் செய்துள்ளனர் ஜப்பான் ரசிகர்கள்.

கடந்த கத்தார் உலகக்கோப்பை யின் போதும் இந்நிகழ்வு அரங்கேறியது. பலம் வாய்ந்த ஜெர் மனி அணியை 2-1 என்ற கணக்கில் ஜப்பான் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. ஒட்டுமொத்த நாடும் அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கி யிருந்த போதும், ஜப்பான் ரசிகர்கள் மைதானத்தில் தாங்கள் அமர்ந்திருந்த பகுதியை உடனே சுத்தம் செய்த னர். இதைவிட ஆச்சரியம் என்னவென் றால், கத்தார் - ஈக்வடார் அணிகள் மோதிய தொடக்க ஆட்டத்தின் போது, ஜப்பான் அணியே விளையாட வில்லை. ஆனாலும், ஒரு சாதாரண ரசிகராகப் போட்டியைப் பார்க்க வந்த ஜப்பானியர்கள், போட்டி முடிந்ததும் பிறர் போட்ட குப்பைகளையும் சேர்த்து அள்ளினர்.

ஏன் இந்த பழக்கம்?

ஜப்பானியர்களின் இந்த வியக்க வைக்கும் பண்பிற்கு பின்னால் அவர் களின் கலாச்சாரமும், பள்ளி வளர்ப்பும் இருப்பதாக சமூகவியலாளர்கள் கூறு கிறார்கள். ஜப்பானிய மொழியில் ஒரு பழமொழி உண்டு. “ஒரு பறவை தான் அமர்ந்திருந்த இடத்தில் எதையும் விட்டுச் செல்வதில்லை” என்பதே அது. அதாவது, “ஒரு இடத்தை நீங்கள் எப்படிப் பார்த்தீர்களோ, அதே போல சுத்தமாகத் திருப்பி ஒப்படை யுங்கள்” என்பதை அவர்கள் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளனர். ஜப்பானில் உள்ள பள்ளிகளில் வகுப்ப றைகளையும், பள்ளி வளாகத்தையும் துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்வதில்லை. குழந்தைகளே தங் கள் கைகளால் சுத்தம் செய்கிறார்கள். சிறு வயது முதலே இது பழக்கப் படுத்தப்படுவதால், வளர்ந்த பிறகும் பொது இடங்களைச் சுத்தமாக வைப் பது அவர்களின் இரத்தத்திலேயே ஊறிவிடுகிறது. ஜப்பானிய கல்வி முறையில் விளையாட்டு என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது ஒரு ஒழுக்கக் கல்வி. விளையாட்டில் தோற்றாலும் சரி, வென்றாலும் சரி... தங்களின் உயர்ந்த பண்பால் உலக மக்களின் இதயங்களை ஒவ்வொரு முறையும் வென்று விடுகிறார்கள் ஜப்பான் ரசிகர்கள்.