தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உலகக்கோப்பை 2026 : கலக்கும் இரட்டையர்!

21 Jun 2026, 9:35 pm
உலகக்கோப்பை 2026 : கலக்கும் இரட்டையர்!

உலகக்கோப்பை 2026 : கலக்கும் இரட்டையர்!

2026ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து என்னும் மாபெரும் விழா, வெறும் 48 நாடுகளின் பலப்பரீட்சை மட்டுமல்ல; அது வறுமையின் சாம்பலிலிருந்து தீப்பறந்து, அகதி முகாம்களின் கொடு மையை வென்று, உலகின் உச்சகட்ட மேடையில் கால் பதித்த வீரர்களின் அசாத்திய வரலாற்றுக் காவியம். இந்தக் கோப்பையில் வெறும் வெற்றியும், தோல்வியும் மட்டுமே களத்தில் இல்லை. கண்ணீரும், கனவும், ரத்தமும் சதை யும் பகிர்ந்த சகோதரத்துவமும்உண்டு.

சஹாரா பாலைவனத்தின் தழும்புகள்

வில்லியம்ஸ் சகோதரர்கள் : விளை யாட்டு உலகமே திரும்பிப் பார்க்கும் ஆகச்சிறந்த பின்னணி இவர்களுடை யது. ஸ்பெயினுக்காக விளையாடும் நிக்கோ வில்லியம்ஸும், கானாவின் கொடியை ஏந்தும் இன்யாகி வில்லி யம்ஸும் இன்று இருவேறு தேசங்களின் நட்சத்திரங்கள். ஆனால் அவர்களின் பிறப்பின் வேர்கள் ஒரே மண்ணில். ஒரே வலியில்.ஒரே கனவில். இவர்களின் பெற்றோர் பெலிக்ஸ்-மரியா வாழ்க்கை யை நோக்கி கானாவிலிருந்து ஐரோ ப்பாவிற்கு நடைப்பயணம் மேற்கொண் டனர். “நடைப் பயணம்” என்ற சொல் இங்கே எவ்வளவு குறைத்தே சொல்கி றோம் என்று நினைத்துப் பாருங்கள். கை யில் பணமின்றி, 50 டிகிரி நெருப்பில் சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனத்தை வெறும் காலால் நடந்து கடந்தனர். அந்த மணல் வெப்பத்தால் தந்தை பெலிக்ஸ் தனது கால்களின் உணர்வை இன்றள வும் இழந்துள்ளார். ஒரு மனிதனின் கால்கள் உணர்வை இழந்தன; ஆனால் அந்தக் குடும்பம் நம்பிக்கையை இழக்கவில்லை.

ஸ்பெயின் எல்லையில் கைதாகி, ஒரு பாதிரியாரின் கருணையில் தஞ்சம் புகுந்தபோது மரியா கர்ப்பமாக இருந் தார். வறுமையின் கோரப்பிடியில், தந்தை பெலிக்ஸ் லண்டன் வணிக வளா கங்களில் மேசை துடைக்கும் வேலை செய்தார். அந்த மேசைகளை துடைத்த கரங்களுக்கே இன்று உலகக் கோப்பை சாம்பியன்களை வளர்த்தெடுத்த பெருமை.

அந்தக் கனல் மண்ணிலிருந்து பிறந் தவர்கள்தான் இந்த உலகக்கோப்பை யில் நேருக்கு நேர் மோதுகிறார்கள். ஒரு தாய்வயிற்றில் பிறந்தவர்கள் இரண்டு கொடிகளுக்காக மோது கிறார்கள். இதைவிட பெரிய கால்பந்து கவிதை வேறு எது?

ஒற்றைத் தாயின் ஐந்து சிங்கங்கள்

டிம்பர் சகோதரர்கள்: கரீபியன் தீவான குராசோவைச் சேர்ந்த மர்லின் டிம்பர், தந்தை பிரிந்து சென்ற பிறகு ஐந்து ஆண் குழந்தைகளையும் நெநர் லாந்தில் ஒற்றைத் தாயாக வளர்த் தெடுத்தார். வறுமையின் நடுவே, தனிமையின் நடுவே ஒரு பெண் ஐந்து உலக வீரர்களை உருவாக்கினார் என்பது வரலாறு அரிதாக மட்டுமே பதிவு செய்யும் அதிசயம். தந்தையின் அடையாளத்தை மறுத்து, தங்களை ஆளாக்கிய தாயின் “டிம்பர்” என்ற குடும்பப் பெயரையே தங்கள் அடையாளமாக மாற்றிக் கொண்ட ஜுரியன், குயின்டன் டிம்பர், வார்த்தை களால் அன்பை சொல்லவில்லை செயலால் நிரூபித்தனர். சிறிய நகரில் பிறந்து வளர்ந்த இவர்கள், 2024ஆம் ஆண்டு நெதர்லாந்து தேசிய அணிக்காக ஒரே போட்டியில் மாற்று வீரர்களாகக் களம் புகுந்து புதிய டச்சு சாதனையைப் படை த்தனர். இன்று ஜுரியன் ஆர்சனலின் தற்காப்புத் தூணாகவும், குயின்டன் பெயின்னூர்ட்டின் கேப்டனாகவும் உலகையே வியக்க வைக்கிறார்கள். சாலைகளில் ஒரு தாய் தன் பிள்ளை களுக்காக கொட்டிய வியர்வை இன்று லண்டனிலும் ஒலிக்கும் கோல் கோஷங்களில் மாறொலிக்கிறது. “டிம்பர்” என்ற பெயர் வெறும் குடும்பப் பெயரல்ல; அது ஒரு தாயின் தியா கத்தின் சின்னம். ஹெர்னாண்டஸ் சகோதரர்கள்: பிரான்ஸ் அணிக்காக தியோ ஹெர்னா ண்டஸும் லூகாஸ் ஹெர்னாண்டஸும் ஒரே நீல சட்டை அணிந்து மைதா னத்தில் நிற்கும்போது அது வெறும் கால்பந்து அல்ல, அது சகோதர சங்கமம். ஐரோப்பிய கால்பந்தின் பல்வேறு முன்னணி கிளப்புகளில் தங்கள் வலிமையை தனித்தனியாக நிரூபித்த இந்தச் சகோதரர்கள்.

ஒரே ரத்தம், இரண்டு கொடிகள்

டூயே சகோதரர்கள் : இந்த உலகக் கோப்பையின் மிகவும் உணர்ச்சிப் பூர்வமான போட்டிகளில் ஒன்றாக அமையக்கூடியது டெசிரே டூயேவும் குயேலா டூயேவும் சந்திக்கும் தரு ணம். ஒருவர் பிரான்ஸுக்காக விளை யாடுகிறார்; மற்றொருவர் ஐவரி கோஸ்ட் கொடியை ஏந்துகிறார். ஒரே குடும்பத்தின் இரு கிளைகள் இன்று இரு தேசங்களின் கனவுகளை மார்போடு சுமக்கின்றன. ஒரே மேசை யில் அமர்ந்து சாப்பிட்ட கரங்கள், இன்று வெவ்வேறு கொடிகளை நோக்கி ஆடு கின்றன. இவர்களும் கால்பந்துக்கு மட்டுமே சாத்தியமான அந்த அரிய கண்ணீர்க் கவிதையை வாழ்கிறார்கள். சரித்திரத்தின் இரட்டைப் படிகள் கால்பந்து என்பது வெறும் 90 நிமிட ஆட்டமல்ல; அது வியர்வையாலும் வியூகங்களாலும் எழுதப்படும் ஒரு காவியம். ஒரே தாயின் கருவரையில் உதித்து, ஒரே மைதானத்தின் இருபுற மும் சிறகடித்து கால்பந்து வரலாற்றில் என்றும் அழியாத தடம் பதித்த நான்கு இரட்டையர் ஜோடிகளின் வாழ்க்கை வரலாற்றின் மிளிரும் அத்தியாயங்கள். நெதர்லாந்தின் பிராங்க் டி போயர், ரொனால்ட் டி போயர் இணைந்து அயாக்ஸ் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இவர்கள், நெல் வயல்களிலிருந்து கிளம்பி உலகக் கால் பந்தின் திசைகளையே மாற்றியமைத்தனர். ரியோ டி ஜெனிரோவில் ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன்களாக பிறந்த ரபேல் டா சில்வா, பேபியோ டா சில்வா தெருக்களில் சம்பா வேகத்தோடு பந்து துரத்திய காலங்களிலிருந்து, இங்கி லாந்துக்கு அள்ளிச் சென்ற கதை மனித வெற்றியின் இலக்கணம். ரத்தம் பேசும் மைதானம் அண்ணன் எறிந்த பந்தை தம்பி வலைக்குள் தள்ளும் பேரழகை இந்த இரட்டையர்கள் மைதானத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றனர். வறுமை யின் உலைக்களத்தில் வெந்து, பெற் றோரின் வியர்வைத் துளிகளை மூல தனமாக்கி, இன்று உலகக் கோப்பை மைதானங்களின் புல்வெளிகளில் இவர்கள் பதித்த கால் தடங்கள். “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”என்ற வரிகளுக்குக் கால்பந்து எழுதிய இலக்கணம். மைதானத்து இரட்டையர்களின் பாசம், கால்பந்து உள்ளவரை சரித்திரமாய் வாழும்! - சி.ஸ்ரீராமுலு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.