தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

14 Jun 2026, 9:40 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து 2026

பிரேசில் போராட்டம்; ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அபாரம்

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேம்-சைடு கோல் இந்திய நேரப்படி சனியன்று நள்ளிரவில் நடைபெற்ற கத்தார் - சுவிட்சர்லாந்து (குரூப் பி) ஆட்டம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் நிறைவடைந்தது. அதுவும் ஆட்டநேர இறுதியில் (90’+4) சுவிட்சர்லாந்து வீரரின் (மிரோ) சேம்-சைடு கோலால் தான் கத்தார் அணி போட்டியை டிரா செய்ய முடிந்தது. இல்லையென்றால் இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றிருக்கும். பிரேசில் திணறல் தொடர்ந்து குரூப் சி பிரிவின் பிரேசில் - மொரோக்கோ ஆட்டம் அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடை பெற்றது. 5 முறை சாம்பியனான பிரே சில் அணியுடன் விளையாடுகிறோம் என்ற கலக்கம் இல்லாமல், ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்திலேயே மொரோக்கோ அணியின் சைபாரி கோலடித்தார். இந்த கோலால் பிரேசில் வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் அடுத்த 11ஆவது நிமி டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் வினீ சியஸ் ஜூனியர் கோலடித்து பதிலடி கொடுத்தார். அதன்பிறகு இரு அணி களும் தற்காப்பை பலப்படுத்தின. குறிப்பாக மொரோக்கோ அணி பிரேசிலின் முக்கிய ஷாட்களை அரு மையாக தடுத்தது. ஆட்டநேர இறுதி வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்காததால் இந்த ஆட்டம் டிராவில் நிறைவடைந்தது. ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற குரூப் சி பிரிவின் லீக் ஆட்டத்தில் ஹைத்தி - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. கனடாவின் வான்கூரில் நடைபெற்ற குரூப் டி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

பிரேசில் திணறல் நியாமானது தான்

போயும், போயும் மொரோக்கோ அணியிடம் பிரேசில் டிரா செய்துள்ளதே என உலக கால்பந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஏளனமாக பேசி வருகின்றனர். ஆனால் மொரோக்கோ வலுவான அணி தான். ஆப்பிரிக்காவின் தலைசிறந்த அணிகளில் ஒன்று. கடந்த 22ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரில் பிரேசில் அணி காலிறுதியில் தோல்வியை தழுவியது. ஆனால் மொரோக்கோ அரையிறுதி வரை முன்னேறி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி கால்பந்து உலகை மிரட்டியது. அதனால் பிரேசில் அணி மொரோக்கோ அணியிடம் டிரா செய்ததே பெரிய விசயம் தான். குறை சொல்ல எதுவுமில்லை.

களத்தில் இன்று...

துனிசியா - சுவீடன் (குரூப் எப்) நேரம் : காலை 7:30 மணி இடம் : குவாடலூப், மெக்சிகோ

ஜெர்மனி - எகிப்து (குரூப் ஜி) நேரம் : நள்ளிரவு 12:30 மணி இடம் : சியாட்டில், அமெரிக்கா

ஸ்பெயின் - காபோ வர்டி (குரூப் எச்) நேரம் : காலை 9:30 மணி இடம் : பிலடெல்பியா, அமெரிக்கா

சவூதி அரேபியா - உருகுவே (குரூப் எச்) நேரம் : அதிகாலை 3:30 மணி இடம் : மியாமி, அமெரிக்கா

சேனல் : ஜீ 5 (ஓடிடி - இலவசம் இல்லை), யுனைட்8 (தொலைக்காட்சி - சந்தா இருந்தால் மட்டும் பார்க்கலாம்) நேரம் : இந்திய நேரப்படி மட்டும்

புல்வெளிப் பூபாளம்: உலகக் கோப்பைக் களத்தில் தமிழ் வேர்கள்!

சில சாதனைகள் வெறும் விளை யாட்டு சாதனைகள் அல்ல. அவை, ஒரு சமூகத்தின் கனவுகளை யும் போராட்டங்களையும் நம்பிக்கை யையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் தருணங்களாக மாறுகின்றன. 2026ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும் பிபா உலகக் கோப்பை, கால்பந்து வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ் வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கி யிருக்கிறது. ஏனெனில், இம்முறை உலகக்கோப்பைப் புல்வெளியில் 2 தமிழ் இதயங்கள் துடிக்கின்றன. ஒன்று கரீபியன் கடலோரத்திலிருந்து வந்தது; மற்றொன்று தென்னகப் பனிப்பொழி விலிருந்து வந்தது. இரண்டுமே ஒரே வேரிலிருந்து கிளைத்தவை, தமிழ் வேரிலிருந்து! ஒரு காலத்தில் உலகின் பல நாடு களுக்கு அகதிகளாகவும் புலம்பெய ர்ந்தவர்களாகவும் சென்ற தமிழர்கள், இன்று கல்வி, அறிவியல், தொழில் நுட்பம், வணிகம், அரசியல், விளை யாட்டு என பல்வேறு துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வரு கின்றனர். அந்த நீண்ட பட்டியலில் இன்று இரு புதிய பெயர்கள் பொன் னெழுத்துக்களால் பதிவாகியிருக் கின்றன; நிஷான் வேலுப்பிள்ளை,

சாமுவேல் முட்டுசாமி

சாமுவேல் (Samuel Moutoussamy). புலம்பெயர்தல் என்பது தமிழரின் சாபமல்ல; அது தமிழரின் சக்தியின் சாட்சி. கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற முன்னோர்களின் பேரர்கள் இன்று உலகக்கோப்பை மேடையில் நிற்கிறார்கள் என்பது, வரலாற்றின் மிகப் பெரிய கவிதை. சாமுவேல் முட்டுசாமி பிரான்சில் பிறந்து, ஐரோப்பியக் புல்வெளிகளில் பந்தைச் செதுக்கி, இன்று காங்கோ நாட்டின் தேசிய ஜெர்சி அணிந்து உலகக்கோப்பை யில் கம்பீரமாய் நிற்கிறார் சாமு வேல் முட்டுசாமி. 19ஆம் நூற்றாண் டில் கரும்புத் தோட்டத் தொழிலா ளர்களாகக் குவாடலூப் தீவுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித் தோன்றல் இவர். கரீபியன் கடலின் உப்பு காற்றில் கரைந்த தமிழ் மரபு, இன்று ஆப்பிரிக்காவின் பச்சை புல்வெளியில் மீண்டும் பூத்திருக்கி றது என்று சொன்னால் மிகையாகாது. மைதானத்தின் நடுவே எதிரணியின் நச்சுப் பாய்ச்சல்களைத் தனது தற்காப்புப் பாசறையால் தடுத்து நிறுத்துவதில் வல்லவர் முட்டுசாமி. நடுகளத்தில் (Midfield) இவர் பந்தைக் கடத்தும் நேர்த்தி, கம்பன் தன் காவியத்தில் சொற்களைக் கடத்தும் அழகிற்கு இணையானது. அமைதி யாக நகர்ந்து, எதிரியின் வியூகங் களை உடைத்தெறிந்து, ஆட்டத்தின் போக்கைத் தன்வசப்படுத்துவதே இவ ருடைய கலை. களத்தில் இவர் ஆடும் போது, தமிழன் பேசாமல் சாதிப்ப வன் என்ற பழமொழி உயிர்பெறு கிறது.

நிஷான் வேலுப்பிள்ளை

மெல்போர்ன் நகரின் பனிப்பொழி வில் வளர்ந்தாலும், நிஷான் வேலுப் பிள்ளையின் நரம்புகளில் ஓடு வது தமிழரின் அடங்காத வீரம்! ஆஸ்தி ரேலியாவின் மெல்போர்னில் பிறந்த இவர், இலங்கைத் தமிழ் வம்சாவளி யைச் சேர்ந்தவர். ‘மெல்போர்ன் விக்டரி’ கிளப்பில் தொடங்கி, இன்று ஆஸ்திரேலியாவின் ‘சாக்கரூஸ்’ (Socceroos) அணியின் அசைக்க முடியாத ஈட்டியாக உருவெடுத்துள் ளார். 2026 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் விளை யாடும் முதல் தமிழ் வம்சாவளி வீரர் என்கிற வரலாறு படைத்திருக்கிறார் இந்த 25 வயது இளைஞன். இது வெறும் ஒரு வீரரின் சாதனை மட்டு மல்ல; இலங்கை உள்நாட்டுப் போரி லிருந்து தப்பிச் சென்ற தமிழ் குடும்பங் களின் வலியிலிருந்து பிறந்தவெற்றி. உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி யின் இக்கட்டான தருணங்களில் 3 முக்கிய கோல்களை அடித்து, அணியை உலகக் கோப்பைக்குத் தகுதி பெறச் செய்த பெருமை இவ ருக்கு உண்டு. 26 பேர் கொண்ட ஆஸ்தி ரேலிய அணியில் முன்கள (Forward) வீரராகச் சேர்க்கப்பட்டுள்ள இவர், இனி உலக மேடையில் தமிழரின் கொடியை உயர்த்துவார்.

பெற்றோரின் தியாகம், பிள்ளைகளின் பெருமை

இது நிஷானின் வெற்றி மட்டுமல்ல. அதிகாலை கடுமையாக உழைத்த அம்மா, அந்நிய நாட்டில் வாடகை வீட்டில் கனவுகளை வளர்த்த அப்பா, பயிற்சி மைதானத்திற்கு அழைத்துச் சென்ற உறவினர்கள், ஊக்கம் கொடுத்த ஆசிரியர்கள் என்று நூற்றுக் கணக்கான கைகளின் வெற்றி இது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வெற்றி. பெரிய கனவு காணும் ஒவ்வொரு தமிழ் இளைஞரின் வெற்றி. உலகக்கோப்பை கால்பந்து களத்தில் வேலுப்பிள்ளை நிஷான் ஓடு கிறார். அவரது பின்னால் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக் கான தமிழர்களின் கனவுகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அதே கனவுகள் முட்டுசாமியின் கால்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. உங்கள் கனவு எதுவாக இருந்தா லும் “நம்மால் முடியுமா?” என்று கேட்காதீர்கள். “எப்போது சாதிப்போம்?” என்று கேளுங்கள். உலக மேடையில் நிற்க முடியும்; வழி நடத்த முடியும்; வரலாறு படைக்க முடியும். நிஷான் வேலுப்பிள்ளையும், சாமுவேல் முட்டுசாமியும் அதை இன்று நிரூபித்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் சாதிக்க வாழ்த்துவோம்! - சி.ஸ்ரீராமுலு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.