தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாழ்க நீ எம்மான்” பிடல் காஸ்ட்ரோ - கவிஞர் ஸ்ரீலஸ்ரீ

1 hour before
வாழ்க நீ எம்மான்” பிடல் காஸ்ட்ரோ - கவிஞர் ஸ்ரீலஸ்ரீ

“வாழ்க நீ எம்மான்” பிடல் காஸ்ட்ரோ - கவிஞர் ஸ்ரீலஸ்ரீ

கியூப பிரான் கிராமத்தில்கரும்புத் தோட்டத்தில்பூத்த செம்பூவே

கரீபிய கடற்கரையில்உதித்த செஞ்சூரியனே

சிறிய கியூபாவை மக்களின் எழுச்சியால் பெரிதாக்கியவனே

சர்க்கரைக் கிண்ணத்தைமக்கள் புரட்சியின் சின்னமாய் மாற்றியவனே

பாடிஸ்டாவை வீழ்த்தி மக்களாட்சியை மலரச் செய்த மாவீரனே

தோழர்கள் கொண்டாட ஏகாதிபத்தியத்தை திண்டாட வைத்தவனே

கியூப மக்கள்செங்குருதியில் கலந்திட்ட மைந்தனே

மக்கள் எழுச்சியில் விளைந்திட்ட தோழனே

புரட்சியால் புதுயுக கியூபாவை புலரச் செய்தவனே

அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தநாயகனே

100 ஆண்டுகள் கடந்தும் நரைக்காத சீரிளமை புரட்சியாளனே

தொட்டுவிடும் தூரத்தில் இருந்த போதும் அமெரிக்காவும் தொட முடியாத எஃகுக் கோட்டையை எழுப்பியவனே

உலத்தை கட்டியாள நினைத்தவர்களைசின்னஞ் சிறு தேசத்தால் சிறைப்படுத்தியவனே

638 முறை அராஜக கொலை முயற்சி அத்தனையும் உடைத்த மா வீரனே

“கற்காதோர் கற்றுக்கொள்ளுங்கள்காற்றவர்கள் கற்றுக் கொடுங்கள்”என்று உலகிற்கு வகுப்பெடுத்த ஆசிரியனே

மணிக்கொருவர் என்று மருத்துவர்களை உருவாக்கி இந்த பூமிக்கே இலவச வைத்தியம் பார்த்தவனே

தேச வளத்தை வட்டமிட்ட அன்னியக் கழுகுகளை வீழ்த்திய வேட்டையனே

ஏகாதிபத்திய பிடரியை அச்சமற்று அறுத்தெறிந்த சூரனே

சரித்திரங்களில் சாமானியன் உளியால் வடிக்கப்பட்ட

சோசலிச நாயகனே

அரிய தாதுக்களின் புதைவிடம்இரும்பு தாதுக்களும் உன்நாட்டில் ஏராளம்

இருப்பினும்இயற்கையை அதன் போக்கில் ஆளவைத்த நீ ஒரு வாரணம்

நீ சே விற்கு மட்டுமல்ல... சோசலிச ரஷ்யாவிற்கும் தோழன்

ஏகாதிபத்தியங்களை எதிர்ப்பதிலோ நீ காலன்

அணிசேரா நாடுகளுக்கோ நீ காவலன்

அணிசேரா இயக்கத்தின் தலைமகனும் நீ

மக்களுடன் அணி சேர்ந்து அனைத்தையும் பொதுவில் ஆக்கிய புதுயுவனும் நீ.

போராட...புரட்சி எழும்எழுந்து வாழும்வாழ்ந்து நிலைக்கும்நிலைத்து நீடிக்கும் நீடித்து மேலெழும்மேலெழுந்து நம்பிக்கையளிக்கும்

அந்தப் புரட்சி எனும் நம்பிக்கையின் நங்கூரமேவாழ்க நீ எம்மான்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.