பிடல் காஸ்ட்ரோ உண்மைகளுக்கான உரையாடல் - ச. லெனின்
17 Aug 2026, 10:00 pm

பிடல் காஸ்ட்ரோ உண்மைகளுக்கான உரையாடல் - ச. லெனின்

1966ஆம் ஆண்டு பொலிவியாவுக்குப் புரட்சிப் பயணத்தை மேற் கொண்ட சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோவுக்கு எழுதிய கடிதத்தில், ‘என் மனைவி மற்றும்குழந்தைகளுக்குப் பொருளாதாரரீதியாக நான் எதையும் விட்டுச் செல்லவில்லை என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை; அது எனக்கு மகிழ்ச்சியே. நான்அவர்களுக்காக எதையும் கேட்கவுமில்லை. ஏனெனில், அரசு அவர்கள் வாழவும் கல்வி பெறவும் போதுமானதைக் வழங்கும்’ என்று நம்பிக்கை ததும்ப எழுதியிருக்கிறார். இது அவரது குடும்பத்துக்கானதாக மட்டும்சேகுவேரா குறிப்பிடவில்லை. சோசலிசக் கியூபாவில்அனைத்துக் கியூபர்களுக்கும் அது உத்தரவாதப்படுத்தப்படும் எனும் நம்பிக்கையின் வெளிப்பாடே ஆகும். கல்வி,மருத்துவம், வாழ்வாதாரம் என்பவை தனிநபர் பொறுப்பு மட்டுமல்ல, அதுசமூகத்தின் பொறுப்பும்தான் எனும் மேம்பட்ட சமூக அமைப்பை நோக்கிய பயணத்தைக் குறிக்கிறது. ‘நாம்ஒவ்வொரு கியூபரின் வாழ்க்கை குறித்தும் கவனம் எடுத்துக்கொள்கிறோம்’ என்று 1961-லேயே பிடல் கூறியவார்த்தைகள், சொல்லாக மட்டுமல்லாமல் செயலாகவும் பரிணமித்தது.

புரட்சிக்குப் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடும் தாக்குதல்களைக் கியூபா எதிர்கொண்டது; இன்றும் அது தொடர்கிறது. ஆனபோதும் கியூபா நூறுசதவீதம் கல்வியறிவை அடைந்துள்ளது. மருத்துவத் துறையில் ஆற்றல் மிக்க பங்களிப்பைச் செய்துள்ளது.கியூபாவில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கு ஒன்பது மருத்துவர்கள் உள்ளனர். அமெரிக்காவில் இது மூன்றுமருத்துவர்கள் எனும் விகிதத்தில்தான் உள்ளது. இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உலகின் 145நாடுகளுக்குச் சென்றுமருத்துவம் பார்த்துள்ளனர். இவ்வளவு மனிதத்தன்மையுள்ள கியூபாவை “தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு” என்று கூறி, பல்வேறு தடைகளை விதித்துமுட்டுக்கட்டை போடுகிறது அமெரிக்கா. கியூபாவுக்குஎதிராக சுமார் 240 சட்டங்களை இயற்றி பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. கொரோனா காலத்தில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் இறக்குமதிசெய்வதற்குகூட கியூபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் அறுபத்தேழு ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதாரப் போர் மற்றும் முற்றுகையால் கியூபா வதைக்கப்படுகிறது.

நாம் வெல்வோம்

‘இது ஏனென்றால், இந்த ஏகாதிபத்தியவாதிகளால் நாங்கள் இங்கிருப்பதை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. கியூப மக்களின் கௌரவம், உறுதி, தைரியம், கோட்பாட்டு உறுதி, தியாகம் மற்றும் புரட்சிகர உணர்வை அவர்களால் ஏற்க முடியவில்லை. நாங்கள்இங்கே அவர்களது மூக்குக்குக் கீழே நேராக உட்கார்ந்துகொண்டு, சோசலிசப் புரட்சியைக் கொண்டுவந்திருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று 1961ஆம் ஆண்டே பிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார். தாய்நாடு அல்லது மரணம், நாம் வெல்வோம் என்பதாக அதை நிறைவு செய்கிறார் பிடல்.

நாம் வென்றே தீருவோம் என்கிற பிடலின் முழக்கம், கியூப மக்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளஉணர்வுப்பூர்வமான வார்த்தைகளாகும். தற்போதைய நிலையில் கியூபா பல பொருளாதாரச் சீர்திருத்தங்களைமேற்கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பயந்து கியூபா மேற்கொண்டுள்ள நடவடிக்கை எனச் சித்தரிக்கப்படுகிறது. ஆனால், அதை முற்றாக மறுத்துள்ள கியூபஜனாதிபதி மிகுயெல் தியாஸ் கேனல், இது கியூபமக்களுக்கான பொருளாதார நடவடிக்கைதானே தவிர அமெரிக்காவுக்கானதல்ல என்று கூறியுள்ளார். ‘நாங்கள்சரியவில்லை, உடையவில்லை, ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நாடாக நாங்கள் இருக்கிறோம். ஒரு சிறிய நாட்டை வஞ்சிப்பதில் தீய நோக்கம் இருக்கிறது. இது குற்றம். கியூபா போராடுகிறது, மாற்று வழிகளை உருவாக்குகிறது. இது எளிதான பாதை அல்ல, காலம் எடுக்கும் வழிமுறையாக உள்ளபோதும், கியூபாதாக்குப்பிடிக்கும் - முன்னேறும்’ என்கிறார் மிகுயெல்தியாஸ் கேனல்.

உண்மைகளுக்கான உரையாடல்

அமெரிக்காவின் 250ஆவது விடுதலைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆற்றிய உரையில், ‘250 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா நிறுவப்பட்டதிலிருந்து அந்நாட்டுக்கு உருவாகியுள்ள மிகக் கடுமையான அச்சுறுத்தல்கம்யூனிசம்தான்’ என்று கூறியுள்ளார். ஐரோப்பாவை கம்யூனிசம் எனும் பூதம் ஆட்டிப்படைக்கிறது என்றுகம்யூனிஸ்ட் அறிக்கை அறிவித்ததுபோல் ஆளும் வர்க்கம் கம்யூனிசத்தைப் பார்த்து அஞ்சுவது இயல்புதான்.ஆனால், டிரம்ப்பின் வார்த்தைகளோ, கம்யூனிசம் குறித்துத் திட்டமிட்டுத் தவறாக மக்கள் மத்தியில் பிரச்சாரம்செய்வதையே காட்டுகிறது. இதைத்தான் ‘சோசலிசமும் கம்யூனிசமும் மனித குலத்துக்கே எதிரிகளாகச்சித்திரிக்கப்பட்டன. உலகின் பல பகுதிகளைப் போலவே கியூபாவிலும் எதிர் புரட்சிக் கூட்டம் பயன்படுத்திய ஒருவழிமுறை அது’, ‘ஒரு நுட்பமான கதையைக் கட்டுகிறார்கள். அதை உலகம் முழுவதும் பரப்புகிறார்கள். எல்லாஊடகங்களிலும் வெளியிடுகிறார்கள். இவ்வாறாக உலகம் முழுவதும் உள்ள கூலிப்படையினர், சுரண்டல்காரர்கள் மற்றும் பொய்யர்களின் கூட்டம் ஒன்றுசேர்கிறது’ என்கிறார் காஸ்ட்ரோ. இவ்வார்த்தைகள் இன்றும் காலப்பொருத்தம் வாய்ந்தவையாக உள்ளன.

பொய்களுக்கு எதிராக பிடலின் உண்மைக

ளுக்கான உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவரைவிட அதிகமாகப் பேசுகிறவரையோவிவாதிப்பவரையோ நம்மால் பார்க்க முடியாது. புரட்சிநடந்து முடிந்த ஒரு வார காலத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிடல் சுமார் ஏழு மணிநேரம் உரையாற்றியுள்ளார். உரையின் தொடக்கத்தில் தங்களது அன்றாட வேலைகளை மறந்து உரையுடன் லயித்துப்போன கியூப மக்கள் நேரம் போகப்போக,தங்களின் அன்றாட வேலைகளைச் செய்துகொண்டே உரையைக் கேட்டனர். இந்த உரையாடல் ஏகாதிபத்திய பொய்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டியது. கியூபாவுக்கு வஞ்சகம் செய்பவர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது.‘முடிவற்ற உரைகள் எல்லாம் கடந்த காலத்தைச் சேர்ந்தவை. புரட்சி நடந்தேறிய காலக்கட்டத்தில் நாடுதுயருற்றிருந்த நெருக்கடியான நேரத்தில் மக்களின் தன்னலமற்ற உழைப்பு நாட்டின் வளர்ச்சிக்குப் மிகவும்அடிப்படைத் தேவையாக இருந்தது. மக்களின்இந்தப் தன்னலமற்ற பங்களிப்பைப் பெறுவதற்காக, இருக்கும் நெருக்கடி நிலைகள் குறித்து மக்களுக்கு உணர்வுப்பூர்வமாகப் புரியவைக்கவும் மீண்டும் மீண்டும் விளக்கங்களை அளிக்கும், சிக்கல்களைப் புரியவைக்கும் நீண்ட முடிவுறாத உரைகள் தேவையாக இருந்தன. ஆனால், இப்பொழுதோ, பிடலின்அந்த நீண்ட உரைகளுக்கு அவசியம் இல்லை. ஏனெனில் அன்று மிகுந்த உழைப்புடன் மெனக்கெட்டுப் புரியவைத்த விஷயங்கள் அனைத்தையும், இன்று மிக எளிதில்புரிந்துகொள்ளும்படி மக்களின் மனநிலை உயர்ந்துவிட்டது. பிற்காலத்தில் பிடலின் உரைகள் முன்பைவிட உருமாறி மிகக் கச்சிதமாகிவிட்டன’ என்று நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர்கேப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ் குறிப்பிடுகிறார்.

பொழுதின் போதாமை

பிடலின் தொடர் உரையாடல்கள் கியூப மக்களிடம் வெளிச்சத்தைப் பாய்ச்சி அவர்களை நிலைப்படுத்தியுள்ளன என்பதுதான் எதார்த்தம். ஆணைகளைப் பிறப்பிப்பது எளிது. இலக்கின் உள்ளடக்கத்தை விளக்கி அவற்றைப் புரியவைத்து உளப்பூர்வமாக ஏற்றுச் செயல்படுத்த வைப்பதோடு நடைமுறையில்அனைத்தையும் ஒருமுகப்படுத்தி லட்சியத்தை நோக்கி முன்னேறச் செய்வதே முக்கியப் பணியாகும். அதை பிடலின் கடும் உழைப்பு சாத்தியமாக்கியது. மார்க்வஸ் கூறுவதுபோல், ‘அவர் ஒரு இரும்புமனிதர். ஒரு நாளின் பொழுது அவருக்குப் போதுமானதாக இருந்ததில்லை. பொழுதின் போதாமையால்அவருடைய வேலை முறைகள் குழம்பிக் கிடக்கின்றன. அவர் ஓய்வெடுக்கும் வழிமுறைகள் மிக அபூர்வமானவை.’ நள்ளிரவுவரை தனதுபணிகளில் மூழ்கிச் சோர்வுற்றுச் செல்லும் பிடல் அதிகாலையில் சில மணிநேர நீச்சலுக்குப் பிறகு சுறுசுறுப்புடன் திரும்பும் பழக்கம் உடையவர். உத்வேகம் நிறைந்த பிடலின் பணிகள் கியூபாவின் அடித்தளமாக உள்ளன.அவை எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் செல்வதற்கும் உரமாகத் திகழ்கின்றன.

‘நாம் பொய்களோடு வாழ்க்கைப்பட்டிருக்கிறோம். அவற்றோடு வாழ்ந்திருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நாம் உண்மைகளைக் கேள்விப்படுகிறபோது இந்த உலகம் திக்குமுக்காடிப்போவதாகத் தெரிகிறது’ என்கிற பிடலின் வார்த்தைகள், ஆட்சியாளர்களின் பொய்களுக்கு எதிராகஉண்மைகளை முன்வைத்து அதிகார வர்க்கத்தைத் திக்குமுக்காடச் செய்த மாணவர்கள், இளைஞர்களின்போராட்டங்களைக் கண்முன் நிறுத்துகின்றன. மாணவப் பருவத்தில் அரசியலுக்கு வந்த பிடலும்அதிகாரத்தைத் தனது போர்க்குரலால் திக்குமுக்காட வைத்தவர்தான். ‘நீங்கள் என்னைத் தண்டிக்கலாம், ஆனால்வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்று நீதிமன்றத்தில் அவர் எழுப்பிய முழக்கம் காலாகாலத்துக்கும் வாழ்கிறது. பிடலின் போர்க்குணத்தை உலகெங்கும் இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.கட்டுரையாளர் : சிபிஐ(எம்) தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்