முந்தய பக்கம்

காஸ்ட்ரோ நூற்றாண்டு சர்வதேச கருத்தரங்கம்

11 Aug 2026, 9:17 pm
காஸ்ட்ரோ நூற்றாண்டு சர்வதேச கருத்தரங்கம்

காஸ்ட்ரோ நூற்றாண்டு சர்வதேச கருத்தரங்கம்

புதுதில்லி, ஆக. 11 -பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச கருத்தரங்கம் கியூபாவின் ஹவானாவில் தொடங்கியது.

கியூப குடியரசுத் தலைவரும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான மிகுயெல் தியாஸ்-கானல் பெர்முடெஸ் கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று, பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகரப் பங்களிப்புகள் மற்றும் கியூப மக்களின் போராட்டத்திற்கு தங்களது ஒற்றுமையையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

இந்த சர்வதேச கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழி

லாளர் சங்க பொதுச்சொயலாளர் பி. வெங்கட், கேரள முன்னாள் அமைச்சர் ஸ்ரீமதி டீச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் கியூப ஜனாதிபதி மிகுயெல் தியாஸ்-கானல் பெர்முடெஸைச் சந்தித்து இந்திய மக்களின் ஆதரவையும் பேரன்பையும் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram