தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திரிபுராவில் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா கியூபா தூதர் ஜூவன், ஜிதேந்திர சவுத்ரி பங்கேற்பு

yesterday
திரிபுராவில் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா கியூபா தூதர் ஜூவன், ஜிதேந்திர சவுத்ரி பங்கேற்பு

திரிபுராவில் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா கியூபா தூதர் ஜூவன், ஜிதேந்திர சவுத்ரி பங்கேற்பு

அகர்தலாகியூபா புரட்சியின் தலைமைத் தளபதிபிடல் காஸ்ட்ரோ ரூஸின் நூற்றாண்டு விழாவைக் (பிறந்த நாள்) கொண்டாடும் வகையில், திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள ரவீந்திர சதாவார்ஷிகி பவனில் சிறப்பு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர்பங்கேற்ற இந்தக் கூட்டத்தை திரிபுரா கியூபா ஒற்றுமைக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவிற்கான கியூபாவின் தூதர் ஜூவன் கார்லோஸ் மார்சான் அகிலெரா கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில்,”ஜோஸ் மார்ட்டியின் (ஸ்பெயினின் காலனி ஆதிக்கத்திலிருந்து கியூபாவை மீட்டெடுக்கப் போராடியமுக்கிய தலைவர்களில் ஒருவர்) பாரம்பரிய போராட்டத்தை பாதுகாக்க 1953ஆம் ஆண்டில்பிடல் காஸ்ட்ரோ தலைமையில் இளம் புரட்சியாளர்கள் மன்கடா முகாமை (கியூபாவின் சாண்டியாகோ டி நகரில் இருந்த இராணுவ முகாம்) எவ்வாறுதாக்கினார்களோ, அதேபோல் அமெரிக்கா திணித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடையை எதிர்கொள்ளும் கியூபாவின் தற்போதைய இளைய தலைமுறையினர்களும் பிடலின்பாரம்பரியத்தைக் காப்பாற்ற உறுதியுடன் உள்ளனர். கியூப மக்கள் தங்கள் சுதந்திரத்தையும் சோசலிசத்தையும் பாதுகாக்க எந்த நிலைக்கும் செல்வார்கள். எங்களைப் பொறுத்தவரை, சுதந்திரமும்சோசலிசமும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையுள்ள சொற்கள் ஆகும்” என அவர் கூறினார்.

இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், திரிபுரா சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி, சிபிஎம் மூத்த தலைவரும், திரிபுராவின் முன்னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்கார் மற்றும் கியூபத் தூதரகத்தின் முதன்மை செயலாளர் பேராசிரியர் மைக்கி டியாஸ் பெரெஸ் ஆகியோர் பார்வையாளர்கள் மத்தியில்உரையாற்றினர்.

பேராசிரியர் மிகிர் தேப் தலைமை தாங்கிய இக்கூட்டம், இந்தியாவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான மக்கள் ஒற்றுமையையும், ஏகபோக சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தில் பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகரபாரம்பரியத்தின் தொடர்ச்சியான பொருத்தமாக உள்ளன என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.