தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கற்பிதங்களும், கதையாடல்களும், எதார்த்த நிலையும்!

8 Apr 2026, 5:30 am
கற்பிதங்களும், கதையாடல்களும், எதார்த்த நிலையும்!

கற்பிதங்களும், கதையாடல்களும், எதார்த்த நிலையும்!

2026 புரத்திலிருந்த வெளிவந்த 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் கேரளச் செய்தியாளரின் அறிக்கை ஒரு முக்கியமான அவதானிப்பை முன்வைக்கிறது. 'பல்வேறு ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்கள் ஆதிக்கம் செலுத்திய முந்தைய சட்டமன்றத் தேர்தல்களைப் போலன்றி, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள இடது ஜனநாயக முன்னணி (LDF 2.0) அத்தகைய பெரிய சர்ச்சைகள் ஏதுமின்றி, தனது பத்தாண்டு கால 'வளர்ச்சிப் பதிவு' களை (Development Record) முன்னிறுத்தித் தேர்தலுக்கான களத்தை அமைத்துள்ளது.

இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை ஒரு விசித்திரமான இக்கட்டில் தள்ளியுள்ளது. ஆளும் கூட்டணியின் குறைகளைக் சுட்டிக்காட்டுவதில் கவனம் செலுத்த வேண்டிய இத்தருணத்தில், அதிகாரத்தை இழந்து பத்து ஆண்டுகள் கழிந்துள்ளதைக்கூட தனது முந்தைய அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்திப் பேச வேண்டிய கட்டாயத்திற்கு கேரளத்தில் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.' இடதுசாரிகள் கணிசமான செல்வாக்குடன் விளங்கும் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, அங்கு நிலவும் அடிப்படை அரசியல் கண்ணோட்டங்களின் மோதலை இந்த அறிக்கை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்தியாவில் நிலவும் ஜனநாயகச் சூழலில், பிரதான கார்ப்பரேட் ஊடகங்களின் செயல்பாடுகளில் ஒரு மிகப்பெரிய அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மோடி அரசு பொறுப்பேற்ற கடந்த 10 ஆண்டுகளில் இம்மாற்றம் மிகத் தீவிரமாக வெளிப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே நிலவும் கட்டமைப்பு ரீதியான கள்ளக் கூட்டணியை (Systemic Nexus) இம்மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இது வெறும் நட்பு அல்ல; மாறாக ஜனநாயகத்தை விலைக்கு வாங்கும் ஒரு பேராபத்து.

இன்று நடுநிலையான செய்தியிடல் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, குறிப்பிட்ட கற்பிதங்களை (Perceptions) உருவாக்கி அவற்றை ஒரு கதையாடலுக்குள் (Narrative) ஒருங்கிணைக்கும் முயற்சிகளே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இது இரு வழிகளில் ஆளும் வர்க்கத்திற்கு உதவுகிறது. மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் உண்மையான பிரச்சனைகள் மற்றும் வாழ்வாதாரக் கேள்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புதல். ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்விகளைப் பற்றிப் பொறுப்புக்கூற விடாமல் தடுத்தல்.

கேரளமாக இருந்தாலும் சரி, பிற மாநிலங்களாக இருந்தாலும் சரி, தேர்தல் களம் என்பது வெறும் அதிகாரப் போட்டி அல்ல; அது நமது குடியரசு அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான போர். கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக உழைக்கும் மக்களை வெளியேற்றுவதையும், மதப் பிளவுகளை உருவாக்கி வாக்குவெறுப்பு மூட்டவும் வேண்டிய தருணம் இது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையும் முழுமையான வளர்ச்சியும் வெறும் தேர்தல் முழக்கங்கள் அல்ல.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.