கூட்டணியில் குறைவான தொகுதிகள்!
21 Mar 2026, 2:42 pm
<p><strong>கூட்டணியில் குறைவான தொகுதிகள்!</strong></p>
<p>திருமாவளவன் வருத்தம் சென்னை, மார்ச் 21 - 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகக் குறைவான தொகுதி களில் போட்டியிடும் நிலை உள்ளதாக கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியான திமுக 25 கட்சிகளு டன் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், திமுக தன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை ஒவ்வொன்றாக முடித்து வரு கிறது. விசிக உடனான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதிவடிவம் பெறாத சூழலில், திருமாவளவன் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “மிகக் குறைவான எண்ணிக்கை யிலான தொகுதிகளையே பெற்று கூட்டணி யில் போட்டியிடுகிறோம். இருந்தாலும் 234 தொகுதிகளிலிருந்தும் விருப்ப மனுக்களை பெறுகிறோம். இது 23 கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி என்பதால் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் நிலையே உள்ளது. விருப்ப மனு பெறுவது கட்சியின் ஜனநாயக நடைமுறை. மனு பெற்ற பின் நேர்காணல் நடத்தாமல், கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பேன்” என்று திருமா வளவன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மார்ச் 21 முதல் 24 வரை சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.</p>
