தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உர மானியம் நிறுவனங்களுக்கா? விவசாயிகளுக்கா?

16 Dec 2025, 3:51 pm
உர மானியம் நிறுவனங்களுக்கா? விவசாயிகளுக்கா?
<p><strong>உர மானியம் நிறுவனங்களுக்கா? விவசாயிகளுக்கா?</strong></p> <p>ஒன்றிய நிதியமைச்சர் &nbsp;நிர்மலா சீதாராமன் 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கான முதல் தொகுதி கூடுதல் துணை மானியக் கோரிக்கைகளை (Supplemen tary Demand for Grants) மக்களவையில் தாக்கல் செய்ததன் மீதான விவாதம் நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்ற திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார். குறிப்பாக, உர மானியம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு விவ காரங்களில் அரசின் அணுகுமுறைக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். உர மானியம்: கள்ளச் சந்தைக்கு உதவுவதா? மானியக் கோரிக்கைகளில் உர மானியத்திற் காகக் கோரப்பட்டுள்ள ₹18,528 கோடி நிதியைக் குறித்து கேள்வி எழுப்பிய சச்சிதானந்தம், இந்த மானியம் விவசாயிகளுக்குப் பயன் அளிப்ப தற்குப் பதிலாக கள்ளச் சந்தைப்படுத்துபவர் களுக்கு மட்டுமே உதவுவதாக குற்றம்சாட்டினார். &ldquo;மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்ட பிறகும், நாட்டில் உரத் தட்டுப்பாடு நீடிக்கிறது என்பதற்குச் சமீபத்திய சம்பவம் சான்றா கும். மத்தியப் பிரதேசத்தின் டிக்கம்கர் மாவட்டத் தில், 52 வயதுடைய விவசாயி ஜமுனா குஷ்வாஹா, &nbsp;இரண்டு மூட்டை யூரியா வாங்குவதற்காக மூன்று நாட்களாகக் காத்திருந்த நிலையில், டிசம்பர் 8 அன்று வரிசையில் உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது. விவசாயிகள் உரத்திற்காகப் போராடி, உயிரிழக்கும் நிலையில், மானியம் யாருக்குப் போகிறது?&rdquo; என்று சச்சிதானந்தம் கேள்வி எழுப்பினார். மானியத் தொகையை உர நிறுவனங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தினால் (DBT) மட்டுமே இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்றும், அரசு தனது மானியக் கொள்கையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், உள்நாட்டு உற்பத்திக் குறைவால் மத்திய &nbsp;பொதுத்துறை நிறுவனமான எஃப்.ஏ.சி (FAC) கூட &nbsp;தனியார் உரங்களை தனது பைகளில் விற்று வரும் அவலத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். எல்.பி.ஜி. மானியம்: ஏழைகளை விறகு அடுப்புக்குத் தள்ளும் நிலை சமையல் எரிவாயு மானியத்திற்காகக் கோரப்பட்டுள்ள ₹9,500 கோடி நிதி குறித்துப் பேசிய சச்சிதானந்தம், தற்போது பிரதமர் உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டப் பயனாளி களுக்கு மட்டுமே மானியம் (ஒரு சிலிண்டருக்கு ₹300) வழங்கப்படுவதை விமர்சித்தார். &ldquo;ஜூலை 2025 நிலவரப்படி 10.33 கோடி உஜ்வாலா இணைப்புகள் மட்டுமே உள்ளன. ஏழ்மையில் இருக்கும் பிற குடும்பங்களுக்கு மானியம் மறுக்கப்படுவது ஏன்?&rdquo; என்று வின வினார். அத்துடன், மானிய விலையில் வழங்கப் படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை &nbsp;போதுமான தாக இல்லை என்றும், அடுத்தடுத்து சிலிண்டர் களை நிரப்ப அதிகப் பணம் செலவாகும் என்ப தால், ஏழை மக்கள் அடுத்தடுத்துவிறகு போன்ற &nbsp;ஆரோக்கியமற்ற சமையல் எரிபொருட்களைப் பயன்படுத்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்படு கிறார்கள் என்றும் கவலை தெரிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்பு: &nbsp;உளவுத்துறை தோல்வியா? ஜம்மு-காஷ்மீரில் ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா சம்பந்தப்பட்டிருந்ததையும், மே மாதம் &nbsp;நடந்த &lsquo;சிந்தூர் நடவடிக்கை&rsquo; மூலம் பயங்கர வாத முகாம்கள் அழிக்கப்பட்டதையும் ஏற்றுக் கொண்ட சச்சிதானந்தம், இத்தனைக்குப் பிறகும் &nbsp;தலைநகர் தில்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார். &ldquo;இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவு அமைப்புகளின் தோல்வி யா? அல்லது இதற்கும் அமெரிக்க ஜனாதிபதி யைக் கொண்டு விசாரிக்கக் கேட்க வேண்டுமா? அரசு கோவில்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், குடிமக்களின் உள்நாட்டுப் பாது காப்பிலும், நாட்டின் தலைநகரின் பாதுகாப்பி லும் முழு கவனம் செலுத்த வேண்டும்,&rdquo; என்று அவர் சாடினார். பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள்: உள்நாட்டில் என்ன நடந்தது? பிரதமர் ஏப்ரல் 2 முதல் நவம்பர் 23 வரை 18 நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், தற்போது மேலும் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் துவக்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், உள்நாட்டில் பிரதமரின் பங்களிப்பு குறித்து வினா எழுப்பினார். &ldquo;உள்நாட்டில் ராமர் கோவிலில் கொடியேற்று வது மற்றும் ரயில்களுக்குக் கொடியசைப்பது தவிர வேறு என்ன நடந்தது?&rdquo; என்று கேட்டு, உள்நாட்டு விவகாரங்களில் பிரதமர் கவனம் செலுத்தாததைக் கடுமையாக விமர்சித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள் &nbsp;தமது உரையின் போது, கட்சியின் சார்பாக, உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய பல் வேறு கோரிக்கைகளை அவர் பட்டியலிட்டார்: &bull;&nbsp;&nbsp; &nbsp;விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். &bull;&nbsp;&nbsp; &nbsp;அனைவருக்கும் சுகாதாரத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். &bull;&nbsp;&nbsp; &nbsp;சிறுபான்மையினருக்கான பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் (PMJVK) திட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். &bull;&nbsp;&nbsp; &nbsp;தமிழ்நாட்டில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரிகளில் நான்கு முதுகலை ஆயுர்வேதப் படிப்புகளைத் தொடங்க வேண்டும். &bull;&nbsp;&nbsp; &nbsp;பிரசாதம் திட்டத்தின் கீழ் பழனி - கொடைக்கானல் இடையேயான ரோப் கார் திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். &bull;&nbsp;&nbsp; &nbsp;மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை ₹300 லிருந்து ₹3,000 ஆக அதிகரிக்க வேண்டும். &bull;&nbsp;&nbsp; &nbsp;தமிழ்நாட்டில் 22% ஈரப்பதம் கொண்ட நெல்லைக் கொள்முதல் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். &bull;&nbsp;&nbsp; &nbsp;கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங் களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். &bull;&nbsp;&nbsp; &nbsp;ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை மாற்றும் நடவடிக்கையை சிபிஐ(எம்) கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.