உர விலை உயர்வு: விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம்
2 Jun 2026, 10:19 pm
<p><strong>உர விலை உயர்வு: விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம்</strong></p><p>சேலம், ஜூன் 2- உர விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாய விளை பொருட்க ளுக்கு சி2 + 50 சதவீத அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். டிஏபி உள்ளிட்ட உர விலையை உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். தட்டுப்பாடின்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் செவ்வா யன்று சேலம் மாவட்டம், மல்லூர் பேருந்து நிலையத்தில் எம்எஸ்பி ஆணையின் நகல் எரிப்பு போராட் டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எ.அன்பழகன் தலைமை யில் நடைபெற்ற இப்போராட்டத் தில், சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் ஜி.கணபதி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.கே.செல் வராஜ், ஏஐகேஎம் மாவட்டச் செயலா ளர் ஏ.அய்யந்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், கூடலூர் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயி கள் சங்க ஏரியா செயலாளர் என்.கோபிநாதன் தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலைவர் என்.வாலு, ஏரியா தலைவர் ஜோஷ், மாவட்ட நிர்வாகி குஞ்சு முகமது, சிஐடியு நிர்வாகி யோக சசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
