உரம் விலை கடும் உயர்வு விவசாயிகள் மீது ஒன்றிய பாஜக அரசு தாக்குதல் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கண்டனம்
16 May 2026, 10:43 pm

உரம் விலை கடும் உயர்வு விவசாயிகள் மீது ஒன்றிய பாஜக அரசு தாக்குதல் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கண்டனம்

திண்டுக்கல், மே 16 - உரம் விலை கடுமையாக உயர்ந்திருப்பது விவசாயிகள் மீதான கடுமையான தாக்குதலாகும் என்றும், ஒன்றிய பாஜக அரசு உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மிகுந்துள்ளது. சமீபத்தில் கூட ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல், டீசல், வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியிருந்தது. இந்நிலையில் உரங்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதமே யூரியா, டி.ஏ.பி. விலை உயர்ந்தது. போர் துவங்குவதற்கு முன்பு ஒரு டன் டி.ஏ.பி. விலை 720 ஆக இருந்தது. தற்போது 925 டாலராக உயர்ந்துள்ளது. உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சல்பர், அமோனியா போன்ற மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. 300 டாலராக இருந்த ஒரு டன் சல்பர் தற்போது 900 டாலருக்கு குறைவாக கிடைப்பதில்லை என்ற நிலை நீடிக்கிறது.

ஆண்டுதோறும் 40 மில்லியன் டன் வரை இந்தியா யூரியாவை பயன்படுத்துகிறது. உள்நாட்டில் 30 மில்லியன் டன் வரை யூரியா உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மீதமுள்ள தேவைக்கு 40 விழுக்காடு வரை ஓமன், கத்தார், சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த போர் காரணமாக தற்போது உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், தற்போது மே மாதம்வரை ஒன்றிய மோடி அரசு உர உற்பத்தியை பெருக்குவதற்கோ, உரத்தின் விலை உயராமல் தடுப்பதற்கோ எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதன் காரணமாக தற்போது உரத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கொடுக்கும் சட்டத்தை இயற்ற பிரதமர் மோடி மறுத்தார். ஆனால் உரத்தின் விலையை மட்டும் உயர்த்தி அறிவித்துள்ளார்.

காம்ப்ளக்ஸ் பொட்டாஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் சில்லறை விற்பனை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரூ.600-க்கு விற்ற சூப்பர் பாஸ்பேட் தற்போது ரூ.200 உயர்ந்து ரூ.800-க்கு விற்கப்படுகிறது. ரூ.1850-க்கு விற்ற பொட்டாஷ் ரூ.1975-க்கும், காம்ப்ளக்ஸ் 3 ரகங்கள் ரூ.1900-லிருந்து ரூ.2200 வரை விற்கப்படுகிறது.

ரூ.1,525-க்கு விற்ற பாக்டம்பாஸ் தற்போது ரூ.1750-க்கு விற்கப்படுகிறது. இந்த பாக்டம்பாஸ் கொச்சினில் ஒன்றிய அரசால் நிறுவகிக்கப்படும் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்தும் போது, சந்தடி சாக்கில் ஒன்றிய அரசும் விலையை உயர்த்தலாமா? ஒன்றிய அரசு உரத்தின் விலையை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறேன்.