முந்தய பக்கம்

பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை  

14 Dec 2025, 3:45 pm
பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை  
<p><strong>பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை </strong>&nbsp;</p> <p>அம்பத்தூர், டிச. 14- குடும்பப் பிரச்சினையால் பெண் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு பிரி வில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் அந்தோணி &nbsp;மாதா (30). விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2015ஆம்ஆண்டு யோவான் என்பவரை &nbsp;திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹரிஷ் ஜோஸ்வா (10), ஆடன் ஜெபிக் (8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் அந்தோணி மாதா கடந்த &nbsp;3 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரண மாக கணவர் யோவானை பிரிந்து இரண்டு மகன்களுடன் அம்பத்தூர் சோழபுரத்தில் வாடகை வீட்டில் &nbsp;வசித்து வந்தார். இவர் பல்வேறு காரணங்களால் மன அழுத்த த்தில் இருந்து வந்துள்ளார். &nbsp;இந்நிலையில் சனிக்கிழமை இரவு பணி முடிந்து அந்தோணி மாதா வீட்டுக்கு வந்துள்ளார். இதன் பிறகு அவர் நள்ளிரவில் படுக்கையறையில் மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் காவல் துறையினர் &nbsp;அந்தோணி மாதா சடலத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram