பெண் நீதிபதிக்கு சங் பரிவாரத்தின் கொலை மிரட்டல்!
1 Jul 2026, 9:39 pm
<p><strong>பெண் நீதிபதிக்கு சங் பரிவாரத்தின் கொலை மிரட்டல்!</strong> </p><p>மத்தியப் பிரதேசத்தில் பசுவைக் கடத்தியதாகக் கூறி 2022-இல் ஷேக் நசீர் அகமத் என்ற ஓட்டுநரை 7 பேர் கொண்ட பசு குண்டர்கள் கும்பல் அடித்துக் கொலை செய்தது. இந்த வழக்கை விசாரித்த நர்மதாபுரம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தபசும் கான், சான்றுகளின் அடிப்படை யில் குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். </p><p>நீதிபதி ஒரு இஸ்லாமியப் பெண் என்பதால், சங் பரிவார அமைப்புகள் சமூக ஊடகங்களில் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றன. தீர்ப்பு வெளியான அன்றே நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிகளின் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் செய்து, சிறை வாகனத்தை மறித்தனர். குஜராத்திலிருந்து இயங்கும் சமூக ஊடகங்களில் நீதிபதியின் மதத்தையும் குடும்பத்தையும் இழிவுபடுத்தி, 10 நாட்களுக்குள் குற்றவாளிகளை விடுதலை செய்யாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என மிரட்டுகின்றனர். பஞ்சாபில் நீதிபதியின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் இந்தக் கொலைவெறி அராஜகம், பா.ஜ.க. ஆட்சியில் சங் பரிவாரமும் காவல்துறையும் இணைந்து செயல்படுவதையே நிரூபிக்கிறது.</p>
