முந்தய பக்கம்

பெண் யானை சடலமாக மீட்பு

3 Feb 2026, 4:00 pm
பெண் யானை சடலமாக மீட்பு
<p><strong>பெண் யானை சடலமாக மீட்பு</strong></p> <p>கோவை, பிப்.3- எட்டிமடை அருகே இறந்த பெண் யானை சடலமாக கண்ட றியப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர்கள் குழுவினர் &nbsp;உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். &nbsp;கோவை, மதுக்கரை வனச்சரகம் எட்டிமடை பின்புறம் உள்ள வனப்பகுதியில் செவ்வாயன்று வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது திமில்மலை அருகே பெண் &nbsp;யானை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டறி யப்பட்டது. உடனடியாக வன ஊழியர்கள் வனத்துறை உயர் &nbsp;அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ &nbsp;இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மதுக் கரை வனச்சரகர் அருண் உள்ளிட்டோர் ஆய்வு செய்தபோது &nbsp;யானையின் உடலில் வெளி காயங்கள் ஏதும் இல்லை என்பது &nbsp;கண்டறியப்பட்டது. பின்னர் கால்நடை மருத்துவக் குழுவினர், கிராம நிர்வாக &nbsp;அலுவலர் மற்றும் தன்னார்வலர்கள் முன் இறந்த யானைக்கு &nbsp;உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது யானை யின் உடல் உறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை ஆய்வுக் காக அனுப்பி வைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram