முந்தய பக்கம்

முதுமலையில் பெண் யாணை உயிரிழப்பு

26 Nov 2025, 4:29 pm
முதுமலையில் பெண் யாணை உயிரிழப்பு
<p><strong>முதுமலையில் பெண் யாணை உயிரிழப்பு</strong></p> <p>உதகை, நவ.26- முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட வனப்பகுதியில் பெண் யானை உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், உதகை கோட்டத்திற்குட்பட்ட கார்குடி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதி யில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட் டிருந்தனர். அப்போது கிராஸ்கட் கண்காணிப்பு கோபுரம் &nbsp;அருகே பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது தெரியவந் தது. இதுதொடர்பாக உடனடியாக உயரதிகாரிகளுக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செவ்வாயன்று தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் வர வழைக்கப்பட்டு, துணை இயக்குநர் கணேசன், தன்னார்வ லர்கள், வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு உறுப்பி னர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட் டது. முதற்கட்ட ஆய்வில், யானையின் உள் உறுப்புகளில் ஏற் பட்ட பாதிப்பினால் உயிரிழந்தது தெரியவந்தது. இருப்பி னும் ஆய்விற்காக உடல் பாகங்களின் மாதிரிகள் சேகரிக்கப் பட்டன. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இறப்பிற்காக காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram