முந்தய பக்கம்

உடல்நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு

1 Mar 2026, 5:56 pm
உடல்நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு
<p><strong>உடல்நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு</strong></p> <p>ஈரோடு, மார்ச் 1- தாளவாடியை அடுத்த முதியனூரில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பெண் யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம், &nbsp;தாளவாடி மலைப்பகுதி யில் உள்ள முதியனூர் கிராமத்தில் விவசாய நிலத்துக்குள் யானை ஒன்று, கடந்த பிப்.20 ஆம் தேதியன்று நுழைந்தது. 40 வயதுள்ள அந்த பெண் யானை, கடும் வெயில் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்கேயே சுருண்டு மயங்கி விழுந்தது. உயிருக்கு போராடிய யானைக்கு, தாளவாடி வனச் சரக அலுவலர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் யானைக்கு இளநீர், கரும்பு, தர்ப்பூசணி போன்ற நீர்சத்துள்ள உணவு அளித்து, சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து ஒருவாரமாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் கர்க் நேரில் கேட்டறிந்தார். தொடர்ந்து, தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உதயன், தாளவாடி மலைப்பகுதிக்கு வெள்ளியன்று வந்து உடல்நலம் குன்றிய யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, தொடர்ந்து கதிர்வீச்சு சிகிச்சை, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை அளித்து யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சனியன்று யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram