முந்தய பக்கம்

ஆனைமலையில் பெண் யானை உயிரிழப்பு

17 Jul 2026, 11:24 pm
ஆனைமலையில் பெண் யானை உயிரிழப்பு
<p><strong>ஆனைமலையில் பெண் யானை உயிரிழப்பு</strong></p><p>பொள்ளாச்சி, ஜூலை 17- ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட் பட்ட மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் சுமார் 8 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளது. பொள்ளாச்சி வனக்கோட்டம், மானாம் பள்ளி வனச்சரகத்தில், வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதை அவர்கள் கண்ட னர். இதனைத் தொடர்ந்து, வியாழனன்று ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் ஆகியோர் முன்னிலையிலும், ‘இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை’ தன் னார்வலர் கணேசன் முன்னிலையிலும் இறந்த யானையின் உடல் ஆய்வு செய்யப் பட்டது. இதில், உயிரிழந்த யானையின் உடற்கூறு ஆய்வின் முதற்கட்ட முடிவில், அந்த பெண் யானை கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக உடல் நலம் குன்றி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கூடுதல் உறுதிப்படுத்துதலுக்காக யானையின் உடல் பாகங்கள் சில சேகரிக் கப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram