வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
25 Feb 2026, 3:22 pm
<p><strong>வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்</strong></p>
<p>கோவை, பிப்.25- பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்பு தல் உள்ளிட்ட 9 நியாயமான கோரிக் கைகளை முன்வைத்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் மாநிலம் தழுவிய தொடர் காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது. வருவாய், பேரிடர் மேலாண்மை மற் றும் நில அளவைத் துறையில் பணிபுரி யும் அலுவலர்களின் உயிர் மற்றும் உட மைகளை பாதுகாக்கச் சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து நிலை அலுவ லர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதி யம் மற்றும் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங் களின் கூட்டமைப்புசார்பில் புதனன்று மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக, கோவை ஆட் சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், கிராம நிர்வாக அலுவ லர் சங்க மாநிலத் தலைவர் சசிகுமார், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை பொதுச் செயலா ளர் ப.செந்தில் குமார் மற்றும் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகளை விளக்கி உரையாற் றினர். சேலம் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வட் டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில், வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் வெ.அர்த்தனாரி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் வருவாய் துறை ஊழியர்கள் கூட்ட மைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு, வருவாய்த்துறை சங்கங்க ளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பா ளர் சி.துரைவேல் தலைமை வகித்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர் முன் னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் அகி லன் அமிர்தராஜ், நில அளவை அலுவ லர்கள் ஒன்றிப்பின் மாவட்டச் செயலா ளர் சி.பிரபு கூட்டமைப்பின் பொருளா ளர் இல்.பகவதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
