பிப்.21 - தமிழகம் முழுவதும் சிவப்புப் புத்தகம் வாசிப்பு இயக்கம்
22 Feb 2026, 3:26 pm
<p><strong>பிப்.21 - தமிழகம் முழுவதும் சிவப்புப் புத்தகம் வாசிப்பு இயக்கம்</strong></p>
<p>தருமபுரி, பிப்.21- வரலாற்றின் காலந்தொட்டு நிலவி வரும் சுரண்டல் சமுதாய அமைப்பை விளக்குவதாகவும், அதனை மாற்று வதற்கான புரட்சிகர அரசியல் தத்துவ வழி காட்டியாகவும் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ (The Communist Manifesto) விளங்கி வருகிறது. மாமேதைகள் காரல் மார்க்ஸூம் - ஏங்கெல்ஸூம் எழுதிய, இந்த கம்யூ னிஸ்ட் அறிக்கை, 1848-ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்டது. அது உலகம் முழுவதும், ‘சிவப்பு புத்தக வாசிப்பு தினமாக’ கொண்டாடப்படு கிறது. தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஒவ்வோ ராண்டும் சிவப்புப் புத்தக வாசிப்பு இயக்கம் கிளைகள் தோறும் நடத்தப் பட்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமையன்றும் (பிப்.21) நூற்றுக்கணக்கான இடங்க ளில் சிவப்புப் புத்தக வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், தருமபுரி சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற ‘சிவப்பு புத்தகம்’ வாசிப்புப் பேர வையில், கட்சியின் மத்திய கட்டுப் பாட்டுக்குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.</p>
