பிப்.8 முதலமைச்சருக்கு பாராட்டு விழா ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
27 Jan 2026, 3:28 pm

பிப்.8 முதலமைச்சருக்கு பாராட்டு விழா ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை, ஜன. 27 - முதலமைச்சருக்கு பிப்.8ந் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி 25 ஆண்டு களுக்கும் மேலாக போராடி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திங்க ளன்று (ஜன.27) சென்னையில் நடை பெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெ.சோமசுந்தரம், இரா.தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு துறைவாரிக் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டு விழா மற்றும் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த உள்ளோம் என்றனர். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பாராட்டும் அதேநேரத்தில், ஓய்வூதிய திட்டத்தில் 10சதவீதம் ஊழியர் பங்களிப்பு என்பதை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை சாசனத்தையும் வழங்க உள்ளோம். இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரி வித்தனர். ஓய்வூதியத்தை பறித்தவர்கள், ஓய்வூ தியம் கோரி ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தியபோது வேடிக்கை பார்த்தவர்கள், இந்தப்போராட்டத்திற்கு தொடர்பே இல்லாதவர்கள், தமிழக அரசு அறிவித் துள்ள ஓய்வூதிய திட்டத்தை விமர் சிக்கின்றனர் என்றும் அவர்கள் தெரி வித்தனர்.