பிப்.12 வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சார இயக்கம்
7 Feb 2026, 2:02 pm
<p><strong>பிப்.12 வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சார இயக்கம்</strong></p>
<p>இராஜபாளையம், பிப்.7- ஒன்றிய மோடி அரசு 29 தொழிலாளர் நலச் சட்டங் களை திருத்தி நான்கு தொகுப்பு சட்டங்களாக மாற் றியதை கைவிட வலியுறுத்தி யும், மூடப்பட்ட ஆலைகளை உடனடியாக திறக்கக் கோரி யும், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்ப வலியுறுத்தி யும், பிப்.12-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெற உள்ள வேலைநிறுத்தம் மற் றும் மறியல் போராட்டம் குறித்து விளக்கி இராஜ பாளையம் நகரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இராஜபாளையம் கட லூர் மைதானத்தில் நடை பெற்ற இந்த பிரச்சார இயக்கத்தில் எல்பிஎப்ஐ, என்டிஎஸ்சிஐ, சிஐடியு, ஏஐ டியுசி, எச்.எம்.எஸ்., எம்எல்எப், யூடிசி மற்றும் விவசாயிகள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. எச்.எம்.எஸ். தலைவர் களில் ஒருவரான மகா லிங்கம் தலைமை தாங்கி னார். எல்.எல்.எப். தலைவர் சரவணன், ஏஐடியுசி மாவ ட்ட பொதுச் செயலாளர் பி.கே. விஜயன், மாவட்ட தலைவர் வி.ரவி, ஐ.என்.டி. யு.சி. மாநில பொருளாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் கணபதியப் பன், எச்.எம்.எஸ். மாநில பொதுச் செயலாளர் கண் ணன், யூடிசி நிர்வாகி பால சுப்ரமணியம், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முனி யாண்டி, சிஐடியு நகர கன் வீனர் கண்ணன் உள்ளிட் டோர் பேசினர். நிறைவாக சிஐடியு மாவட்ட உதவி தலைவர் ஜி. கணேசன் உரையாற்றினார்.</p>
