தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிப். 12 அகில இந்திய வேலைநிறுத்தம்

28 Jan 2026, 2:33 pm
 பிப். 12 அகில இந்திய வேலைநிறுத்தம்
<p><strong>&nbsp;பிப். 12 அகில இந்திய வேலைநிறுத்தம்&nbsp;</strong></p> <p>தருமபுரி, ஜன. 28- ஒன்றிய அரசின் தொழிலாளர் &nbsp;மற்றும் மக்கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து பிப்ரவரி 12-ஆம் &nbsp;தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி, அனைத்து தொழிற்சங்கக் &nbsp;கூட்டமைப்பின் சார்பில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயத்த மாநாடுகளும், பிரச்சார இயக்கங்களும் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. அணுமின் உற்பத்தியில் தனி யார் நிறுவனங்களை அனுமதிக் கும் &lsquo;ஷாந்தி - 2025&rsquo; மசோதா, மின் விநியோகத்தை முற்றிலுமாக தனியார் வசமாக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா - 2025, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதா ஆகியவற்றைக் கொண்டு &nbsp;வரும் ஒன்றிய பாஜக அரசைக் &nbsp;கண்டித்தும், அந்த மசோதாக் களை உடனடியாகதிரும்பப் பெற &nbsp;வலியுறுத்தியும் இந்த வேலைநிறுத் தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இந்த &nbsp;வேலைநிறுத்தத்தை வெற்றிகர மாக்க தருமபுரி, அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக் கோடு ஆகிய இடங்களில் தீவிரப் பிரச்சாரம் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி: சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் சி.நாக ராஜன், ஏஐசிசிடியு மாநிலத் தலை வர் சி.முருகன், அங்கன்வாடி ஊழி யர் சங்க மாநிலச் செயலாளர் எம். லில்லி புஷ்பம் ஆகியோர் பங் கேற்று உரையாற்றினர். அரூர்: சிஐடியு போக்குவரத்து &nbsp;கழக ஊழியர் சங்க மண்டலச் செய லாளர் சி.ரகுபதி, மாவட்ட நிர்வாகி கள் சி.முரளி, ஜெயராமன், எல் பிஎப் தலைவர்கள் சண்முகராஜா, ஜே.பழனி, எச்எம்எஸ் தலைவர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பென்னாகரம்: சிஐடியு மாவட் டப் பொருளாளர் எஸ்.சண்முகம், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி ஏ.சி. மணி, ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகி &nbsp;சிவராமன், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் அர்ஜூனன் ஆகியோர் உரையாற்றினர். பாலக்கோடு: சிஐடியு மாவட்டத் &nbsp;தலைவர் சி.கலாவதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செய லாளர் எம்.முத்து, சிஐடியு நிர்வாகி கள் ஆறுமுகம், வரதராஜன், மனோன்மணி, அங்கன்வாடி ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் சி. கவிதா ஆகியோர் பங்கேற்றனர். சேலம் சேலம் புதிய பேருந்து நிலை யம் அருகிலுள்ள வி.பி.சிந்தன் நினைவகத்தில், ஹெச்எம்எஸ் நிர்வாகி கணேசன் தலைமையில் ஆயத்த கூட்டம் செவ்வாயன்று &nbsp;நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐ டியு சாலைப் போக்குவரத்து சங்க &nbsp;மாநில துணைத் தலைவர் எஸ். கே.தியாகராஜன், சிஐடியு மாவட் டச் செயலாளர் ஏ.கோவிந்தன் உள் ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பிப். 12-ஆம் தேதி சேலம் மாவட் டத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மறியல் நடத்து வது என்றும், அதற்கு முன்னோடி யாக பிப்ரவரி முதல் வாரத்தில் 7 &nbsp;நாட்களுக்கு தொடர் வாகனப் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் &nbsp;தீர்மானிக்கப்பட்டது. நாமக்கல் நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதி யில் சிஐடியு மாவட்டத் தலைவர் &nbsp;எம்.அசோகன் தலைமையில் ஆயுத் தக் கூட்டம் நடைபெற்றது. இதில் &nbsp;ஏஐடியுசி செல்வராஜ், ஏஐசிசிடியு வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங் கேற்றனர். பிப்ரவரி 6 முதல் 10-ஆம் &nbsp;தேதி வரை மாவட்டம் முழுவதும் &nbsp;தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வது &nbsp;என்றும், பிப். 12 காலை 10 மணிக்கு &nbsp;பள்ளிபாளையம் யூனியன் வங்கி &nbsp;முன்பு மறியல் போராட்டம் நடத்து வது என்றும் முடிவுசெய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.