கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
22 Jan 2026, 2:57 pm

பனி மூட்டம்

பொள்ளாச்சி, ஜன.22- கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழி யார் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந் துள்ளது. தமிழக சுற்றுலாத் தலங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையை காண தமிழகம் மட்டுமின்றி ஆந் திரா, கேரளம் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற் போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பனிமூட் டம் அதிகளவில் காணப்படு வதால், ஆழியார் அணை யின் மேற் பரப்பில் உள்ள தண்ணீரை தழுவிய படி பனி படர்ந்து செல்வதும், கண் ணாடி போல மலையின் பிம் பத்தை பிரதிபலிக்கும் தண் ணீர் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

இரவில் உலா வரும் யானையால் அச்சம்

தருமபுரி, ஜன.22- ஒகேனக்கலில் இரவு நேரங்களில் சாலையில் உலா வரும் ஒற்றை யானையால் விவசாயிகள், வாகன ஓட்டிகள் அச்ச மடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி, தேன்கனிக் கோட்டை, தளி, ஓசூர் உள்ளிட்ட வனப்பகுதிகளிலிருந்து ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் நூற்றுக்கும் மேற் பட்ட யானைகள், கூட்டம் கூட்டமாக ஒகேனக்கல், பென்னா கரம் வனப்பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்தாண்டு கோடைக்கு முன்பே 50க்கும் மேற்பட்ட யானைகள் ஒகே னக்கல், பென்னாகரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் உணவு, தண்ணீருக்காக தஞ்சமடைந்துள்ளன. இந்நிலையில், ஒகே னக்கல் வனச்சரகத்திற்குட்பட்ட பென்னாகரம் செல்லக் கூடிய முண்டச்சி பள்ளம் சாலையில் இரவு நேரங்களில் ஒற்றை யானை உணவு தேடி சாலையில் உலா வருகிறது. அவ் வழியாக செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, இரவு நேரங் களில் வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு சாலை யில் உலா வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.