தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

2 Jan 2026, 3:33 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஒற்றை யானையால் அச்சம்

தருமபுரி, ஜன.2- ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை, அவ்வழியாகச் செல்லும் சுற்றுலா வாகனங்களை தாக்க முயல்வதால், வாகன ஓட்டி கள் அச்சமடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல், தமிழ் நாட்டின் முதன்மையான புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தற்போது பள்ளிகளுக்கு அரை யாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஒகே னக்கல் அருவிப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகி றது. ஒகேனக்கல் பகுதிக்கு பென்னாகரம் பகுதி யில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் அடர்ந்த வனப் பகுதிக்குள் செல்ல வேண்டியுள்ளது. ஆண்டுதோறும் வறட்சி காலங்களில் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநி லங்களில் இருந்து யானைகள் கூட்டமாக இடம் பெயர்வது வழக்கம். தற்போது யானைகள் கூட்டத்தி லிருந்து வெளியேறிய ஒற்றை யானை, ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது சாலையை கடப்பதுமாக இருந்து வந்தது. இந்நிலையில், வெள்ளியன்று ஒகே னக்கல் வனப்பகுதிக்குட்பட்ட கணவாய் கீழ் பகுதியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட வடிகால் வாரிய நிலையம் பகுதியிலிருந்து பென்னாகரம் - ஒகேனக் கல் நெடுஞ்சாலையை கடந்துள்ளது. அப்போது அந்த  வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஒற்றை யானையை  கண்டதும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தினர். ஒரு சில சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் இருந்த படியே கூச்சல் இடுவது, வாகன ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். அதீத ஒலியை கேட்ட ஒற்றை யானை மிரண்டு வாகனத்தை நோக்கி தாக்குவது போன்று துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகினர். எனவே, வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, வாகன ஓட்டிகளுக்கு அறி வுறுத்த வேண்டும். ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகனங்களுக்கு கூடுதல் வரி வசூல்: மக்கள் குற்றச்சாட்டு

தருமபுரி, ஜன.2- தீர்த்தமலையிலுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவி லுக்கு செல்ல வாகனங்களுக்கு கூடுதல் வரி  வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீர்த்தமலை யில் தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். அப்படி இங்கு பக்தர்கள் இருசக்கர வாகனம், கார், சுற்றுலாப் பேருந்து, பிக்கப் போன்ற வாகனங்களில் வந்து செல்லும் இந்த சூழ்நிலையில், மக்கள் வந்து செல்லக்கூடிய வாகனங்களை நிறுத்துவதற்காக கேட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரி வசூல் செய்ய தீர்த்தமலை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் டெண்டர் எடுக்கப்பட்ட நபர் வரி வசூலித்து வருகி றார். டென்டர் எடுத்த நபர்கள் அரசு நிர்ணயித்த கட்ட ணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்து வரு கின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், கார்களுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட வேண் டிய இடத்தில் 100 ரூபாயும், பிக்கப் வாகனங்களுக்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டிய இடத்தில் 150 ரூபாயும், டூரிஸ்ட் வேன்களுக்கு 200 ரூபாய், சுற்றுலாப் பேருந்துகளுக்கு 300 ரூபாயும் என கூடுதலாக கட்ட ணங்களை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. இதுகுறித்து கட்டணத்தை வசூல் செய்து வரும்  நபர்களிடம் பொதுமக்கள் கேட்டால், அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். எனவே நாங்கள் வசூல் செய்கிறோம் என்கின்றனர். மாவட்ட நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் ஒப்பந்ததாரர் கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கட்ட ணத்தை முறையாக வசூல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மைதானம் கோரி மாணவர் சங்கம் மனு

ஈரோடு, ஜன.2- சத்தியமங்கலம் அரசுக் கல்லூரியில்,  விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டு மென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலு காவில் 2016 ஆம் ஆண்டிலிருந்து அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. விளையாட்டு மைதானம் இல்லாத தால் கடந்த 10 வருட காலமாக பயின்ற மாண வர்கள் விளையாட வாய்ப்பே இல்லாத அவ லம் நீடிக்கிறது. கல்வி நிலைய வளாகத்தில் அடிப்படையானது விளையாட்டும் ஒன்று.  எனவே, இக்கல்லூரியில் மைதானம் அமைத்து, உபகரணங்கள் வழங்க வேண்டும் என வலியு றுத்தி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் த.நவீன், ஈரோடிற்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு கொடுத்தார்.

சாக்கடை குழியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

நாமக்கல், ஜன.2- தெருவில் விளையாடி கொண்டிருந்த 4  வயது குழந்தை, பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாநகராட்சி, 4 ஆவது வார் டுக்குட்பட்ட சின்னமுதலைப்பட்டி, கடகால் வீதியில் பாதாள சாக்கடை பணிக்காக சுமார் 5 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள் ளது. இதில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நின்றது. அதேசமயம், வியாழனன்று புத் தாண்டு என்பதால், தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் – ரதிபிரியா தம்பதியினரின் மகன் ரோகித் (4),  வியாழனன்று மாலை தெருவில் விளையா டிக் கொண்டிருந்த நிலையில், அவரை  காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். இருப்பினும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் பாதாள சாக்கடை குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி தேடியுள்ளனர். அப்போது, இரவு 7  மணியளவில் சிறுவன் ரோகித், நீரில் மூழ்கி  சடலமாக கிடப்பதைக் கண்டு கதறி அழுத னர். இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதனிடையே, நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வெள்ளியன்று சிறுவனின் பெற் றோருக்கு மாநகராட்சி சார்பில் இழப்பீட்டுத் ரூ.20 லட்சத்தை ஆணையர் சிவகுமார் வழங் கினார். பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழி யில் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.

அணை நிலவரம்

(வெள்ளிக்கிழமை) பவானிசாகர் அணை நீர்மட்டம்:97.27அடி நீர்வரத்து:843கனஅடி நீர்திறப்பு:800கனஅடி  சோலையார் அணை நீர்மட்டம்:124/160அடி நீர்வரத்து:165கனஅடி நீர்திறப்பு:170கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:69.35/72அடி நீர்வரத்து:245கனஅடி நீர்திறப்பு:100கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:114/120அடி நீர்வரத்து:143கனஅடி நீர்திறப்பு:418கனஅடி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.