வீட்டு வாசலில் ஓய்வெடுத்த கரடியால் அச்சம்
12 Mar 2026, 4:20 pm
<p><strong>வீட்டு வாசலில் ஓய்வெடுத்த கரடியால் அச்சம்</strong></p>
<p>உதகை, மார்ச் 12- காந்தள் பகுதியில் வீட்டு வாசலில் கரடி ஓய் வெடுத்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட் டுள்ளது. வனப்பகுதி அதிகம் கொண்ட நீலகிரியில், ஊருக்குள் வனவிலங்கு கள் வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக உதகை, குன்னூர், மஞ் சூர் பகுதியில் இரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் கரடிகள், உணவு தேடி வீடுகளுக்குள் வர முயற்சிப்ப தால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும், குப்பைத்தொட்டிக்குள் இருக்கும் உணவுகளை கரடி கள் தேடி சாப்பிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல் லாமல் ஊரை ஒட்டிய பகுதிக்குள் பதுங்கி விடுகின்றன. இந்நிலையில், புதனன்று நள்ளிரவு வனத்திலிருந்து வெளியேறிய கரடி ஒன்று, காந்தள் மேல்போகித் தெரு பகுதியிலுள்ள ஒரு வீட்டின் வாசலில் படுத்து ஓய் வெடுத்து கொண்டிருந்தது. இதனை பார்த்து தெரு நாய்கள் குரைத்தபோது, எதிர் வீட்டில் இருந்தவர் கள் வெளியே வந்து கரடி ஓய்வெடுத்து கொண்டி ருந்ததை பார்த்துள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்தனர். சிறிது நேரத்திற்கு பின் கரடி அங்கிருந்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், உதகையில் கடந்த சில நாட்களாக சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளது. வீட்டுக்கு தற் போது வந்துள்ள கரடி நீண்ட நாட்களாகவே இந்த பகுதி யில் சுற்றித் திரிகிறது. இந்த கரடி மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளதால், இரவு நேரத்தில் பணி முடிந்து வீட்டுக்கு வர மிகவும் அச்சமாக உள்ளது. மாலை 6 மணிக்கு பின்னர் குழந்தைகள் வெளியில் விளையாட செல்ல பயப்படுகின்றனர். எனவே, இந்த கரடி பொதுமக்களை தாக்கும் முன்பாக, கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடியிருப்பு பகு திக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க வனத் துறையினர், ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும், என்றனர்.</p>
<p> </p>
