தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் ஜூலை 3 மதுரையில் பெருந்திரள் இயக்கம் நடத்த முடிவு

11 Jun 2026, 10:14 pm
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்ட  விழிப்புணர்வு கருத்தரங்கம்   ஜூலை 3 மதுரையில் பெருந்திரள் இயக்கம் நடத்த முடிவு
<p><strong>வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் ஜூலை 3 மதுரையில் பெருந்திரள் இயக்கம் நடத்த முடிவு</strong></p><p>மதுரை, ஜூன். 11- வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) தொடர்பான கலந்து ரையாடல் நிகழ்ச்சி, புதன் கிழமை மதுரை புதூரில் உள்ள நொபிலி அரங்கில் நடை பெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவை யின் மாநிலச் செயலாளரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாள ருமான அருட்தந்தை ஜே. பெனடிக்ட் பர்ணபாஸ் வர வேற்றார். பல் சமய உரையா டல் குழு இயக்குநர் அருட் தந்தை பி.வி. சூசை நிக ழ்ச்சியை அறிமுகப்படுத்தி னார். கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பால் பிரிட்டோ முன்னிலை வகித்தார். மக்கள் கண்காணிப்ப கத்தைச் சேர்ந்த ஹென்றி டிபேன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாவட்டத் தலைவர் கே. அலாவுதீன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில பொதுச் செயலாளர் பி. செந்தில்குமார் நிறைவுரை யாற்றினார். மாவட்டச் செய லாளர் என். கணேசமூர்த்தி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மதுரை மாநகர், புறநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருது நகர் மாவட்ட நிர்வாகிகள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ் தவ அமைப்புகளின் பிரதி நிதிகள், பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர் கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், FCRA சட்டத்தின் தாக்கங்கள் குறித்த பொது மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும் ஜூலை 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை அண்ணாநகரில் பெருந்திரள் கூட்டம் நடத்துவது என இக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.