முந்தய பக்கம்

மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!

3 Apr 2026, 5:30 am
மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!

மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!

கொச்சி, ஏப். 2 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) திருத்தமானது, மதச் சிறுபான்மையினரை மட்டுமல்லாது, சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளையும் குறிவைப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறியுள்ளார்.

எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் வியாழனன்று நடைபெற்ற 'தலைவருடன் சந்திப்பு' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர்களை ஒடுக்குவதற்கே எப்சிஆர்ஏ சட்டத் திருத்தத்தின் நோக்கம்.

முதியோர் இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்தி வரும் தன்னார்வ அமைப்புகளின் ஒட்டுமொத்தச் சொத்துகளையும் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை இச்சட்டம் ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் காங்கிரஸும் யுடிஎப்-ம் தான் மதவாத மற்றும் வகுப்புவாத சக்திகளுடன் பகிரங்கமாகத் தேர்தல் கூட்டணி வைத்துள்ளன. தற்போது வரவிருக்கும் தேர்தலுக்காக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளிப்பதில் காங்கிரஸும் பாஜகவும் போட்டி போட்டு வருகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram