முந்தய பக்கம்

மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!

3 Apr 2026, 5:30 am
மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!

மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!

கொச்சி, ஏப். 2 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) திருத்தமானது, மதச் சிறுபான்மையினரை மட்டுமல்லாது, சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளையும் குறிவைப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறியுள்ளார்.

எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர்களை ஒடுக்குவதே எப்சிஆர்ஏ சட்டத் திருத்தத்தின் நோக்கம். தன்னார்வ அமைப்புகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது.

ஆனால், நாட்டில் வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டிவிடும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத எதிர்ப்பே இடதுசாரிகளின் நிலைப்பாடு. கேரளத்தில் காங்கிரசும் யுடிஎப்-பும் தான் மதவாத சக்திகளுடன் கூட்டணி வைத்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram